426 ஏரி
426 எரி கடைக்கால் 1 1 மண்கரை பாசனப்பகு கால்வாய் தேங்குபரப்பு மதகு ஆறு நீர்ப்பிடிப்புப்பரப்பு I - 1 அல்லது மரப்பலகையால் ஏரி அமைப்பு அமைக்கப்படுகின்றன. மதகு அமைப்பிடம் பாசனத் தேவைகளுக்கேற்ப, தக்க அளவீடுகளுடன் தீர்மானிக்கப்படுகிறது. மதகிலிருந்து வெளியேறும் நீர் கால்வாய் மூலம் பாய்கிறது. கால்வாய்கள் ஒருபுறப்பாசனம் அல்லது இருபுறப்பாசனம் கொண்டனவாக இருக்கும். கால் வாயில் ஆங்காங்குள்ள மதகுகள் மூலம் நிலத்திற்கு நீர் பாய்ச்சப்படுகிறது. ஓர் ஏரியின் திட்டம் பல நிலைகளில் ஆய்வு செய்யப்படுகிறது. புலஆய்வுநிலை, கட்டுமான நிலை, பேணல் நிலை ஆகிய மூன்று நிலைகளில் ஏரித்திட் டம் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படு கிறது. ஆய்வுநிலையில் ஏரிகட்டுமிடம். நீர்ப்பிடி பரப்பு, நீர்க்கொள்ளளவு. தேங்கு பரப்பு பாசனப் பகுதி நிலம் பற்றிய விவரங்கள் மதிப்பிடப்படுகின்றன. இவற்றிற்காக நிலத்தன்மைகள் போன்ற விவரங்கள் திரட்டப்படுகின்றன. பின்னர் ஏரித்திட்டம் விளக்கப் படங்களுடன் மதிப்பீடு செய்யப்படுகிறது. , இந்த ஆய்வு தொடக்கநிலை, முற்றுநிலை என்ற இரு நிலைகளில் நில அளவு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. கட்டுமான நிலை திட்டமிடப் பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. கட்டப்பட்ட ஏரியின் செயல்பாட்டுக்கு ஊறு நேராவண்ணம் அது பேணப்