402 எறிபொருள்
402 எறிபொருள் . என்பர். இவ்விசை புவியிலிருந்து பொருளின் உயரத் திற்கேற்ப மாறும் தன்மையுள்ளது. எனவே புவியி லிருந்து மிகு உயரம் செல்லாத எறிபொருளைப் பற்றி ஆராய்வதாகக் கொண்டால், எறிபொருளின் எடை மாறாத தன்மையுடையது எனலாம். m நிறையுள்ள ஒரு பொருள், புவியீர்ப்பு விசையினால் கீழ் நோக்கி வரும்போது அதன் முடுக்கம் g என்றால், அப்பொரு ளின் எடை mg ஆகும். எறிபொருளின் இயக்கத்தில் அதன் நிறை m ஒரு மாறிலி என்றும், புவியீர்ப்பு முடுக்கம் g ஒரு மாறிலி என்றும் கொள்ளலாம். எறிபொருளின் இயக்கம் வெற்றிடத்தில் நிகழுவ தாகக் கொண்டால் காற்றின் தடையும் தவிர்க்கப் படுகிறது. மேற்கூறிய இரு கட்டுப்பாடுகளுக்குட்பட்ட எறிபொருளின் இயக்கத்தைப் பற்றி விரிவாகக் காணலாம். ஒரு புள்ளியிலிருந்து கிடை அச்சுக்கு (horizontal axis) & எனும் கோணத்தை ஏற்படுத் தும் நேர்கோட்டில் ஒரு துகள் எறியப்படும் போது, அத்துகள் அந்த நேர்கோட்டிலேயே செல்லுவதில்லை. அப்புள்ளியிலிருந்து புறப்பட்ட வுடன் அதன்மீது புவியீர்ப்பு விசை செயல்படுவதால், அத்துக்கள் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது. இதன் விளைவாக அப்பாதை ஒரு வளைவரையாக (curve) அமைகிறது. அந்த வளைவரை எறிபொருள் பாதை (trajectory) எனப்படும். துகள் எப்புள்ளியிலிருந்து எறியப்படுகிறதோ, அப்புள்ளியை எறிபுள்ளி என்பர். எறிபொருளின் பாதைக்கு எறிபுள்ளியில் வரையப் படும் தொடுகோடுதான் ' கிடை அச்சுடன் கோணத்தை ஏற்படுத்துகிறது. இக்கோணத்தை எறிகோணம் என்பர். எறிபொருளின் இயக்கம் இரு கூறுகளாகப் பிரிக் கப்பட்டு ஆராயப்படுகிறது. அவை கிடைக்கூ உறு நிலைக்குத்துக் கூறு (horizontal and vertical compo- nent) எனப்படும். எறிபொருளின் மீது செயல்படும் ஒரேவிசை நிலைக்குத்துத் திசையில் அமைந்த அதன் எடை ஆகும். இதனால் துகளின் இயக்கத்தின் கிடைக்கூறு எவ்வித மாற்றமும் அடையாது. எனவே எறிபொருளின் வேகத்தில் கிடைக்கூறு அந்த இயக் கம் முழுமைக்கும் ஒரே சீராக இருக்கும். அவ்வமயம் வேகத்தின் நிலைக்குத்துக்கூறு புவியீர்ப்பு விசை செயல்படுவதால் மாறிக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக, 0 என்ற புள்ளியிலிருந்து கிடை அச்சுக்கு a எனும் கோணத்தில், u வேகத்தில் எறியப்படும் ஒரு துகள், t நேரத்தில் p என்னும் புள்ளியை அடைவதாகக் கொள்ளலாம். எறிபுள்ளி யில் திசைவேகத்தின் கிடைக்கூறு u cos மற்றும் நிலைக்குத்துக் கூறு u sina ஆகும். மேற்கூறியபடி I cos &. மாறாதத் தன்மை உடையது. எறிபொரு ளின் இயக்கத்தில் t நேரத்தில் கடந்து சென்ற கிடைத் தொலைவு 00 அகும். 0 p(n.g) mg படம் 2. S எனவே 00= (u cosa) × t இதேபோல் t நேரத்தில் துகளின் உயரம் PQ ஆகும். எனவே, PQ = (u sin a) t gt 2 P- இன் அச்சுத் தொலைவுகளை (x,y) என்றால், ச்சன்பாடுகள் x = (u cos a)t y = (u sin a)t - 4 gt" என மாறும். இவற்றிலிருந்து : ஐ நீக்கினால், g = x tan e 1 gx 2u* cos² x என்ற பாதையின் சமன்பாடு கிடைக்கும். இது ஒரு பரவளையமாகும். எனவே எறிபொருளின் பாதை ஒரு பரவளையமாக அமையும் எனக் காணலாம். எறிபொருளின் மீண்டும் எனலாம். கிடை அச்சைச் சந்திக்கும் புள்ளியை A D, A ஆகிய இரு புள்ளிகளும் ஒரே அச்சில் அமைந்து உள்ளன. D இல் துகளின் பாதைக்கு வரையப்படும் தொடுகோடு & என்ற கோணத்தை ஏற்படுத்தினால், A இல் எறிபொருளின் பாதைக்கு வரையப்படும் தொடுகோடும் & என்ற கோணத்தையே ஏற்படுத்தும். மேலும் துகளின் வேகத்தின் கிடைக்கூறு மாறாத தால், ஒரே கிடை அச்சில் அமைந்துள்ள இவ்விரு புள்ளிகளிலும் எறிபொருளின் வேகமும் சமமாகவே இருக்கும். இதிலிருந்து ஒரு துகள் ஒரு புள்ளி யிலிருந்து எந்தவொரு கோணத்தில் எந்தவொரு வேகத்தில் எறியப்பட்டாலும், அப்புள்ளி வழியே செல்லும் கிடைத்தளத்தை அத்துகள் மீண்டும் அதே