பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 எறும்புத்‌ தாவரம்‌

412 எறும்புத் தாவரம் வெப்பமண்டலப் பகுதிகளில் காணக்கூடிய மரமாகும். மோரேசி குடும்பத்தைச் சேர்ந்த இது 50 அடி உயரம் வளரும். மிக விரைவாக வளரக்கூடிய, இதன் எடை குறைவான மரக்கட்டைகளை மிதவை செய்யப் பயன்படுத்துகின்றனர். மேலும் யுயேபி (uaupe) இந்தியர்கள் இதன் உள்ளீடற்ற தண்டுகளை இசைக் கருவிகள் செய்யப் பயன்படுத்துவதால் இது ஊது குழல் மரம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. தண்டு, கிளை ஆகியவற்றின் வெற்றிடங்களில் எறும்புகள் வாழ்வதுடன் இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் காணப்படும் சதைப்பற்றுள்ள வளரி களை உணவாகக் கொள்கின்றன. மரத்தைத் தாக்கி. லைகளைத் தின்னும் எறும்பு வகைகளையும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளையும் இந்த எறும்பு கள் விரட்டி அடிக்கின்றன. மரம் தந்த உணவு: வாழ்விடம் ஆகியவற்றிற்குக் கைம்மாறாக இலை உண்ணும் பூச்சிகளிடமிருந்து மரத்தை இவை காக் கின்றன எனக்கூறலாம். ஒன்றுக்கொன்று உதவியாக அமையும் இவற்றின் கூட்டு உயிர் வாழ்க்கை எறும்பு- தாவரக் கூட்டு உயிர் வாழ்க்கைக்கு (myrmecophily) எடுத்துக்காட்டாகும். இந்தியாவில் காணப்படும் ஒடை மரங்களையும் எறும்புத் தாவரங்கள் எனலாம். இம்மரத்தின் நீண்ட முள்கள் எறும்புகளால் துளைக்கப்பட்டு வெற்றிடமாக இருக்கும். வெற்றிடங்களில் முட்டைகள் இடப்பட்டு இளவுயிரிகள் பொறிக்கப்படுகின்றன. இளவுயிரி களுக்கு இம்மரத்தின் கூட்டுச் சிற்றிலைகளின் நுனியில் வளரும் சிறு மொட்டுகள் உணவாக அளிக்கப் படுகின்றன. இம்மரங்களை நாடிவரும் அழிவு தரும் பூச்சிகள் கடிக்கப்பட்டும், கொட்டப்பட்டும் விரட்டி அடிக்கப்படுகின்றன. அத்துடன் படரும் கொடிகளும் தாக்கப்பட்டுப் படராதவாறு தடுக்கப்படுகின்றன. வேலமரத்திற்கு அழிவை உண்டாக்கும் பூச்சிகளிடம் இருந்து காத்துக்கொள்ள அதன் திசுவில் தக்க வேதிப்பொருள்கள் இல்லை என்பதும் அதன் வளர்ச் சிக்கு நிழல் படாத முழுச்சூரிய ஒளி தேவை என்பதும் குறிப்பிடத்தக்கவை. வெப்பமண்டலப் பகுதிகளில் சில மரங்களின் நுனிக்கிளைகளில் இலைகளால் வேயப்பட்ட எறும்புக் கூடுகளைக் காணலாம். இவ்வெறும்புகளைத் தையல் எறும்புகள் என்பர். இளவுயிரிகளின் உமிழ் நீரால் பல இலைகள் ஒன்றோடொன்று ஒழுங்கற்ற முறையில் சேர்த்து ஒட்டப்பட்டு இக்கூடுகள் தோற்று விக்கப்படுகின்றன. இத்தகைய இலைக்கூடுகளை யுடைய மரங்களையும் எறும்புத் தாவரங்கள் எனலாம். தென் அமெரிக்கக்காடுகளில் அட்டா எனப்படும் இலை- வெட்டும் எறும்புகள் உண்டு. இவை ஒரு நாளில் ஒரு மரத்தில் இலைகளை வெட்டி நீக்கிவிடக் தையல் எறும்பு கூடு கூடியவை, வெட்டிய இலைகளைக் கொண்டு அவை பூஞ்சைத் தோட்டம் (fungus garden) தயாரிக்கும். இங்கு வளரும் பூஞ்சைகளே அவ்வெறும்புகளுக்கு உணவாகும். இப்பூஞ்சைகள் இல்லாவிடில் எறும்புகள் மடிந்துவிடும் என்று கண்டறிந்துள்ளனர். இவ்வித இலை-வெட்டும் எறும்புகளிலிருந்து தம்மைப் பாது காத்துக் கொள்ளச் சில தாவரங்கள் மற்றொரு வகை எறும்புகளோடு கூட்டு வாழ்க்கை நடத்துகின்றன. செக்ரோபியா அடினோபஸ் (Cecropia adenopus) என்னும் செடியில் கணு இடைகள் நீண்டு உட் கூடாகக் காணப்படும். இவற்றில் எறும்புகள் வாழும் இந்தச் செடியின் இலைக்காம்பின் கீழ்ப்பகுதியில் முல்லர் உறுப்புகள் (muller's corpuscles) காணப் படுகின்றன. அவை எறும்புகளுக்கு உணவாகப் பயன் படுகின்றன. மலேசியக் காடுகளில் மெர்மிகோடியா எனப் படும் தொற்றுத்தாவரம் காணப்படும். இச்செடியின் அடிப்பகுதி பெரிய கிழங்குபோல். இருக்கும். அதில் உள்ள மிகுதியான வெற்றிடங்களில் எறும்புகள் வாழும். இதன் தடுப்புச் சுவர்கள் மெல்லியவாயிருக் கும். இவற்றைத் தவிர ஹிட்னோஃபைட்டம் மொண் டானம் (Hydnophytum montamum). கபூரா அலேடா (Capura alata) ஆக்டினோடாஃபினி (Actinodaphne. டொக்கோகாலேன்சிபோலியா (Tococa lancifolia) கார்டியா நோடோசா (cordia nodosa) முதலியவை எறும்புத்தாவரங்கள் ஆகும். குப்பைமேனி விதை களில் எண்ணெய்ச் சேமிப்புத் திசுக்கள் (eliosome) காணப்படும். இத்திசுக்களுக்காகக் குப்பைமேனி விதைகளை எறும்புகள் நாடி வந்து, விதை பரவு தலுக்கு உதவி செய்யும். இதற்கு மெர்மிகோகோரி என்று பெயர். -இரா.சுந்தரம்