ஏவூர்தி உந்து எரிபொருள் 445
ஏவூர்தி உந்து எரிபொருள் 445 எரிவினைப் பொருள்கள் நச்சுத்தன்மை, அரிக்கும் தன்மையற்றவையாகவும் சீராக எரியக்கூடியவையா கவும் இருக்க வேண்டும். விட்டுவிட்டு எரிவது, மிக வேக கத்தில் எரிவது போன்ற எதிர்பாரா விளைவுகளால் ஏவூர்தி வெடித்துச் சிதறக்கூடும். இதன் தயாரிப்புக் கான மூலப்பொருள்கள், எளிதில் உள்நாட்டில் குறைந்த விலையில் கிடைப்பனவாகவும் இருத்தல் வேண்டும். படம் 1. திண்ம எரிபொருள் தண்டின் குறுக்கு வெட்டுத்தோற்றம் ஆரநிலை எரிதல். அந்த எரிவினையின்போது வெளியிடப்படும் வெப்ப நிலை மிகுதியாகவும் இருக்க வேண்டும். மேலும் அடர்த்தி மிக்கதாகவும் இருக்க வேண்டும். அப் போதுதான் ஏவூர்தியின் குறைந்த கன அளவுக்குள் மிகுந்த எடை எரிபொருளை நிரப்பலாம். இடம் எரிபொருள் நாட்படப் பாதுகாப்புக் கிடங்கி லிருந்தாலும் (propellant magazine) எரிபொருள் தன்மை குறையாததாக இருக்க வேண்டும். சிறு அதிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத தாகவும் கையாளும்போதும் இடம்விட்டு கொண்டு செல்லும்போதும் எளிதில் தீப்பற்றாமலும் இருக்க வேண்டும். தயாரிப்பு முறையில் தீங்கற்றதாக இருக்க வேண்டும். ஏவூர்திப் பொறியின் உட்பூச்சு, காப்பு உறை போன்றவற்றோடு ஒத்தியல்பு உடைய தாக இருக்க வேண்டும். வெப்பத்தை அரிதில் கடத் தும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். இதன் தலைப்பகுதி. கனற்சி அறை 00 1. சிலுவை அமைப்பு - லெளிப்புறமிருந்து உள் நோக்கி எரியும் 2. குழல் அமைப்பு - உட்புறமிருந்து வெளிநோக்கி எரியும் 3.நடுத்தண்டும் குடிலும் 4.நடுத்தண்டும் வெளி ஓடும் 5. அக விண்மீன் அமைப்பு 6.7. பலதுனைச் சல்லடை அமைப்புகள் 8. கூம்பு நுனி எரியமைப்பு படம் 2. சில ஏவூர்தி திண்ம எரிபொருள் தண்டின் தோற்றங்கள், கூம்புகுழல் எரியூட்டி எரி நடுக்குழல் உட்பூச்சு தடைவான் உந்து எரிபொருள் தண்டு காப்பு உறை பொறிக்கூடு - கனற்சி அறைச்சுவர் படம் 3. திண்ம உந்து எரிபொருள் ஏவூர்திப்பொறி.