எறும்புண்ணி 409
ஆப்பிரிக்காவில் காணப்படும் அனோமா, டோரிலஸ், ஆகிய பொதுவினங்களைச் சேர்ந்த எறும்புகளும் குறிப்பிடத்தக்கவை. ஆயிரக்கணக்கான இராணுவ எறும்புகள் படையெடுத்துச் செல்லும்போது வழியில் எதிர்ப்படுவனவற்றையெல்லாம் பாழாக்கி விடுகின் றன. இவற்றைக் காணும் உயிரினங்கள் விரைந்து விலகி இவற்றுக்கு வழி விடுகின்றன. வழியில் குறுக் கிடும் உயிரினங்களை இந்த எறும்புகள் தங்கள் உறுதியான வெட்டுத் தாடைகளால் கடித்துக் குதறி விடுகின்றன. கள் வலி ஆஸ்திரேலியாவில் 100 வகை வேட்டை எறும்பு காணப்படுகின்றன. இவை 20 மி.மீ. வரை வளரக் கூடியவை. இவற்றின் கொடுக்கினால் உண்டாக்கும் காயங்களை உண்டாக்குகின்றன. வளர்ச்சியடைந்த எறும்புகள் பெரும்பாலும் தாவரக் சாற்றையே உட்கொண்டாலும் இவை சிலந்திகளை யும் பூச்சிகளையும் கொன்று இளவுயிரிகளுக்கு -ஜெயக்கொடி கௌதமன் உணவாக்குகின்றன. எறும்புண்ணி பாலூட்டிகள் வகுப்பில், பற்களற்றவை வரிசையில் எறும்புக்கரடி, ஆர்மடில்லோ, ஸ்லாத் ஆகிய தென் அமெரிக்க விலங்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வரிசையில் எறும்புண்ணிகளடங்கிய மிர்மிக்கோ ஃபேகிடே, ஆர்மடில்லோக்களடங்கிய டேசிப்போ டிடே, ஸ்லாத்துக்களடங்கிய பிராடிப் போடிடே ஆகிய மூன்று குடும்பங்கள் உள்ளன. இம்மூன்று குடும்பங்களும் டெர்ஷியரி காலத்தில் பெருகி வாழ்ந்த செனார்த்ரா என்ற பிரிவைச் சேர்ந்தவை. செனார்த்ரா என்ற சொல்லுக்கு 'இயல்பு மீறிய உள் ளெலும்பு இணைப்புகள்' என்று பொருள். 0. 5 F தென் அமெரிக்காவில் காணப்படும் எறும்புண்ணி கள் நிலத்தில் அல்லது மரங்களில் வாழ்கின்றன. இவை 16 -120 செ.மீ. வரை உடல் நீளமும், 35கி கி. வரை எடையும் கொண்டவை. வால் நீளம் 15-50 செ.மீ வரை வேறுபடுகிறது. உருண்டை யான தலையும் நீண்ட கால்களும் கொண்டவை. காதுகள் குட்டையானவை, வட்ட வடிவமானவை. நீண்ட முகவாயின் முனையில் சிறிய வாய் அமைந் துள்ளது. பற்களற்ற தாடைகளும் மிக நீண்ட நாக்கும் இருக்கின்றன. இவற்றின் மூதாதைகளில் பற்கள் இருந்தன. கறையான் புற்றுகளையும் எறும்புப்புற்று களையும் அழித்து அவற்றை உண்பதற்கேற்ற வகை யில் விரல் நகங்கள் மிக உறுதியாக உள்ளன. உடலி லுள்ள மயிர்கள் மிகத் தடித்தும் குட்டையாகவும் உள்ளன சில எறும்புண்ணி 409 னங்களில் வாலில் மயிர் மிக அடர்த்தியாக காணப்படுகிறது. விரலிலுள்ள கூர்நகங்கள் தற்காப்பு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எதிரிகள் தாக்கும்போது பின்கால்களைத் தரையில் ஊன்றி நிமிர்ந்து உட்கார்ந்து முன்கால்களை விரைவாக வீசி அறைந்து வலிவாகத் தாக்குகின்றன. எறும்புண்ணி கள் சிறப்பான மோப்பத் திறனும் கேட்கும் திறனும் பெற்றுள்ளன. மிர்மிக்கோஃபேகிடே குடும்பத்தில் மூன்று பொதுவினங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பொதுவினத்திலும் ஒரு சிறப்பினம் உள்ளது. பேரெறும்புண்ணி வட அர்ஜென்டைனாவில் பரவலாகக் காணப்படுகிறது. இது முற்றிலும் தரை யில் வாழும் இயல்புடையது. இதன் உடலின் நீளம் 100-300 செ.மீ., வாலின் நீளம் 65-90 செ.மீ. எடை 30-35 கி.கி. பெண் விலங்கைவிட ஆண் உருவில் சற்றுப் பெரியது. உடலில் குறிப்பாக வாலில் அடர்த்தியான மயிர் காணப்படுகிறது. வாலிலுள்ள மயிரின் தொடர்ச்சி முதுகில் அடர்த்தியான வரிசை களாக அமைந்துள்ளது. வாலில் மயிர்களுக்கடியில் செதில்கள் உள்ளன. வைக்கோல் போன்ற மயிர் உட ல் மீ து காணப்படுகிறது. கழுத்து முன்பக்கம் நீண்டு உருளை போன்ற தலையாக உருப்பெற் றுள்ளது. நீண்ட முகவாயின் நுனியில் சிறிய வாய் பேரெறும்புண்ணி உள்ளது. தலைப்பகுதியிலுள்ள சிறு கண்களும் காது களும் தெளிவாகத் தெரிவதில்லை. பற்களில்லை. பின்கால்களைவிட முன் கால்கள் வலிவானவை.