எறும்புத் தாவரம் 411
. கொடுக்கப்படும் உணவு அதற்கு ஒத்துக்கொள்ளும் நிலையில் அது வளர்ப்பவருடன் எளிதில் பழகி விடும். இருவிரல் எறும்புதின்னி அல்லது மென்மயிர் எறும்புதின்னி. இருவிரல் எறும்புதின்னி மத்திய அமெரிக்காவிலிருந்து பொலிவியா வரையிலுள்ள காடுகளிலும், மத்திய பிரேசில் பகுதியிலும் பரவி யுள்ளது. இது மரங்களில் வாழும் தன்மையுடையது. இதன் உடல் நீளம் 16-20 செ.மீ., வால் நீளம் 18-20 செ.மீ. எடை 500 கிராம். இதன் குட்டை யான மென்மையான மயிர் செம்பழுப்பு அல்லது பொன்மஞ்சள் நிறமானது. வால் தசைப்பற்றுள்ளது; நுனியில் மயிரற்றது; கண்களும் காதுகளும் சிறியவை. ஓரளவு நீளமான கீழ்நோக்கி வளைந்த முகவாய் உடையது. வாய் மற்ற எறும்புதின்னிகளின் வாயை விடச் சற்றுப் பெரியது. கால்கள் மிக்க வலுவானவை. இரண்டாம். மூன்றாம் முன்னங்கால்கள் விரல் கள் இணைந்துள்ளன. மூன்றாம் விரலின் கூர் நகம் சற்று நீளமானது. முதலாம், நான்காம், ஐந் தாம் விரல்கள் நன்கு வளர்ச்சியடையவில்லை. பகல் நேரத்தில் மரக்கிளைகளிலோ மரப்பொந்துகளிலோ சுருண்டு படுத்துத் தூங்கும். மற்ற எறும்பு களைப் போலவே முன்கால்களைத் தற்காப்புக்கும், எறும்புப் புற்றுகளைச் சிதைப்பதற்கும் பயன்படுத்து தின்னி மரக் முன் கிறது. பின் கால்களாலும், வாலினாலும் கிளைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு, கால்களால் மரக்கிளைகளில் முன்னேறிச் செல்கிறது. இவற்றிற்குப் பால் காம்புகள் இருப்பதில்லை. ஓர் ஈற்றில் ஒரு குட்டிதான் பிறக்கிறது. தாயும் தந்தை யும் ஓரளவு செரித்த பூச்சிகளை இரைப்பையிலிருந்து எறும்புத் தாவரம் 4/1 மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து குட்டிக்கு ஊட்டு கின்றன. இவற்றை காட்சியகங்களில் விலங்குக் வளர்ப்பது கடினம். விலங்குக் காட்சியகங்களில் ஏறக் குறைய இரண்டரை ஆண்டுகள் வாழ்ந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. எறும்புத் தாவரம் ஜெயக்கொடி கௌதமன் இவ்வினத் தாவரங்களில் ஒன்றான சிக்ரோபியா பெல்ட்டேடா (Cecropia Peltata) அமெரிக்காவின் இரு விரல் எறும்புண்ணி 1. வேலமுள் உறைவிடம் 2. சிற்றிலை வளர் மொட்டுகள்