பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 ஏலம்‌

430 ஏலம் மகாந்தத்தாள். மலட்டு மகரந்தத்தாள்கள் இரண் டும் சிறு பற்கள் போன்றவை. உ அகன்ற அல்லி போன்று உருமாறிய உதட்டு மகரந்தத்தாள் ஆகும். மகரந்தத்தாள் குறுகிய மகரந்தத்தாள் காம்பு கொண்டது. சூலகம். ணைந்தவை. சூலிலைகள் சூலறைகள் மூன்றும் கீழ்மட்டச் சூலகம். பல சூல்கள் அச்சொட்டு முறையில் அமைந்தவை. சூல்தண்டு. நூல்போல் நீண்டு மகரந்தப் பை களுக்கிடையே நுழைந்து வெளிப்படும். சூல்முடி புனல் வடிவம் கொண்ட கனி. து. உருண்டை வடிவ வெடிகனி ஆகும். விதை. நீள்வட்டமாகவும் முனைகளுடன், ஆழ்ந் தும், மணமுள்ள தாகவுமிருக்கும். முளை சூழ் தசை யும், முளைப்பை சூழ்தசையும் கொண்டது. சாகுபடி. ஏலச்சாகுபடி முறைகள் நிலத்திற் கேற்ப மாறுபடும். காட்டுச்செடியிலிருந்து காய்களைத் திரட்டிப் புதுச்செடிகளைத் தோற்றுவிப்பதுண்டு. பொதுவாக மூன்று சாகுபடி முறைகள் பின்பற்றப் படுகின்றன. குடகுமுறை அல்லது இடப்பெயர்ச்சி முறை, ஈர வெப்ப மண்டலக் காடுகளில் உள்ள மரங்களை நீக்கி விட்டு அங்கு ஏலம் பயிரிடப்படும். வட கர்நாடக முறை. இதில் ஏலத்திற்கு முதலி டம் தருவதில்லை. கர்நாடகாவில் ஷிமோகா மாவட் டங்களில் இம்முறை பின்பற்றப்படுகிறது. ஏலச்செடி கள் பாக்கு அல்லது மிளகுத் தோட்டங்களில் ஊடு பயிராகச் சாகுபடி செய்யப்படுகின்றன. நாற்றங் காலில் தயாரித்த நாற்றுகள் பாக்குமரங்களிடையே நடப்படும். இவ்வாறு கிடைக்கும் ஏலக்காய்கள் மூன்று பட்டைகளாக இருக்கும். மைசூர் முறை. வணிக முறையில் சாகுபடி செய்ய இதுவே தகுந்த முறையாகும். இந்திய ஏலத்தின் 90% இம்முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. தேர்ந் தடுக்கப்பட்ட காட்டுப் பகுதியில் உள்ள மரங்களில் சிலவற்றை நிழலுக்கு ஏற்றவாறு விட்டுவிட்டு, எஞ்சி யவற்றை நீக்கிவிடுவர். சாகுபடிக் குறிப்பு. ஏலச்செடிகள் எப்போதும் சுமையாக இருக்கும் காடுகளில், 600-1500 மீட்டர் குத்துயரம் வரை உள்ள பகுதிகளில் நன்கு வளரும். இச்செடிகளை நடுவதற்கு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்கள் ஏற்றவை. இதில் மைசூர், வழுக்கா எனும் வகைகள் சிறப்பானவை. ஏலம் பெரும்பாலும் விதைகள் மூலமாகப் பெருக்கம் செய் யப்படுகிறது. இவ்வகை நாற்றுகளை நடும்போது மலபார் 1.5-2 மீட்டர் இடை வகைக்கு 2-3 மீட்டர் மைசூர், வழுக்கா வகைக்கு. வெளியும் மலபார் வெளியம் தேவைப்படும். டை 75 செடிகள் நட்ட பின்னர் மே-ஜுன், ஆகஸ்ட்- செப்டம்பர், டிசம்பர்- ஜனவரி எனும் பருவங்களில் களை எடுக்க வேண்டும். இச்செடிக்கு உரமாக திலோ நைட்ராஜன் 75 கிலோ பொட்டாஷ், 150 கிலோ ஃபாஸ்பேட் தரும் உரங்களைச் சரிபாதியாகப் பிரித்து, மே-ஜுன், செப்டம்பர்-அக்டோபர் மாதங் களில் டவேண்டும். விளைச்சல். நட்ட மூன்று ஆண்டுகள் கழித்தே செடிகள் பலன் தரத் தொடங்கும். நன்றாகப் பேணப் பட்ட தோட்டத்திலிருந்து ஏக்கருக்கு 45-70 கிலோ ஏலம் கிடைக்கும். 5-10, 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து நன்கு விளையும். ஏப்ரல்-மே மாதத்தில் பூக்கும் செடிகள் ஆகஸ்ட் வரை தொடர்ந்து பூக்கும். பொதுவாக ஜனவரியில் காய்கள் பழுக்கத் தொடங் கும். கனித்தோலின் நிறமாற்றத்தைக் கொண்டே காய்கள் பறிக்கும் பருவம் முடிவு செய்யப்படும். காய் கள். பச்சை நிலையில் பறிக்கப்பட்டால் ஏலக்காய் சுருங்கித் தரம் குறைந்து விடும். ஆகவே அவை செங் காய் நிலையில் பறிக்கப்படும். மெழுகிய பதனிடுதல். பறிக்கப்பட்ட காய்கள் தரையில் சூரிய ஒளியில் அல்லது செயற்கை வெப்பத் தில் மூட்டம் போடப்படும். செயற்கைக் காய்ச்சலுக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் தேவைப்படும். கந்தக ஆவியில் வைப்பதால் காய்கள் சலவை செய்யப்படு கின்றன. வள்ளை அல்லது சலவை ஏலம் தனி வணிகத்தரம் கொண்ட தாகும். நோய். ஏலத்தில் இரு பெரும் நோய்கள் வருவ துண்டு. கோனியோ தைரியம் (coniothyrium) என்ற பூஞ்சையால் தோன்றும் இலைப்புள்ளி நோயும், கேட் மொஸயிக் (katte-mossoic) என்ற நோயும் ஏலச்செடிகளைப் பாதிக்கின்றன. இலைப்புள்ளி நோய், நாற்றுகளை மழைக்காலங்களில் தாக்கும். பூச்சிகளில் பேன்கள், கம்பளிப்புழுக்கள். தண்டு மற்றும் வேர் துளைப்பான், வேர் கிழங்கு வண்டு, அசுவணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நோய் களையும், பூச்சிகளையும் தடுக்கத் தகுந்த பூஞ்சணப் பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டும். பயன். ஏலம் நறுமணப் பொருளாகவும், சுவைப் பானாகவும் (masticatory) மருந்தாகவும் பயன்படு கிறது. சற்று விறுவிறுப்பான நறுமணமே ஏலத்தின் சிறப்புப் பண்பாகும். சமையல் பொருள்கள், தின் பண்டங்கள், பிஸ்கட், கேக் முதலியவற்றிக்கு மணம் கொடுக்க ஏலம் பயன்படுகிறது. சிலசமயம் மதுவிலும் இது சேர்க்கப்படுகிறது. கிழக்கிந்திய நாடுகளில் டீ, காஃபி போன்றவற்றில் ஏலத்தூளைச் சேர்ப்பார். மருந்தில் செரிப்புத் தன்மையைக் கூட்டும் பொருளாக இது செயல்படுகிறது. ஏலம், இஞ்சி, கிராம்பு, ஓமம் வற்றின் சிறந்த மருந்தாகும். அமோமம் வகை