22 எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு
22 எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு 12 மி.மீ விட்டமுள்ள கூடுதல் சும்பி தகைவேற்று நீளம் 17 மி.மீ. விட்டக்கம்பிகள் 100 தகைவேற்று நீளம் திறப்புத் துளை 12 மி.மீ. விட்டமுள்ள கீழ், மேல் தனிக்கம்பிகள் கூடுதல் வலிவூட்டிக் கம்பிகள் திறப்பு தகைவேற்ற நீளம் படம் 3. பலகத்திறப்புகளில் வலிவூட்டிகளின் அமைப்புப் படம் 16.மி.மீ. விட்டமுள்ள கூடுதல் கம்பிகள் 10 மி.மீ. விட்டக்கம்பிகள் 100 மி.மீ. நெடுக்கை தூண்களில் குறுக்கு வலிவூட்டிகள். வலிவூட்டிகள் இடம் பிறழாது நிறுத்திடப் பக்க வாட்டுக் குறுக்குக் கம்பிகள், சதுர அல்லது செவ்வக வடிவத்திலோ வட்டவடிவிலோ சுருள் வடிவிலோபயன் படுத்தப்பட்ட வேண்டும். இக்குறுக்கு வலிவூட்டிகள் நெடுக்கைக் கம்பிகளைச் சுற்றி உள்ளே நன்றாகப் பற்றியிருக்குமாறு கட்டப்பட வேண்டும். பக்கவாட்டுக் குறுக்குக் கம்பிகளுக்கிடையே இருக்க வேண்டிய இடைவெளித் தூரம், தூண் போன்ற அமுக்குக் கட்டுறுப்பின் பக்கவாட்டு அகலம்; 16.மி.மீ. நெடுக்கைக் கம்பிகளுள் சிறிய கம்பியின் விட்ட அளவு; 48மி.மீ. பக்கவாட்டுக் குறுக்குக்கம்பி யின் விட்ட அளவு முதலியவற்றுள் மிகக் குறைவான தற்கு மேலிருக்கக்கூடாது. இத்தகைய குறுக்கு வலிவூட்டிக் கம்பியின் விட்ட அளவு 5.மி.மீ. அல்லது பயன்படுத்தப்படும் நெடுக் கைக் கம்பியின் விட்டஅளவில் 4 பகுதிக்குக் குறை வாக இருக்கக்கூடாது. சுருள் வடிவக் குறுக்குக் கம்பிகளுக்கிடையே அமையவேண்டிய இடைவெளி 75 மி.மீ. அல்லது தூணின் உள்விட்டத்தில் 1/6 பகுதி அல்லது குறுக் குக் கம்பியின் விட்டத்தைப் போல் மூன்று மடங்குக் குக் குறைவில்லாமல் இருக்க வேண்டும். பெரும்பாலும் பல் மாடிக் கட்டடங்களில் தூணின் அளவு கீழ்த்தளத்தில் பெரியதாகவும் மேல் தளத்தில் சிறியதாகவும் அமையும். அச்சமயங்களில் தூண் ஓரங்களில் உள்ள நெடுக்கைக் கம்பிகளை இவ்வளவுகளுக்கு ஏற்றவாறு உரிய கற்காரை ஓரத் திண்ணம் கொடுத்து வளைக்க வேண்டும். இவ்வாறு வளைக்கப்படும் வளைவுச் சரிவு 1:6 க்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் இந்த வளைவுக்கு மேலும் கீழும் உள்ள நெடுக்கைக் கம்பிகளைத் தூண்களின் உயரத்திற்கு இணையாக நெடுக்கில் செல்லு பலுமாறு அமைக்கவேண்டும். தளமட்டப்பலகம். விட்டங்களின்றித் தூண்களால் மட்டும் தாங்கப்படும் கற்காரைப் பலகங்களுக்குத் தளமட்டப் பலகம் (flat slab) என்று பெயர். இத்தள மட்டப் பலகத்தின் திண்ணம் 135 மி. மீ.க்கு குறை யாமல் இருக்கவேண்டும். கட்டடங்களில் தள உயரம் குறைவாக உள்ளபோதும், பெருஞ்சுமைகள் தாங்க வேண்டிய போதும் இத்தகைய கட்டுமான முறை கடைபிடிக்கப்படும். மட்டப்பலகத்தில் வலிவூட்டி களுக்கிடையே உள்ள 8X மட்டப் இடைவெளி பலகத்தின் திண்ணம் அளவுக்கு மேலிருக்கக்கூடாது. மேலும் இத்தகைய வலிவூட்டிகளின் மிகக்குறைந்த நீளம் இதற்குரிய இந்தியச் செந்தர நிறுவன விதிக் கோட்பாடுகளில் குறிப்பிட்ட அளவுக்குக் குறையா மல் இருக்கவேண்டும். மட்டப்பலகத்தின் தொடர்ச்சியற்ற ஓரங்களுக் குச் செங்குத்தான திசையில் உள்ள வலிவூட்டிகளும் தாங்கமைப்புகளிலுள்ள முதன்மை வலிவூட்டிகளோடு இணைத்து இறுக்கி வைக்கப்பட வேண்டும். மட்டப் பலகத்தில் வலிவூட்டிகளின் அமைப்பு படம் 7 இல் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. மாடிக்கட்டு. மாடிக்கட்டுகளில் பலகம் ஒரு வகை சாய்வுப் பலகவடிவானது. இதற்கு, வலிவூட்டுங் கற்காரைப் பலகத்துக்குள்ள வலிவூட்டி எல்லா