பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 ஏவூர்தி உந்து எரிபொருள்‌

448 ஏவூர்தி உந்து எரிபொருள் கரைப்பான் ஆவியால் கனற்சி அறை உட்புறக் களிம்பு நீக்குதல் அம்மோனியம் பெர்க்குளோரேட்டைப் பொடித்து, அரித்து வகைப்படுத்தி உலர்த்திப் பாதுகாத்தல் முன் கலவையுடன், அம்மோனியம் பெர்க்குளோரேட் குறுக்கிணைப்புப் பொருள்களைக் கலத்தல் எரிபொருள் தண்டு முனைகளைச் சீர் நடு அச்சுருளை நீக்குதல் படுத்துதல் கனத்த மணற் காற்றால் கனற்சி அறை உட்புறத் துரும்பு நீக்குதல் கனற்சி அறையுள் பாதுகாப்பு உ றை ஒட்டி, உட்பூச்சு தடவுதல் அலுமினியத் தூளை வகைப்படுத்துதல் காற்றுலையில் சுட வைத்தல் அலுமினியம் மற்றும் சிலதுணைப்பொருள்களைப் பசைக்கோர்வையில் முன்னதாகக் கலத்தல் கனற்சி அறையுள் நடுவில் அச்சுருளை வைத்து வெற்றிட அல்லது அழுத்த வார்ப்பிடல் கூடிய எரிபொருள் தண்டு இரு முனைகளின் புறப்பரப்பு எரியாமல் தடுக்கும் பசைப்பொருள் பூசுதல் பல்லுறுப்புக் முழு வடிவ எரிபொருள் தண்டுநிரப்பிய ஏவூர்திப்பொறி வார்ப்பு முறை எரிபொருள் தயாரிப்பு கட்டமைப்புடைய கூட்டுப் பொருளும், ஆக்சிஜன் மிகுந்த உப்புநிலையில் உள்ள ஆக்சிஜனேற்றியும் இரண்டறக் கலந்ததாகும். இத்த கைய உந்து எரிபொருள்களின் மூலப்பொருளாகப் பிசு பிசுப்பான பல்லுறுப்புப் பசைக் கோர்வை (viscous polymeric binder), ஆகியவை உள்ளன. திண்மநிலை ஆக்சிஜனேற்றி மேலும் உலோக எரிபொருள், இளக்கி, குறுக்கு இணைப்புப் பொருள்கள். எரிவேகம் மாற்றி, வினை ஊக்கி, நிகழ்ச்சி உதவி, நிலைப்பான் போன்ற சில துணைப்பொருள்களும் தேவைப்படுகின்றன. பல்லுறுப்புப் பசைக் கோவை. ஏவூர்தி எரிபொரு ளின் அனைத்து மூலப்பொருள்களையும் கட்டுக் கோப்புடன் இணைத்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் முதன்மையான பொருள் பசைக் கோவை யாகும். திண்மநிலை எரிபொருளின் எடையில் இது 15-20% இருக்கும். பல்வேறு பசைக் கோ வைகளின் பிசுபிசுப்புத் தன்மை அல்லது பாகுநிலை அவற்றின் இயல்புக் கேற்ப ஏறத்தாழ 40-400 பாய்ஸ் வரை மாறுபடலாம். இவற்றுக்கு 80-90% வரை 80-90% வரை திண்மநிலை மூலப் பொருட் சுமையை (solid - loading) ஏற்றுக் கொள் ளும் தன்மையுண்டு. மிகக் கடுமையான வெப்பம், குளிர், கையாளுமை போன்ற சூழ்நிலைகளிலும், ஏவூர்திப் பொறிக் கூட்டினுள் அமைந்துள்ள எரி பொருள் தண்டு, வெடிப்பு ஏற்பட்டு விடாதவாறு அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ளும் நீட்சித்திறன் அழுத்தத் திறன், மீட்சித்திறன் உடையதாக இருக்க வேண்டும். 40 மிகக்குறைந்த கண்ணாடி மாறு வெப்பநிலையைக் (glass transition temperature tg) கொண்டிருக்க வேண்டும்; இவ்வெப்பநிலை ரப்பர் முதலிய மீட்சித் திறன் உடைய பொருள்களின் முக்கிய பண்பாகும். ரப்பரைச் சாதாரண வெப்பநிலையிலிருந்து குளிர்ச்சி செய்து கொண்டே இருந்தால், ஒரு குறித்த குளிர் வெப்பநிலையில் தன் மீட்சித்திறனை முழுது மாக இழந்து, இழுத்தால் நீளாமல் நொறுங்கி உடைந்துவிடக்கூடிய கண்ணாடித் தன்மையை அடை யும். அந்தக் குறிப்பிட்ட வெப்ப நிலையே அந்த ரப்பரின் கண்ணாடி மாறு வெப்பநிலையாகும்.