பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறும்பு 405

எறும்பு 405 விடப் பெரியவை. எறும்புச் சமுதாயத்தின் சில பிரிவுகளைச் சேர்ந்த எறும்புகளில் மட்டுமே இறக்கைகள் காணப்படுகின்றன. எறும்புகள் பறக்காத போது அவை முதுகின்மேல் படிவாக மடித்த நிலை யில் வைக்கப்படுகின்றன. வயிற்றுப் பகுதி, பெடிசல் அல்லது பீட்டியோல் எனப்படும் முன் பகுதியையும் கேஸ்ட்டர் என்னும் பின் பகுதியையும் உடையது. வைக் இருப்பிடம். எறும்புகளுள் சில இனங்கள் கூடு கட்டுவதில்லை. இவை கற்கள், மரத்துண்டுகள், இலைகள் சருகுகளுக்கடிப்புறம் இவற்றில் வாழ் கின்றன. பெரும்பாலான எறும்புகள் ஃபார்மிக் கேரியம் என்னும் தரையடிப் புற்றுகளை அமைத்து வாழ்கின்றன. இந்தத் தரையடிப் புற்று ஏறக்குறைய 1.5 மீட்டர் நீளமுடையது. இதற்குச் சில நுழை வாயில்களும் பல அறைகளும் உள்ளன. அறைகளுக் கிடையே இடைவழிகள் உள்ளன. நுழைவாயில் களைச் சுற்றி மண் குவியல்கள், இலைகள். கோல் ஆகியவற்றைக் காணலாம் அறைகள் தானியக் கிடங்குகளாகவும் இளம் எறும்புகளின் வளர்ப் பிடமாகவும் அரசி எறும்பின் இருப்பிடமாகவும் பயன் படுகின்றன. ஒரு தரையடிப் புற்றில் சில ஆயிரம் எறும்புகள் முதல் ஐம்பதாயிரம் எறும்புகள் வரை வாழ்கின்றன. சில வகை எறும்புகள் உயிருள்ள தாவரங்களை வெட்டியும் தாவரச் சருகுகளைக் கொண்டும் கூடுகளை அமைக்கின்றன. இவ்வாறான கூடுகள் மரப்பொந்துகளிலும் கிளைகளின் கவை களிலும் இலைக் கூட்டத்திற்கிடையிலும் அமைக்கப் படுகின்றன ; அல்லது இவை மரத்திலிருந்து தொங்க விடப்படுகின்றன. இந்தத் தொங்கும் கூடுகள் சேறு, நூலிழைகள், உமிழ்நீர், தாவரப் பகுதிகள் ஆகிய வற்றைக் கொண்டு செய்யப்படுகின்றன. சில எறும்பு கள் இலைகளைச் சுருட்டி அவற்றின் மருங்குகளைப் புழுப் பருவத்திலுள்ள எறும்புகள் சுரக்கும் நூலிழை களைக் கொண்டு ஒட்டி அவற்றில் வாழ்கின்றன. சமுதாய வாழ்க்கை. அனைத்து வகை எறும்பு களும்,கூடி வாழும் சமுதாய வாழ்வை மேற்கொண் டவை. ஒரு குடியிருப்பு அல்லது கூட்டிருப்பில் வாழும் எறும்புகளின் எண்ணிக்கை சில இனங்களில் குறை வாகவும் சிலவற்றில் ஏறக்குறைய ஒரு கோடி வரை யிலும் இருக்கும். எறும்புச் சமுதாயத்தில் புறத் தோற்றத்தில் வேறுபடும் 12 வகைகளுக்கு மேல் கண் டறியப்பட்டுள்ளன. இவை நான்கு முக்கிய பிரிவுகள் அல்லது இனங்களாகப் பரிக்கப்பட்டுள்ளன. அவை அரசி எறும்புகள், அரச ஆண் எறும்புகள், தொழி லாளி எறும்புகள். போராளி எறும்புகள் எனப்படும். அரசி எறும்புகள் மற்ற எறும்புகளைவிட உருவில் பெரியவை. இவற்றில் இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன; இரண்டு இணை இறக்கைகள் உள்ளன. இனச்சேர்க்கைக்குப் பின்னர் 1. 2 எறும்புப் பிரிவுகள் + D D 5 ஆண் எறும்பு 2. அரசி எறும்பு 3. தொழிலாளி எறும்பு 4. போராளி எறும்பு ரிப்ளீட்டு 5. குடியிருப்பிலுள்ள இறக்கைகள் உதிர்ந்து விடும். எறும்புகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக முட்டையிடுவதே அரசி எறும்புகளின் வேலை. இவை 15-30 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஒரு குடியிருப் பில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசி எறும்புகள் காணப் படலாம். அரசி எறும்புகளில் பெரிய அரசி எறும்பு கள் சிறிய அரசி எறும்புகள் என இரண்டு வகை உண்டு. அரச ஆண் எறும்புகள் இனப்பெருக்க ஆற்ற லுடையவை. இவற்றிலும் நன்கு வளர்ச்சியடைந்த இனப்பெருக்க உறுப்புகள் காணப்படுகின்றன. இவை அரசி எறும்புகளையும் போராளி எறும்புகளையும் விடச் சிறியவை. ஆனால் தொழிலாளி எறும்புகளை விடப் பெரியவை. இவற்றில் இரண்டு இறக்கைகளும் குறைவுற்ற வெட்டுத்தாடைகளும் உள்ளன. இவற்றிலும் பெரிய ஆண் எறும்பு, சிறிய ஆண் எறும்பு என இரண்டு வகை உண்டு. ண தொழிலாளி எறும்புகள் இனப்பெருக்கத் திற னற்ற பெண் எறும்புகளாகும். இவை மற்ற அனைத்து வகை எறும்புகளையும் விட உருவில் சிறியவை. இவற் றுக்கு இறக்கைகள் இல்லை. இவற்றின் வெட்டுத் தாடைகள் குறைவுற்றும் கண்கள் சிறுத்தும் காணப். படுகின்றன. தொழிலாளி எறும்புகள் கூடுகளைக்