எஸ்ட்டராக்கம் 417
கதிர் வீச்சு மருத்துவம், புற்றுநோய் எதிர் மருந்துகள் ஸ்டீராய்டுகள், நுண்ணுயிர் எதிர் மருந்துகள் ஆகியவை செலுத்தப்படும்போது எ. கோலைகள் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. 75% சிறுநீரகப் பாதைப் (சிறுநீர்ப்பை அழற்சி சிறுநீரக அழற்சி) பாதிப்புகள் ள். கோலையால் உண்டாகின்றன. குடல்வால் அழற்சி மற்றும் இரைப்பைப் புண் வெடிப்பு, உதரவிதான அடிச்சீழ். ஆகியவற்றில் எ. கோலை நுண்ணுயிர்கள் காணப் படுகின்றன. பித்த நீர்ப்பை அழற்சியும் அதன் அழுக லும், வெடிப்பும்கூட இந்த நுண்ணுயிர்களால் ஏற் படுகின்றன. எ கோலை சிலபோது, இரத்த ஓட்டத்தில் பரவிச் சீழ் இரத்த நிலையை உண்டாக்குகிறது. அப்போது குளிருடன் காய்ச்சல், மனக்குழப்பம் கடின மூச்சு, குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன. தோல் வெப்பமாகவும். உலர்ந்தும் காணப்படும். புற நாளச் சுருக்கம் காணப்படும்போது தோல் குளிர்ந்தும், நீல நிறமாகவும்இருக்கும். இந்த நுண்ணுயிர், தோலைத் தாக்கிச் சீழ்க்கட்டிகளை உண்டாக்குகின்றது. புதுப் பிறப்புகளில் மூளை அழற்சியையும், சிறு நீரக அழற்சியையும் உண்டாக்குகின்றன. இதற்குக் காரணம். மலத்தால் அசுத்தமடைவதும், தாயிடம் ஐஜி எம் (IgM) என்றதடுப்பாற்றல் புரதம் இல்லாமை யுமே ஆகும். இரண்டு வயதுக் குழந்தைகளுக்கு எ. கோலை இரைப்பைக்குடலழற்சியைத் தோற்றுவிக்கும். ஆய்வுகளில் வெள்ளணுப் பெருக்கம் (குறிப்பாகத் துகள்கள் கொண்டவை) அதிகமாகக் காணப்படு கிறது. இதனால் சோகை உண்டாகிறது. ஊட்ட ஊடகத்தில் வளர்ப்பதன் மூலமும், இரத்தத்தை வகைப்படுத்துவதன் மூலமும் நோய் பற்றி முடிவு செய்யலாம். மருத்துவம்.உருவான சீழ் அகற்றப்பட வேண்டும் நுண்ணுயிர் எதிர் மருந்துகள் தொடர்ச்சியாகத் தரப் படவேண்டும். டெட்ராசைக்ளின், குளோரோமை சிட்டின் அல்லது ஆம்ஃபிசிலின், கண்டாமைசீன், ஸ்ட்ரெப்டோமைசீன் போன்றவை பலனளிக்கின்றன. சிரை வழியாக ஆம்ஃபிசிலின் அளிப்பதும் பலனளிக் கிறது. அண்மைக் காலமாகக் செபலோஸ்ஃபோரினும், பாலிமிக்சின் போன்ற நுண்ணுயிர் எதிர் மருந்து களும் கொடுக்கப்படுகின்றன. எஸ்கர் -சாரதா கதிரேசன் பனிக்கட்டியுடன் மண்ணையும், சரளைக் கற்களையும் கொண்டு வளைந்து வளைந்து செல்கின்ற அமைப்பு உடைய மலைமுகடே எஸ்கர் (esker) எனப்படும். அ.க.6-27 எஸ்ட்டராக்கம் 417 பெரும்பாலான எஸ்கர்கள் 3-50 மீ. உயரமும், 10-200 மீ. அகலமும், 100-500 கி. மீ. நீளமும் கொண்டவை யாக இருக்கும். பக்கவாட்டுச் சரிவுகள், படிவுகள் படிந்து காணப்படும் கோணத்தில் செங்குத்தாக இருக்கும். மேடு பள்ளக் குன்றுகளாகவும் சுமார் 250. மீ. நேர்குத்தாகவும் எஸ்கர் காணப்படும். எஸ்கர் எஸ்கரின் வளைவுகள் அல்லது திசைகள் முன்னர் ஏற்பட்ட பனிக்கட்டிப் பாளப்பாய்வின் திசையை ஒத்தமையும். பனிக்கட்டிப் பாளங்களுக்கு அடிப் பகுதியிலோ உள்ளேயோ சுரங்க வழியாகப் பாய்ந்த ஓடைகளினால் ஏற்பட்ட படிவுகளே எஸ்கராகும். பனிக்கட்டி நிலையாக ஓரிடத்தில் இருப்பதால் இப் படிவுகள் ஏற்படுகின்றன. தென் ஸ்வீடன், ஃபின் லாந்து, கிழக்கு மெயின், அன்கவா ஆகிய இடங்களில் வை அதிகமாகக் காணப்படுகின் றன, எஸ்ட்டராக்கம் இரா, சரசவாணி இது ஓர் ஆல்கஹால் அமிலத்துடன் குறுக்க வினை புரிந்து எஸ்ட்டரைத் தரும் வினையாகும். இது ஆல்கஹால்கள் யாவற்றுக்கும் பொதுவானதொரு வினையாகும். அமிலங்கள் (கரிம வகை, கனிய வகை இரண்டுமே) யாவுமே எஸ்ட்டராக்கலுக்கு உகந்தன எனினும், பொதுவாக கரிம வகை அமிலங்களுக்கு மட்டுமே இவ்வரையறை பொருந்தும். இவ்வினையில் வெளியாகும் நீரை அகற்றி, முன்னோக்கி வினையை