ஏவூர்தி 441
ஏவூர்தி 441 பகைவர் முகாம்களின் மேல் குண்டுமழை பொழியும் அமெரிக்காவின் புல்பப், ஸ்கைபோல்ட் போன்ற ஏவுகணைகள் இவ்வகைப்படும். நிலம் விட்டு நீரடி பாயும் ஏவுகணை. (surface to under water missile). இது நீர் மூழ்கிக் கப்பல்களைக் குறிபார்த்து தாக்கும் நீரடி ஏவுகணை ஆகும். எ.கா. அமெரிக்காவின் அஸ்ரோக். நீரடி விட்டு நிலம் பாயும் ஏவுகணை (underwater to surface missile) நீருக்கடியிலிருந்து கிளம்பி நிலப் பரப்பை அழிக்கும் இவ்வகை ஏவுகணைகளில் அமெரிக்காவின் போலாரிஸ் என்னும் இடைத்தரத் தொலைவு வீச்சுக்கணை குறிப்பிடத்தக்கது. சோவியத் ஒன்றியக் குடியரசின் கோலம் - 2 ஏவுகணை ஏறத்தாழ 8.4 மீட்டர் நீளமும், 1.5 விட்டமும் கொண்ட போலாரிஸை விட அளவில் இருமடங்கு பெரியது. இதன் நீளம் 17.1 மீட்டர், விட்டம் 2.1மீட்டர். மீட்டர் நீரடியிலிருந்து நீருக்குள்ளேயே பாயும் ஏவுகணை (underwater to underwater missile). கடலடியில் பதுங்கியிருந்தே எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்களைச் சிதறடிக்க வல்ல நீர்மூழ்கி ஏவுகணைகளில் அமெரிக்கக் கடற்படையின் சப்ரோக் குறிப்பிடத்தக்கது. பீரங்கி எதிர் ஏவுகணை. (anti tank missile). எதிரியின் பீரங்கிகளை நொறுக்கவல்ல ஏவுகணை களுள் ஜெர்மனியின் கோப்ரா, பிரான்சின் SS-10. SS-11 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஏவுகணை எதிர் ஏவுகணை. இது சீறிப்பாய்ந்து வரும் ஏவுகணைகளை நடுவழியிலேயே முறியடித்துச் சிதறடிக்கும் ஏவுகணை ஆகும். எ.கா. அமெரிக்கப் போர்ப்படையில் கையாளப்படும் பிளேட்டோ. இடைவெட்டு ஏவுகணை. தாக்கவரும் பகை மானங்களைத் தம்பால் கவர்ந்து இழுத்துத் திசை திருப்பி விடும் இந்த ஏவுகணைகள் செயல்திறனில் ஆற்றல் மிக்கவை. பகைவரைக் குழப்பமடையச் செய்யும் குயுஸ், போமார்க் போன்ற அமெரிக்க ஏவுகணைகள் இவ்வகையைச் சாரும். சு.முத்து ஏவூர்தி உந்துதல் மூலம் செலுத்தப்படுகிற ஊர்தி ஏவூர்தி எனப்படும். கொள்கலனில் உள்ள எரிபொருளை எரித்து உருவாக்கப்படும் ஆற்றல் மிகு வேகத்துடன் வெளித்தள்ளப்படும்போது அவ்வாற்றல், ஊர்தியை எதிர்த்திசையில் வேகமாக நகர்த்துகிறது. இவ்வாறு ஏவப்படும் ஊர்தியில் இட்டுச்செல் பொருளாகக் கருவிகளோ, வெடி மருந்தோ, மனிதர்களோ இருக்கலாம். ஏவூர்திப் பொறிகள் ஏவூர்தியைச் 'செலுத்துவ தற்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ஊர்தியிலிருந்து விரைவாக வெளித்தள்ளப்படும் பொருள்களின் விளைவாக எதிர்த்திசை நகர்வு உண்டாக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் பொருள் உந்து பொருள் எனப்படுகிறது. உந்து பொருள் ஏவூர்தியின் உள்ளேயே சேர்த்து வைக்கப் பட்டு இருக்கும். வேதி ஏவூர்திகளில் உந்துபொருள் வேதிக் கலவையாக இருக்கும். இப்பொருள்கள் ஒன்றோடொன்று இணைந்து வேதி மாற்றங்களை நிகழ்த்தும்போது ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. சில ஏவூர்திகளில் திண்ம நிலை உந்துபொருள்களும் சில ஏவூர்திகளில் நீர்ம நிலை உந்து பொருள்களும் பயன்படுகின்றன. ஏவூர்தியின் திறன் தொலைவு, பெரும வேகம், பெரும உயரம், காலம் ஆகியவற்றைப் பொறுத்தே அறுதியிடப்படுகிறது. சில நன்மைகளை முன்னிட்டு ஏவூர்தி பல கட்டங் களாக வடிவமைக்கப்படுகிறது. ஏவூர்தியின் ஏதேனும் ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்தபின் அந்தக் கட்டத்தால் ஏவூர்திக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே அந்தக் கட்டத்தைப் பிரிக்க வல்லதாக வடிவமைத்தால், பயனற்றுப்போன அக்கட்டத்தை நீக்கி விடலாம். வெறுமையான கட்டத்தை இழந்து விடுவதால் ஏவூர்தியின் சுனம் குறைகிறது. தேவையற்ற கட்டத்தை இழுத்துச் செல்லத் தேவையான ஆற்றல் எஞ்சுவதால் ஏவூர்தியின் எஞ்சிய பகுதிகளில் வேகத்தை அவ்வாற்றலால் மிகுதிப்படுத்தலாம். வடி வமைப்பில் உருவாகும் சிக்கல்களின் காரணமாக ஏழு கட்டங்களுக்கு மேல் ஏவூர்தி உருவாக்கப்படுவ தில்லை. காண்க, ஏவூர்திக் கட்டங்கள்