பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ஸ்டடைட்‌ 415

எந்தப்பகுதியும் மறைமுகப்பிரிவு (mitosis) குன்றல் (Meiosis) வகைப் பகுப்புகளின் மூலம் சூவோஸ்போர் களை உண்டாக்கும் திறன் கொண்டவை. இந்த சூவோஸ்போர்கள் உடலத்தில் இருந்து வெளியேறி சில மணி நேரம் நீரில் நீந்திய பின்னர் ஒரு தளத்தின் மீது நிலையாகின்றன. இந்த சூவோஸ்போர்கள் முதலில் குறுக்கு வாக்கிலும், பின்னர் நீளவாக்கிலும் பகுப்புற்று முழுத் தாவரமாக வளர்ச்சியடைகின் றது. பாலினப் பெருக்கம்: சூவோஸ்போர்களில் குன்றல் பகுப்பு நடைபெறுவதால் அவை ஒற்றை மயமானவை (baploid) ஆகும். பின்னர் இவை முளைத்து கேமிட்டோபைட்டுகளாகின்றன. என்டிரோமார்ஃபா கின்டெஸ்டைனாலிஸ் தாவரத்தில் ஆண் கேமிட்டு கிளை விடப் பெண் கேமிட்டுகள் அளவில் பெரியவை யாகும். ஆண் கேமிட்டுகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தையும். பெண் கேமிட்டுகள் பச்சை நிறப் பசுங்கணியத்தையும் கொண்டுள்ளன. போது உடலின் தனிப்பட்ட பாகங்களில் கேமிட்டுகள் உண்டாக்கப்படுகின்றன. கேமிட்டுகள் உருவாகும் செல்களின் புரோட்டோபிளாசம் எட்டுத் துண்டுகளாகப் பகுப்புற்று ஓவ்வொரு துண்டும் இரு ரு கசையிழைகளையுடைய கேமிட்டுகளாக உருவா கின்றன. தனித்தனி என்டிரோமார்பாக்களிலிருந்து உருவாகும் இரு கேமிட்டுகள் இணைந்து நான்கு கசையிழைகள் கொண்ட சைகோட்டுகளை உருவாக்கு கின்றன. வை சில காலம் தனித்து இயங்கிய . சைகோட் கேமிட் கருவுறுதல் 5 இரட்டை மயப்பாலிலா உடலம் குன்றல் பிரிவு சூலோஃபோர் ஒற்றைமையப் பால் உடலம் 4 3 என்ட்ரோமார்ஃபா வாழ்க்கைச்சுற்று என்ஸ்டடைட் 45 பின்னர் கசையிழைகளை இழந்து தடித்த உறையைப் பெற்று இரட்டை மய என்டிரோமார்ஃபாவாகி வளர்கின்றன. வாழ்க்கைச் சுற்று. டிலோடிரிகேல்ஸ் வரிசை யைச் சேர்ந்த கடற்பாசிகளில் காணப்படுவதைப் போன்று ஒத்த உருவமைப்புடைய சந்ததி மாற்றம் என்டிரோமார்ஃபாவிலும் காணப்படுகின்றது. என்டி ரோமார்ஃபா புரோலிஃபெரா (E. prolifera) மாறுபட்ட உருவமைப்புச் சந்ததி இருப்பதாகவும் கருதப்படுகிறது. இம்முறையில் சந்ததியின் உடலம் எளிய தோற்றத்தையுடைய உடலத்தையும், மாற்றுச் சந்ததியின் உடலம் கிளைப்பகுதிகளையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றது. ம. அ. மோகன் என்ஸ்டடைட் ஒரு இது செஞ்சாய்சதுரப் பைராக்சின் திண்மக் கரைசல் தொடரில் இறுதி மக்னிசிய உறுப்பு ஆகும். தெளி வற்ற பட்டக வகைப் பிளவும் (110), குறுயிணை (010), செவ்விணைப் வடிவப் (100) பிரிவும் கொண்டு என்ஸ்டடைட் enstatite) காணப்படு கிறது. பொதுவாக மஞ்சள் கலந்த சாம்பல் நிறமாக உள்ள இது சிறிது இரும்பு கலந்திருப்பின் பச்சை நிறமாகவும் காணப்படும். மென் படலத்தில் ஒளி ஊடுருவும் தன்மை உடையது. )து நேர் (+) ஒளி சுழற்றும் தன்மை கொண்டது. ஒளிவிலகல் எண்கள் na 1.650, ng = 1.653, n =1.658 ஆகும். கால்சியம் இல்லாத என்ஸ்டடைட் ஏறக்குறைய 990*Cஇல் புரோட்டோ என்ஸ்டடைட்டாக (protoenstatite) மாறுகிறது. இதுவும் ஒரு செஞ்சாய்சதுரப்படிகமாகும். 990°Cக்கு மேல் சிதைவுறும் வெப்பநிலை வரை நிலைப்புத்தன்மை உடையதாகும். 990°Cக்கு கீழ் விரைவாகக் குளிர்விக்கப்படுவதால் ஒற்றைச் சரிவு அமைப்பான கிளினோ என்ஸ்டடைட்டாக மாறு கிறது. கிளினோஎன்ஸ்டடைட் கனிமத் திண்மக் கரைசலில் சிறிதளவு கால்சியம் இருந்தால் இக்கனிமம் நிலையான உயர் வெப்பநிலை அமைப்பாக (high temperature form) மாறும். இக்கனிமம் சிறிதளவு பளிங்கு மிளிர்வும், சீரற்ற முறிவும் கொண்டது. எளிதில் நொறுங்கும் தன்மை உடையது. இதன் கடினத் தன்மை 5.5; அடர்த்தி 3.1-3.3. ஊது குழல் ஆய்வில் எளிதில் உருகாத இதன் உருகுதிறன் 6 ஆகும். ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் கரையாதது. பொதுவாக பசால்ட், டியூனைட், செர்பென்டி னைட், பெரிடோடைட்ஸ் ஆகியவற்றின் உட்கூறாக என்ஸ்டடைட் உள்ளது. ஒலிவின், டையாப்சைடு