எறும்பு 407
எறும்புகள் ஒன்று சேர்ந்து கலப்புக் குடியிருப்பை உருவாக்குகின்றன. போத்ரியோமிர்மெக்ஸ் டிக்கேப் பிட்டன்ஸ் (Bothriomyrmex decapitans) என்னும் இனத்தைச் சேர்ந்த அரசி எறும்பு டார்பினோமா நைஜெரிமம் (Torpinoma nigerimum) என்னும் எறும்பின் குடியிருப்புக்குள் புகுந்து அங்கு ஏற்கனவே வாழும் அரசியின் தலையைத் துண்டித்துக் கொன்று விடுகிறது. பின்பு தொழிலாளி எறும்புகள் புதிய அரசியின் சேய்களைப் பேணுகின்றன. சில களில் புதிதாக வரும் அரசி எறும்பின் தூண்டுதலால் தொழிலாளி எறும்புகள் ஏற்கனவே வாழும் அரசி எறும்பைப் புறக்கணித்து ஓதுக்கிவிடுகின்றன. னங் எறும்புகளின் நடத்தை. இளைய தொழிலாளி எறும்புகள் மூத்த தொழிலாளி எறும்புகளிடம் பயிற்சி பெற்றுப் பணிபுரியத் தொடங்குகின்றன. முதலில் இவை குடியிருப்பின் சுற்றுப்புறத்தை அறிந்து கொள்கின்றன. இடையில் வழிதவறிவிட்டால் பட்டறிவு மிக்க எறும்புகள் அவற்றைக் குடியிருப்புக்கு இளம் அழைத்து வந்து சேர்க்கின்றன. சில எறும்புகள் வேலைகளை விரைவில் கற்றுக்கொண்டு குடியிருப்பின் முக்கிய பணிகளைச் செய்கின்றன. இவற்றைக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிவிட்டால் குடியிருப்பே செயலிழந்து விடுகிறது. எறும்புகளின் இயக்கம் அவற்றின் மரபு வழி வந்த உள்ளுணர்வால் தூண்டப்படுகிறது உயிரியலறிஞர்கள் கருதுகின்றனர். என அவை மற்ற எறும்புகளின் தூண்டுதலுக்கேற்பவும் செயல்படு கின்றன. எறும்புகளால் சுரக்கப்படும் ஃபெரோ மோன்கள் எனப்படும் புற ஹார்மோன்கள் தல்களாகச் செயல்படுகின்றன. தூண்டு எறும்புகளின் உணர்கொம்புகளில் சிறு மோப்ப உறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் உதவியால் எறும்புகள் மற்ற எறும்புகள் வெளியிட்ட சுரப்பு களை முகர்ந்து செயல்படுகின்றன. இந்த வகையில் அவை தம் சொந்தக் குடியிருப்பைச் சேர்ந்த வற்றையும், பிற குடியிருப்பைச் சேர்ந்தவற்றை யும் வேறுபடுத்தி அறிந்து கொள்கின்றன. சில இனங்களில் உணவு கிடைக்குமிடத்தை அறிந்து கொண்ட எறும்புகள் அந்தச் செய்தியை இத்தகைய சுரப்புகளின் மூலம் மற்ற எறும்புகளுக்குத் தெரியப் படுத்துகின்றன. வெவ்வேறு வகையான சுரப்புகளை வெவ்வேறு அளவுகளில் சுரப்பதன் மூலம் எறும்புகள் மற்ற எறும்புகளுக்கிடையே எச்சரிக்கை, போராடு தல், இனப்பெருக்கம், கூடு அமைத்தல் ஆகிய நட வடிக்கைகளைத் தூண்டிவிட முடியும்.எதிரிகளை விரட்டுவதற்காகச் சில எறும்புகள் நச்சுத் தன்மை யுள்ள நீர்மத்தைச் சுரக்கின்றன. அரசி எறும்பினால் சுரக்கப்படும் நீர்மங்கள் தொழிலாளி எறும்புகள் இனப்பெருக்கத் திறனுடைய பெண் எறும்புகளாக வளர்வதைத் தடைசெய்கின்றன. எறும்பு 407 சில வகை எறும்புகள் ஒலி உண்டாக்குவதன் மூலம் அதே இனத்தைச் சேர்ந்த ஏனைய எறும்பு களுடன் தொடர்பு கொள்கின்றன. மிர்மிக்கா ரூப்ரா (Myrmica rubra) என்னும் எறும்பு அதன் ஏழாம் வயிற்றுக் கண்டத்திலுள்ள சிறப்பு உறுப்பு மூலம் ஒலியுண்டாக்குகிறது. சில எறும்புகள் தங்கள் தலையால் இலைகளைத் தட்டியும் மற்றும் சில எறும்பு வகைகள் தங்கள் வயிற்றுப் பகுதியால் கூட்டிலுள்ள காய்ந்த சருகுகளைத் தட்டி ஓசைப் படுத்தியும் தகவல் தொடர்பு கொள்கின்றன. 1 அறுவடை எறும்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவமே அவற்றின் உணவூட்டப் பழக்கத்தில் தான் அடங்கியிருக்கிறது. பட்டறிவு மிக்க, முதிர்ச்சி யடைந்த தொழிலாளி எறும்புகள் உணவைத் திரட்டி வந்து கூட்டில் தங்கியுள்ள இளைய தொழிலாளி களிடம் தர. அவை உணவை இளவுயிரிகளுக்கும் மற்ற எறும்புகளுக்கும் கொடுக்கின்றன. பெரும் பாலான எறும்புகள் தாவர உண்ணிகள். எறும்புகள் தாவர விதைகளை உணவாகக் கொள் கின்றன. தோட்டக்கார எறும்புகள் அவற்றின் இருப்பிடத்திலேயே பூசணத் தோட்டங்களை அமைத்து அங்கு வளரும் பூசணங்களை உண்ணு கின்றன. சில எறும்புகள் தேன், தாவரச்சாறு ஆகிய வற்றை உணவாகக் கொள்கின்றன. சில எறும்புகள் உயிருள்ள அல்லது இறந்த விலங்குகளை உண்ணு கின்றன. ட்ரோஃபலாக்சிஸ் எனப்படும் உணவுப் பரிமாற்ற முறையில் எறும்புகள் அசுவுணிகள், மெம்பிரேசிடுகள் சில்லிடுகள், அலேரோடிடுகள் போன்ற பூச்சிகளுடன் தொடர்பு கொள்கின்றன. சில எறும்பு இனங்கள் இத்தகைய பூச்சிகளைத் தங்கள் இருப்பிடத்திலேயே தங்க வைக்கின்றன. அசுவுணிகள் அவற்றுக்கு வேண்டிய உணவைப் பெறுவதற்காக எறும்புகள் அவற்றை வெவ்வேறு தாவரங்களுக்குச் சுமந்து செல்கின்றன. தாவரங்களின் வேர்ப்பகுதிகளைத் துளைத்து, தாவரச் சாற்றை உறிஞ்சும் அசுவுணி களுக்காகச் சில எறும்புகள் தரையைத் தோண்டி வழிகளை அமைத்துக் கொடுக்கின்றன. இத்தகைய செயல்களுக்கு ஈடாக எறும்புகள் அசுவுணிகள் உடலி லிருந்து வெளிப்படும் தேன்பனியை (honey dew) உட்கொள்கின்றன. சிற்றுண்ணிகள், கம்பளிப்பூச்சிகள் வண்டுகள், கரப்பான் பூச்சிகள், ஈக்கள் போன்ற பூச்சிகள் மட்டுமல்லாமல் சிலந்திகள் போன்ற அராக்னிடுகளும் எறும்புப் புற்றுகளில் தங்கி அவற்றின் உணவையும் கழிவுப் பொருள்களையும் உட்கொள் கின்றன. 4 மேலும் சில பூச்சிகள் எறும்புப் புற்றுகளில் விருந்தினர்களாகத் தங்குகின்றன. மெர்மிஸ் என்னும் உருளைப் புழு எறும்புகளில் அக ஒட்டுண்ணியாக (endoparasite) வாழ்கிறது.