406 எறும்பு
406 எறும்பு கட்டுதல், பழுது பார்த்தல், உணவைத் திரட்டிச் சேமித்தல், அரசி எறும்புகளுக்கும் இளவுயிரிகளுக்கும் உணவு கொடுத்தல் ஆகிய பணிகளைச் செய்கின்றன. பொதுவாக, தொழிலாளி எறும்புகளில் சிறிய தொழி லாளி எறும்புகள் பெரிய தொழிலாளி எறும்புகள் என இரண்டு வகை காணப்படும். சில இனங்களில் பல வகையான தொழிலாளி எறும்புகள் உள்ளன. வ போராளி எறும்புகள் சற்றே மாற்றமடைந்த தொழிலாளி எறும்புகளேயாகும். இவை அரசி எறும்பு களை விடச் சற்றுச் சிறிய உருவமுடையவை. வற் பெரிய தலை றுக்கு இறக்கைகள் கிடையா. இவை யும், பெரிய விதை, கனி இவற்றை உடைக்க வல்ல உறுதியான வெட்டுத் தாடைகளும் உடையவை. இவை குடியிருப்பை எதிரிகளிடமிருந்து காக்கின்றன. இனப்பெருக்கப் பறத்தல். ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் பொதுவாக மழைக்காலங்களில் முழு வளர்ச்சியடைந்த இறக்கையுள்ள அரசி எறும்புகளும் ஆண் எறும்புகளும் கூட்டை விட்டு வெளியேறிப் பறக்கத் தொடங்குகின்றன. இது இனப் பெருக்கப் பறத்தல் எனப்படுகிறது. பொதுவாக வெவ்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த எறும்புகள் ஒரே நேரத் தில் பறப்பதால் இவற்றுக்கிடையில் கலப்பு இனப்பெருக்கம் நடைபெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. பறந்துகொண்டிருக்கும்போதே இனச்சேர்க்கை நடை பெறுகிறது. பின்னர் ஆண் எறும்புகள் இறந்து விடுகின்றன. அரசி எறும்புகள் தங்கள் சொந்தக் குடியிருப்பை நாடிச் செல்கின்றன அல்லது புதிய இடங்களை நாடிச் சென்று புதிய குடியிருப்புகளை உருவாக்குகின்றன. இனப்பெருக்கப்பறத்தலின்போது ஓ ணான், தேரை பறவை, போன்றவை பெரும் பாலான எறும்புகளைப் பிடித்து உண்ணுகின்றன. புதிய குடியிருப்பு உருவாக்கப்படுதல். இனச் சேர்க்கை முடிந்து தரையில் இறங்கும் அரசி எறும்பு தனியாகவோ மேலும் சில அரசி எறும்புகளுடன் சேர்ந்தோ புதிய குடியிருப்பை உருவாக்கும் முயற்சி யில் ஈடுபடுகிறது. அரசி எறும்பு அதன் இறக்கைகளை உதிர்த்துவிட்டுத் தகுந்த இடத்தைத் தேடித் தரையில் வளை தோண்டுகிறது. இந்த வளையின் முடிவில் உட்புறமாக ஓர் அறை உள்ளது. பிறகு அரசி எறும்பு வளையின் நுழைவாயிலை அடைத்துவிட்டு ஓய் வெடுத்துக்கொள்கிறது. அப்போது அதன் பறக்குந் தசைகள் சிதைந்து கொழுப்புத் திரள்களாக மாற்ற மடைகின்றன. பிறகு அரசி எறும்பு முட்டை யிடுகிறது. முட்டைகள் பொரிந்து இளவுயிரிகள் (larvae) வெளிவருகின்றன. இந்த இளவுயிரிகளுக்கு அரசி, தன் உமிழ்நீரையும் கொழுப்புத் திரள்களையும் உணவாகத் தருவதால் அவை விரைவாக வளர்ச்சி யடைகின்றன. உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது அரசி தன் முட்டைகளையே கொள்வதுண்டு. பொதுவாக அரசி எறும்பு ஒரு உணவாகக் இளவுயிரிக்கு முன்னுரிமையளித்து அதிக உணவைக் கொடுத்து அதை வெகுவேகமாக வளரச் செய்து தனது உதவியாளாகச் செயல்பட வைக்கிறது. இனச்சேர்க்கை கோடைக்காலத்தின் பிற்பகுதி யில் நடைபெறுமானால் இளவுயிரிகள் இளம் பருவத்திலிருக்கும்போது குளிர்காலம் தொடங்கி விடுவதால் அரசியும் இளவுயிரிகளும் ஏற்ற காலம் வரும்வரை கால குளிர் உறக்கம் (hibernation) மேற்கொள்கின்றன. எறும்பு இனங்களில் இளவுயிரிகள் தம்மைச் சுற்றி ஒரு புழுக் கூட்டை உருவாக்கிக் கொண்டு கூட்டுப்புழுக்களாக மாற்ற மடைகின்றன. சில் வை முழுவளர்ச்சியடைந்த பின்னர் தாய் எறும்பு அவற்றைப் புழுக் கூட்டிலிருந்து விடுவிக்கிறது. இவை வளர்ந்து தொழிலாளி எறும்பு களாகப் பணிபுரியத் தொடங்குகின்றன. சில இனங் களில் கூட்டுப் புழுக்களைச் சுற்றிப் புழுக்கூடுகள் உருவாக்கப்படுவதில்லை. முதல் தலைமுறைத் தொழிலாளி எறும்புகள் தரையின் மேற்பரப்புக்கு வந்து உணவைத் தேடிச் சேகரித்து அரசிக்கு அளிக்கின்றன. இவை, தாம் உண்ட உணவை உமிழ்ந்து அரசிக்கு ஊட்டுகின்றன. அரசி எறும்பு மீண்டும் முட்டையிட்டுப் பல புதிய தலைமுறைகளை உருவாக்குகிறது. தொழிலாளி எறும்புகள் இளம் எறும்புகளுக்கு உணவளித்துப் பேணிக் காக்கின்றன. நாள் செல்லச் செல்லத் தொழிலாளி எறும்புகளின் பெருகு குடியிருப்பு எண்ணிக்கை உருவாகிய சில் காலத் கிறது. தில் போராளி எறும்புகள் தோன்றுகின்றன. இறுதியாகப் புதிய அரசி எறும்புகள் தோன்று கின்றன. பொதுவாக தொழிலாளி எறும்புகள் மலடாக இருந்தாலும் ஏதாவதொரு தொழிலாளி எறும்பு எப்போதாவது முட்டையிட்டு அரச ஆண் எறும்பையோ தொழிலாளி எறும்பையோ தோற்று விப்பதுண்டு. தொழிலாளி எறும்புகள் அவ்வப்போது குடியிருப்பைத் தகுந்த இடங்களுக்கு மாற்றியமைத்து அரசி எறும்பையும் இளம் எறும்புகளையும் இளவுயிரி களையும் புதிய இடத்திற்குக் கொண்டு செல்கின்றன. பொதுவாக, தனியாகப் புதிய குடியிருப்பை உருவாக்குவதில் ஈடுபடும் அரசி எறும்பு பல இடை யூறுகளுக்கு ஆளாகிறது. குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவும் பகுதிகளில் இனச்சேர்க்கை முடிந்த பின்னர் அரசி எறும்பு அது பிறந்த குடியிருப்புக்கே திரும்பி வந்து இனப்பெருக்கம் செய்து குடியிருப்பின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.. சில இனங்களில் அரசி எறும்பு அதே இனத்தைச் சேர்ந்த புதிய குடியிருப்பை நாடிச் செல்கிறது. புதிய குடியிருப் பிலுள்ள தொழிலாளி எறும்புகள் புதிய அரசியின் சேய்களுக்கும் ஏற்கனவே உள்ள அரசியின் சேய் களுக்கும் பணிவிடை செய்கின்றன. எடுத்துக்காட் டாக ஐரோப்பாவில் காணப்படும் இரண்டு வகை