பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 ஏவூர்தி உந்து எரிபொருள்‌

446 ஏவூர்தி உந்து எரிபொருள் ஏவூர்திப் பொறி அமைப்பு. பொதுவான திண்ம நிலை எரிபொருள் கொண்ட ஏவூர்திப் பொறியின் பகுதிகளைப் படம் 3 இல் காணலாம். உந்து இந்த ஏவூர்திப் பொறியின் தலைப்பகுதியில் (சில ஏவூர்திகளில் கூம்புகுழல் பகுதியிலும் அமையும்) வைக்கப்பட்டுள்ள எரியூட்டி, கனல் நுட்ப வகை யிலோ (pyrotechnic type) கனல் பிறப்பு வகையிலோ (pyrogen type) இயங்கும். கனல் நுட்ப வகை எரியூட்டி பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் பெர்க்குளோரேட் போன்ற ஏதேனும் ஓர் உப்புடன் மக்னீசியம்,அலு மினியம், சிர்க்கோனியம் போன்ற உலோக எரி பொருள் கலந்த கலவையை அடிப்படையாகக் கொண்டது. கனல் பிறப்பு வகை எரியூட்டி மேற்குறித்த உப்பு - உலோகத்தூள் கலவையுடன் பாலிஎஸ்ட்டர் எத்தில் செல்லுலோஸ், எப்பாக்சி ரெசின் போன்றவை யும் கலந்திருக்கும். இவ்வகை எரிபொருளை உயர் வேகத்தில் கனலைப் பிறப்பிக்கும் ஏவூர்தி உந்து எரி பொருளோடு ஒப்பிட்டுக் கூறலாம். எரியூட்டியை மின்சாரத் தீப்பொறியால் பற்ற வைத்தால், அது உமிழும் மிகை அனல்மிகு வெப்பப் புகை, ஏவூர்தியின் கனற்சி அறையிலுள்ள எரி பொருளை எரியூட்டிவிடும். எரிநடுக் குழலின் உட்பரப்பு முழுதுமாகத் தீப்பிடித்து ஆரநிலையில் கனற்சி அறைச்சுவர் நோக்கி வினாடிக்கு ஏறத்தாழ 5-15 மி.மீ. வேகத்தில் எரியத் தொடங்கும். அதன் சராசரி வெப்பநிலை 3000° C க்கும் மேலாகும். அப்போது எரிகலனாகிய கனற்சி அறைக்குள் நிரம்பிய புகை மண்டலத்தின் அழுத்தம், கடல்மட்ட வெளிக் காற்றின் அழுத்தத்தைவிடப் பன்மடங்கு மிகும். இந்த அனல் பிழம்புடன் ஒளிவிடும் மிகு வெப்ப வளி மங்கள், ஏவூர்திப் பொறியின் வால் புறத்திலிருந்தும் சுருங்கி விரிந்த கூம்புகுழல் வழியாக. மீஒலி வேகத்தில் வெளியே பீச்சப்படுகின்றன. இந்நிகழ்வின் உயர்வேகத்தில் ஏவூர்தி முன்னோக்கி போது உந்தித் தள்ளப்படுகிறது. நனைந்த நைட்ரோ செல்லுலோசை உலர்த்திக் கட்டியாக்குதல் திண்மநிலை உந்து எரிபொருள்களை ஓரியல் உந்து எரிபொருள் (homogeneous propellant), ஈரியல் உந்து எரிபொருள் (composite propellant). ஈரியல் இரட்டைப்பசை எரி பொருள் (composite modified double-bars propellants) என வகைப்படுத்தலாம். ஓரியல் உந்து எரிபொருள்கள் இவ்வகை எரிபொருள்கள் ஒரே நிலையில் உள்ள பசையால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஒற்றைப் பசை (single base), இரட்டைப்பசை (doublc base, ) முப்பசை (triple base) எனப் பிரிக்கலாம். பசை ஒற்றைப் எரிபொருள். வெடிப் பஞ்சு நைட்ரோசெல்லுலோஸ் உலர்ந்த நிலையில் அதிர்ச்சி, உராய்வால் வெடித்துத் தீங்கு விளைவிக்கக்கூடும். அதனால் பெரும்பாலும் நைட்ரோசெல்லுலோஸ் நீருடன் கலந்தே பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஒற்றைப் பொருளே எரிபொருளையும், அதை எரியச் செய்யும் ஆக்சிஜனையும் கொண்டுள்ளது. நைட்ரோ செல் லுலோஸுடன் ஈதர்-ஆல்கஹால் கரைப்பான், டைஃபீனைஸ் அமின் போன்ற நிலைப்பான் (stabili- ser) கலந்து, கரைப்பான் பிதிர்வு முறையில் (solvent extrution process) ஏவூர்தி உந்து எரிபொருள் தயாரிக் கலாம். . . நிலைப்பான் என்பது ஏவூர்தி எரிபொருள் தயாரான பின்னர் தளவாடக் கிடங்கில் பாதுகாக்கப் படும் போது, எரிபொருளின் தன்மை சிதைவுறாமல் நிலையாக வைக்க உதவும் பொருளாகும். இரட்டைப்பசை எரிபொருள். நைட்ரோசெல்லு லோஸ் தன்னைத்தானே முழுதுமாக எரித்துக் கொள் வதற்கு 30%க்குக் குறைவான ஆக்சிஜனைத் தன்னுள் அடக்கியுள்ளது. ஆனால் நைட்ரோகிளிசரின் என்ற சேர்மத்தில் தன்னை எரித்துக் கொள்ள 3.5% ஆக் சிஜன் கூடுதலாக உள்ளது. எனவே இந்த இரு சேர் மங்களையும் அடிப்படையாக வைத்து, ட்ரைஅசிட் டீன், அமின் ஆகியவற்றுடன் கரைப்பான் கலந்தோ, கரைப்பான் இன்றியோ பிதிர்வு முறையில் இரட்டைப் பசை எரிபொருள் தயாரிக்கப்படுகிது. 200. மி.மீ. ஆல்கஹால் செலுத்திக் கழுவுதல் இறுதியாகக் காரச்சேவை மீண்டும் கட்டியாக்குதலும் பிழிவதுபோல் கட்டியாக்கல் பிதிர்வும் மாக்கரோனி பிதிர்வு இழை சுற்றிய உலர்த்தல் பின் வெட்டுதல் கிராஃபைட் தூள் கலந்து மினுமினுப்பூட்டல் கரைப்பான் பிதிர்வு முறை கட்டியை உடைத்தல் கரைப்பான், அமின், அசெட்டோனில் கரைத்த நைட்ரோகிளிசரின் அரித்தபின், குலுக்கிய பாத்திரங்களில் அடைத்து வைத்தல்