பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 ஏபெஸ்‌, நெய்ல்ஸ்‌ ஹென்ரிக்‌

424 ஏபெஸ், நெய்ல்ஸ் ஹென்ரிக் மடகாஸ்கரில் வாழும் மக்களால் இன்றும் பாத்திரங் களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முட்டை ஓடுகள் 30 செ.மீ. நீளமும்.8 லிட்டர் கொள்ளவும் உடையவை. இப் பறவைகள், ஆப்பிரிக்க நெருப்புக் கோழிகளோடு நெருங்கிய தொடர்புடையவை; இவை அண்மைக் காலத்தில் முற்றிலும் அழிந்து லிட்டன. ஜெயக்கொடி கௌதமன் ஏபெல், நெய்ல்ஸ் ஹென்ரிக் நவீன கணித வளர்ச்சிக்கு வழிகோலிய கணித வியலார் நெய்ல்ஸ் ஹென்ரிக் ஏபெல் (Niels Henrik Abel) நார்வேயிலுள்ள ஸ்ட்ராவஞ்சருக்கு அருகில் உள்ள ஃபின்னாய் தீவில். 1802 ஆம் ஆண்டு பிறந் தார். அந்நாட்டில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ரிசார் நகருக்கு அருகில் உள்ள கெஜெர்ஸ்டாட்டில் வளர்ந்தார். இவர் 1815 ஆம் ஆண்டு ஆஸ்லோவில் உள்ள கத்தீட்ரல் பள்ளியில் தமது படிப்பைத் தொடங்கினார். 1818 ஆம் ஆண்டு வரை இவருக்குக் கணிதத்தில் எவ்வித ஈடுபாடும் ஏற்படவில்லை. அப் பள்ளியின் ஆசிரியராக ஹோல்ம்போ என்பார் வந்த பின், சொந்தமாகத் தீர்வு காண்பதற்குரிய கணக்கு களை வகுப்பில் தந்து, கணிதத்தின் மீது ஏபெல்லிற்கு ஈடுபாட்டை உண்டாக்கினார். ற் காலத்தில் கணித அறிஞரான ஜேகோபி போன்ற ளைஞர்களுடன் இணைந்துஏபெல் முதன் முதலில் இயல்கணித முறையில் ஐந்தாம் படிச் சமன்பாட் டிற்குத் தீர்வு காணமுயன்றார். கிறிஸ்டியன்னா பல்கலைக் கழகத்தில் 1821 ஆம் ஆண்டில் மேற்படிப்புக்காகச் சேர்ந்தார். அங்கு ஆயிலர் லாகிரேஞ், லெஜெண்டர் ஆகியோரது ஆராய்ச்சியை நுணுக்கமாக ஆய்வு செய்தார். இவர் முதன் முதலில் 1823 ஆம் வருடம் தமது ஆராய்ச் சிக் கட்டுரையை வெளியிட்டார். இவருடைய ஆர் வத்தையும், அறிவின் நுணுக்கத்தையும் அறிந்த அந் நாட்டு அரசு அவருக்கு உதவித் தொகை அளித்து, மேற்படிப்புக்காக ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகட்குச் செல்ல உதவியது. ஐந்தாம் படிக இயற் கணிதச் சமன்பாட்டை (algebraic equation) மூலங் களின் மூலம் தீர்வு காண முடியாது என்பதனைக் கட்டுரையாக எழுதி வெளியிட்டார். 1825-26 இல் பெரிலின் நகரில் தங்கியிருந்தபோது தமது நெருங்கிய நண்பரான ஆகஸ்ட் லீயோபால்ட் கிரெல்லி, ஸ்டெய்னர் ஆகியோரைச் சந்தித்தார். ஏபெல்லும், ஸ்டெய்னரும் தந்த அன்பான ஊக்கத்தினால் தனிப் பயன்பாட்டுக் கணித இதழ் (journal of pure and applied mathematics) என்ற ஆய்விதழை கிரெல்லி 1826 ஆம் ஆண்டு துவக்கினார். அதில் ஏபெல்லின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப் பட்டன. முடிவிலாத்தொடர், சார்புகள், தொகைக் கணிதம் பற்றியும் வெளியிட்டார். சிறிது காலம் அவர் பெர்லினை விட்டு ஃபிரேபர்க் சென்றிருந்த போது அவரது வேலை சிறிது தடைப்பட்டது. அங்கு அதியிய நீள்வட்டச் சார்புகளைப் பற்றியும், அபிலியன் சமன்பாடுகள் பற்றியும் ஆய்வு செய் தார். ஐந்தாம் படிச் சமன்பாட்டின் தீர்வு காண முடியாத கட்டுரைக்கு காஸ் எந்தவித முக்கியத் துவமும் கொடுக்காததால் அவர் காஸ்ஸை சந்திக் காமலேயே ஜெர்மனியிலிருந்து பாரிஸ் சென்றார். பாரிஸில் தங்கியிருந்தபோது டிரிச்லெட், லெஜெண் டர், கோஷி இவர்களுடன் பலரைச் சந்தித்தும் தன்னடக்கத்தினால் தமது வேலை பற்றியும், வெளி யிட்ட கட்டுரை பற்றியும் எதுவுமே அவர்களிடம் கூறாமல் இருந்து விட்டார். மீண்டும் பெர்லின் வந்து கிறிஸ்டியன்னாவில் சிறிது காலம் தங்கித் தனியாகச் சிலருக்குப் பாடம் கற்பித்தார். சிரெல்லி, பெர்லின் நகரில் ஏபெல்லுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். ஆனால் அச்செய்தி ஏபெல்லை அடையும் முன்பே அவர் தம் இருபத்தி ஆறாம் வயதிலேயே பிரோலாண்டில் 1829 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் காலமானார். ஏபெல் கட்டுரைகளை வெளியிட்ட அதே நேரத் தில் ஜகோபி, நீள்வட்டச் சார்புகளைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டார். லெஜெண்டருக்கு மிகவும் விருப்பமான, இத்தனை நாளும் கவனிக்கப்