பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏவுகணை 431

ஏலத்தின் விதைகள் ஏல அரிசி எனப்படும். இது உண்மை ஏலத்தின் மாற்றாகப் பயன்படுகின்றது. தி. ஸ்ரீகணேசன் ஏவுகணை உ. அஞ்சனம் அழகிய பிள்ளை எதிரிக்கப்பல், விமானம், வேவு பார்க்கும் செயற்கைக் கோள், எதிரிமுகாம் ஆகியவற்றை ஒரு சில நிமிடங் களில் சென்று தாக்கி அழித்திடவல்ல ஏவூர்தி ஏவுகணை (missile) எனப்படும். வரலாறு. கி. பி. 1232 இல் சீனர்கள், மங் கோலியரை எதிர்த்துத் தாக்கத் தீக்கணைகளை (fire arrows) வீசியுள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது. கி.பி. 1792 இல் காரன்வாலிஸ் பிரபுவிற்கு எதிராக மைசூர் மன்னர் திப்புசுல்தான் நடத்திய ஸ்ரீரங்கப் பட்டினப் போரிலும் ஏவுகணைகள் போர்க்கரு விகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வ்வகை நவீன போர்க்கருவிகளைக் கண்ட ஆங்கிலேய வெடி மருந்து வல்லுநர் வில்லியம் கான்கிரீவ் என்பார் இத்தகைய ஏவுகணைகளைத் தயாரித்து, அவற்றை மூன்று கிலோமீட்டர் வரை ஏவி வெற்றி கண்டார். 1860 இல் நெப்போலியனுடன் நடந்தபோர்களிலும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. விண்வெளி இயலின் தந்தை எனப் போற்றப் படும் கான்ஸ்டன்டின் சியோல் கோவ்ஸ்கி என்னும் சோவியத் ஒன்றியக் குடியரசின் கணித ஆசிரியர், ஹெர்மன் ஓபர்த் எனும் ஜெர்மானிய கணிதவியலார், முதன்முதலாக நீர்ம உந்து எரிபொருளால் இயங்கும் ஏவூர்தி ஆய்வில் வெற்றிகண்ட அமெரிக்க இயற் பியல் பேராசிரியர் கொடார்டு என்பார் ஏவுகணை ஆய்வு மற்றும் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவர் களாவர். முதல் ஏவுகணை. போர்க்கருவியாகப் பயன்பட்டு வந்த சிறு களைகளைத் தவிர அளவில் பெரும் ஏவுகணையாக வரலாற்றுச் சிறப்பு எய்தியது ஜெர் மானிய A-4 என்ற ஏவுகணை ஆகும். 14 மீட்டர் நீளமும், 1.65 மீ. விட்டமும் கொண்ட இக்கணை, ஏறத்தாழ 990 கி.கி. எடையுள்ள வெடிகுண்டுகளை 310 கி.மீ. தொலைவில் குறிபார்த்துச் சென்று வீசும் ஆற்றல் பெற்றது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்றுப்போனதால் தன் A - 4 ஏவுகணை களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க நேர்ந்தது. வெர்னர் வான் பிரான் தலைமையில் அமெரிக்காவை சென்றடைந்த அறிவியலார், பொறியியலாளர் v-2 என்ற புதுப்பெயரில் A-4 ஏவுகணையைச்சீர் அமைத்தனர். ஏவுகணை 431 தே காலக்கட்டத்தில் ரஷ்யாவில் உருவான கத்யூஷா எனும் நகரும் ஏவுதளம் புகழடைந்தது. M-13 எனும் ஏவுகணைகள் கத்யூஷாவிலிருந்து கிளம்பி, ஜெர்மன் நாசிப்படையை முறியடித்தன. இன்றும் பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற அனைத்து நாடுகளுஏவுகணைத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. ஏவுகணை வகை. பாய்ந்து செல்லும் தொலைவிற் கேற்ப ஏவுகணைகளைக்குறுகியதொலைவு ஏவுகணை (short range missile), நீண்ட தொலைவு ஏவுகணை long range missile), இடைத்தரத் தொலைவு ஏவுகணை (intermediate range missile) என வகைப் படுத்தலாம். குறுகிய தொலைவு ஏவுகணை. இது 1000 கடல் மைல் (1 கடல் மைல்* 1.8546 கிலோ மீட்டர்) தொலைவு வரை பாயக்கூடியது. அமெரிக்க போர்ப் படையின் கார்ப்ரால், ஹானல்ட் ஜான், சார்ஜெண்ட், ரஷ்யாவின் காமட் 1, M-100, RS-82, RS-132, பிரான்சின் எஸ்.இ (SE), மாசல்கா (AA), சீனாவின் லாங்மார்ச், HN -5 C-101, HY-3, இங்கிலாந்தின் ஃபயர் ஸ்டிரிக், தண்டர்பேர்டு, கிளட் ஹவுண்டு, சீ ஈகிள், ஜப்பானின் பேகா, இந்தியாவின் பிரித்வி, திரிசூல், ஆகாஷ், சுவீடனின் RPS-15, இஸ்ரேலின் ஜெரிக்கோ, காப்ரியெல், நார்வேயின் பெங்குவின் Mk-3, போன்றவை குறுகிய ஏவுகணை களாகும். நீண்ட தொலைவு ஏவுகணை. இது 5500 கடல் மைல் (10200 கி.மீ.) தொலைவு சென்று தாக்கவல்ல B D படம் 1 ஏவுகணை பறக்கும் வழித்தடம் ஏவுகணை இலக்கைத் தாக்குதல் A முதற்கட்டம் பிரிந்து விழுதல் B போக்கு - புவி அப்பாற்புள்ளி D - - தன்