432 ஏவுகணை
432 ஏவுகணை மிகப்பெரும் ஏவுகணை ஆகும். இவற்றின் முதல் கட்டத்தில் உந்தும் ஊக்கிப்பொறி (booster engine) இயங்குவதால் ஏவுகணை திறனூட்டப்படுகிறது. இத்திறனூட்டத் தறுவாயில் மட்டுமே, ஏவுகணை வழிப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டுடன் வானுயரத்தில் பின்னர்-புவி எட்டி, அப்பாற்புள்ளியினை புவி ஈர்ப்புக்கு இணங்கிப் பரவளைவுப் பாதையில் சென்று இலக்கைத் தாக்கும் (இதன் பயண வழித்தடத்தைப் படம் 1 இல் காணலாம்). ஏவுகணை பறக்கும் போது ஒருகட்டத்தில் மட்டுமே வழிப்படுத்தப்பட்டு வீசப் படும். நீண்ட தொலைவு பாயக்கூடிய இக்கணை கண்டம் விட்டுக் கண்டம் பாயவல்லது. இதை கண்ட இடைக் வீச்சுக்கணை குறிப்பிடலாம். அமெரிக்காவில் அட்லஸ், டைட்டன், மினிட்மேன், சோவியத் ஒன்றியக் குடியரசின் வாஸ் டாக். காஸ்மாஸ், இங்கிலாந்தின் புளூஸ்ட்ரிக் போன்றவை இத்தகைய இடைக்கண்ட வீச்சுக் கணைகள் ஆகும். எனவே எனக் இடைத்தரத்தொலைவு கணை. ஏறத்தாழ 1500 கடல் மைல் (2800 கிலோ மீட்டர்) தொலைவை எட்டக்கூடியவை. பறக்கும் போது திறனூட்டத் தறுவாயில் மட்டுமே வழிப்படுத்தப்படும் இக்கணை களை இடைத்தரத் தொலைவு வீச்சுக் கணைகள் என்பர். எ.கா. சோவியத் ஒன்றியக் குடியரசின் ஸ்கிராக், ஸ்கார்ப், அமெரிக்காவின் தோர். ஜீபிடர், போலாரிஸ் ஆசி ஆகியவை. ஏவுகணைப்பகுதிகள். ஏவுகணைகள் வடிவமைப் பிலும், இயக்கத்திலும் ஏவூர்திகளை ஒத்திருப்பினும் பயன்பாட்டில் மாறுபாடானவை. வானியல் ஆய்வு, தொலைத்தகவல் தொடர்பு ஆகியவற்றிற்காக அன்றி ஆக்கவழி அறிவியல் ஆய்விற்காகச் செயற்கைக் கோள்களை விண்ணிற் செலுத்தும் ஏவுகலங்களும் ஏவூர்திகளே ஆகும். வெடிகுண்டு, அணு ஆயுதங்கள் ஆகியவற்றைச் சுமந்து சென்று எதிரி முகாம்களில் வீசி அழிக்கும் ஏவுகணைகளும் ஏவூர்திகளே ஆகும். ஏவுகலங்கள் ஆய்வுக்கும், ஏவுகணைகள் அழிவுக்கும் வழிவகுக்கின்றன. இலக்கைச் சென்று தாக்கும் குறிக்கோளுடன் வகுத்த வழியில் பறந்து செல்லும் ஏவுகணைகள் நெறிப்படுத்தப்பட்ட ஏவுகணைகள் (guided missiles) எனப்படும். அவ்வாறில்லாமல் எவ்விதக் கட்டுப்பாடுமின்றித் தனித்துச் சென்று எதிரி களைத் தாக்குபவை நெறிப்பாடற்ற ஏவுகணைகள் எனப்படும். நெறிப்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் குறியுணர் கருவிகள், போர்க்கருவிகள், கட்டுப்பாடு, வழிப்படுத்தும் அமைப்புகள், ஏவூர்திப்பொறி போன்ற முக்கிய உறுப்புகள் இடம் பெறும். குறியறி கருவி. மிகு வேகத்தில் காற்றுவெளியில் பறக்கும் விமானங்கள் திருகு ஊர்திகள் ஆகியவை உண்டாக்கும் ஒலி, ஒளி, வெப்பக் கதிர்கள் இவற் றைக் குறியுணர் கருவிகள் அறிவிக்கின்றன. F-16 போன்ற B-2 தாரை விமானங்கள் வெளிவிடும் புகைத்தொடரைப் பின்பற்றிச் செல்லும் அகச்சிவப் புக் கதிர் அறி கருவிகள் இந்த ஏவுகணை அமைப்பில் பெரும்பாலும் இடம் பெறும். இத்தகைய ஏவு கணைகள் தாமாக எந்தக் கதிர்வீச்சையும் செலுத் தாமலேயே ஊர்திகளை அறிவதால் இவற்றை வினையறு தானே இயங்கி ஏவுகணையைச் செலுத்தி நெறிப்படுத்தும் அமைப்பில் இயங்குவன (passive homing device) எனக் குறிப்பிடுவர். ஏனைய ஏவுகணை இலக்கு படம் 2. வினையறு தானே இயங்கி ஏவுகணையைச் செலுத்தி வழிப் படுத்தும் அமைப்பு