பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 எறிபொருள்‌

404 எறிபொருள் பாதை எறிபொருள் பாதை வீசப்பட்ட ஒரு பொருள் பயணம் செய்யும் பாதை எறிபொருள் பாதை (trajectory) எனப்படும். வானத் தில் சீறிப்பாயும் விண்கற்கள், சூரியனைச் சுற்றி வருகிற கோள்கள், பீரங்கியிலிருந்து வெளிப்பாயும் குண்டுகள், விண்ணில் பறக்கும் ஏவுகணைகள் போன்ற பொருள்களின் பயணப்பாதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். பொதுவாக நிறை யீர்ப்புப் புலத்தில் இயங்கும் ஒரு பொருளின் பயணப் பாதை அதன் இயக்க ஆற்றலைப் பொறுத்து நீள் வட்டம், அதிபரஹப்பர் வளையம் அல்லது பரவளை யம் போன்ற கூம்பு வடிவத்திலேயே அமைகின்றது. தரையிலிருந்து ஏவப்படுகிற ஒரு பீரங்கிக் குண்டு அல்லது ஏவுகணையின் பாதை புவியின் மையத்தை கொண்ட ஒரு குவியமாகக் நீள் வட்டப்பகுதியாக இருக்கும். அவை குறைந்த உயரமே செல்வனவாக இருந்தால், புவியீர்ப்பினால் ஏற்படும் விளைவு மாறிலியாக இருக்குமாதலால், அவற்றின் பாதை யைத் தோராயமாகப் பரவளைய வடிவமுள்ள தாகவே வைத்துக்கொள்ளலாம். எறிமுறை பொறித்தல் - கே.என். இராமச்சந்திரன் உருவாக்கப்பட்ட உலோகப் பகுதிகளும், பாளங்களும், எந்திரங்களால் வடிவமைக்கப்பட்ட பின் சுத்தமான பல வழிமுறைகள், மேற்பரப்பைப் பெறுவதற்குப் நுணு க்கமான உள்ளன. சில சமயம், பிசிறுகளை நீக்கிச் சுத்தம் செய்வதற்கு ஏதுவான அல்லது இலகுவான வடி வத்தை உலோகப் பகுதிகள் பெற்றிருப்பதில்லை. உளிகள் கொண்டோ எந்திரங்களில் பொருத்தியோ வ்வேலையை, அதாவது இறுதிப் பூச்சைச் செய்ய இயலாது. அல்லது அவ்வேலையில், பொருளின் வடிவம் செதுக்கும் உளிகளை பகுதிகளில் கொண்டு செல்வதற்கு இடையூறாகவோ ஏற்ற அமைப்பின்றியோ இருக்கலாம். மேலும் சில சமயங்களில் மிக நுண்ணிய அளவில் சில பகுதி களின் அளவீடுகளைக் குறைக்க நேரிடலாம். இவ் வாறான சமயங்களில் உலோகப் பகுதிகள் வசதிக் கேற்றவாறு ஒரு கூட்டுள் தொங்கவிடப்பட்டு அவற் றின் மேற்பரப்புகளில் மிகச் சிறிய எஃகு பந்துகள் அல்லது குண்டுகள் விசையுடன் எறியப்படும். இவ் வாறு மோதும் சிறு குண்டுகள் வெட்டுளிபோல் இயங்கும். இவ்வாறு எறியப்படும் குண்டுகளின் தாக் குதல் வேலைப் பகுதிகளை நெகிழ்வுடன் உருமாறச் செய்கிறது. இதனால் மிக நுண்ணிய அளவில், 10-1 அங்குல அளவில் உலோகப்பரப்புகள் தூய்மை செய்யப்படுகின்றன. இம்முறையில் எஞ்சிய அழுத்தத் தகைவுகள் (residual compression stress) ஏற்பட்டு, தளர்ச்சி முறிவுகளுக்கு ஏற்றவாறு எதிர்ப்புத் தன்மை பெற்று, உலோகம் மேம்படுத்தப்படுகிறது. வெப்பப் படுத்தப்படா நிலையில் உலோகப் பகுதிகள் உரு வாக்கப்படுவதால் மேற்பரப்பில் திண்மை அல்லது கடினத்தன்மை அதிகரிக்கிறது. ஊதுலை மூலம் அழுத்தப்பட்ட காற்று, மையவிலக்கு விசையினால் மிகுதிசைவேகத்தில் குண்டுகளை எறிகிறது. இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் தாக்கும் குண்டுகளே உளி களாகப் பயன்பட்டு உலோகப் பகுதி இறுதி வடிவம் பெற இயக்கத்தைச் சீராக நடத்துகின்றன. -கே.ஆர்.கோவிந்தன் எறும்பு அதிக நிலவாழ் விலங்குகளிலேயே எறும்புகளே எண்ணிக்கையில் காணப்படுகின்றன. எறும்புகளில் ஏறக்குறையப் பத்தாயிரம் சிறப்பினங்கள் உள்ளன. எறும்புகளின் புதைபடிவங்கள் இன்றைக்கு ஏறக் குறைய நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரெட்டேசிய காலப் படிவுகளில் காணப்படுகின்றன. புற அமைப்பு. எறும்புகளின் உடல் நீளம் 1. மி.மீ. 4 செ.மீ வரை வேறுபடுகிறது. இவற்றின் நிறம் மஞ்சள் பழுப்பு, சிவப்பு,கறுப்பு என இனத்துக்கேற்ப வேறு படுகிறது. உடல் மென்மையாகவோ, நுண் மயிர் களுடனோ, நுண்முள்களுடனோ, முடிச்சுப் போன்ற அமைப்புக்களுடனோ காணப்படும். தலை, மார்பு, மூன்று பகுதிகளாக உடல் பிரிக்கப் வயிறு என . பட்டுள்ளது. தலை பெரியது, எளிதில் அசையக் கூடியது. முன்முனையில் உள்ள ஓர் இணை உணர்கொம்புகள் (antennae) ஆண் எறும்புகளில் நேராகவும் பெண் எறும்புகளில் வளைந்தும் காணப்படுகின்றன. தலை யில் ஓர் இணைக் கூட்டுக் கண்களும் (compound eyes) மூன்று புள்ளிக் கண்களும் (occil) அமைந்துள்ளன. தொழிலாளி எறும்புகளில் புள்ளிக் கண்கள் இல்லை. மெல்லும் வகை வாயுறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந் துள்ளன. பொதுவாக வெட்டுத்தாடைகள் நன்கு வளர்ச்சியடைந்தும் கீழுதடு குறைவுற்றும் காணப் படுகின்றன. மார்புப் பகுதியுடன் முதல் வயிற்றுக் கண்டம் ணைந்துள்ளது. நன்கு வளர்ச்சியடைந்த மூன்று ணைக்கால்கள் மார்புப் பகுதியுடன் இணைந் துள்ளன. கால்களின் டிபியப் பகுதியுடன் ணைந் துள்ள குறுமுள்கள் (purs) உணர்கொம்புகளைத் தூய்மைப்படுத்துவதற்குப் பயன்படுகின்றன. ஐந்து கணுக்களையுடைய டார்சஸ் கிடுக்கி முனையுடையது. மார்புப் பகுதியில் இரண்டு இணை மெல்லிய இறக்கை கள் உள்ளன. முன் இறக்கைகள் பின் இறக்கைகளை