எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு 21
இவற்றில் மிகக் குறைவானதற்கு மிகாமல் இருக்க வேண்டும். x1 குறுக்குக் கம்பியின் குறைந்த அகல அளவு, y,- குறுக்குக் கம்பியின் குறைந்த உயர அளவு. நெடுக்கை வலிவூட்டிகள், கட்டுறுப்பின் மூலை களுக்கு மிக அருகில் (மிகக்குறைந்தது ஒரு மூலைக்கு ஒரு கம்பி வீதம்) இருக்குமாறு அமையவேண்டும். கட்டுறுப்பின் குறுக்களவு 450 மி.மீக்கு மேலிருந்தால் கூடுதலான நெடுக்கை வலிவூட்டிகளை மேலே குறிப் பிட்டுள்ள இடைவெளித் தூரத்திற்கு மிகாமல் அமைக்கவேண்டும். பலகங்கள். வலிவூட்டிகளின் சிறும அளவு: பலகங்களில் இரு திசைகளிலும் பயன்படுத்தப்படும். வலிவூட்டிகளின் சிறும அளவு பலகக் குறுக்கு எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு 21 வெட்டுப் பரப்பில் மென் எஃகு கம்பியாக இருந்தால் 0.15%க்குக் குறையாமலும் வலிய எஃகு கம்பியாக இருந்தால் 0.12% க்குக் குறை யாமலும் இருக்க வேண்டும். வலிவூட்டியின் பெரும விட்ட அளவு: பலகங்களில் பயன்படுத்தப்படும் கம்பிகளின் வலிவூட்டிக் பெரும விட்ட அளவு பலகத்தின் கற்காரைத் திண்ணத்தில் 1/8 பகுதிக்கு மேலிருக்கக்கூடாது. 6100 மி.மீ தூண் விட்டம் தூண் -24d (அ) மூடிய கட்டுக்கம்பியாக உயரப்பிடிப்பி 6100 மி.மீ விட்டம் தூண் பலகம் Sы6) விட்டம் விட்டம் தூண் (ஆ) உயரப்பிடிப்பிகளும் மேல் கம்பிகளும் மூடிய கட்டுக் கம்பிகளாகின்றன. (இ) இருதுண்டு உயரப்பிடிப்புகள் மூடிய கட்டுக் கம்பிகளாகின்றன. படம் 1. ஓரவிட்டம் மற்றும் இடைவளை விட்டத்தில் வலிவூட்டிகளின் அமைவுப்படம். 12மி.மீ. விட்டக்கம்பிகள் 25 செ.மீ இல் ஒன்று வீட்டு ஒன்று மேவ் வளைக்கப்பட்டது. படம் 2. பலகத்தில் வலிவூட்டிகளின் அமைப்புப்படம். தூண் தூண்களில் நெடுக்கை வலிவூட்டிகள். களில் பயன்படுத்தப்படும் நெடுக்கை வலிவூட்டி களின் அளவு குறுக்குவெட்டுப் பரப்பில் 0,8%க்குக் குறைவாகவோ 6% க்கு மிகையாகவோ இருக்கக் கூடாது. சதுர அல்லது செவ்வகத் தூண்களில் மிகக் குறைந்தது 4 நெடுக்கை வலிவூட்டிகளும் வட்டத் தூண்களில் மிகக் குறைந்தது 6 நெடுக்கை வலிவூட்டி களும் பயன்படுத்தவேண்டும். இக்கம்பிகளின் விட்ட அளவு 12 மி.மீக்குக் (மென் எஃகு) குறைவாக இருக் கூக் கூடாது. தூண்களின் வெளிச் சுற்றளவில் அளக்கும் போது நெடுக்கைக் கம்பிகளுக்கிடையே உள்ள இடை வெளி 300 மி.மீக்குக் கூடுதலாக இருக்கக்கூடாது. பீடங்களில் (pedestal) நெடுக்கை வலிவூட்டிகள் பீடத்தின் குறுக்குப்பரப்பில் 0.15% க்குக் குறை யாமல் இருக்க வேண்டும்.