450 ஏவூர்தி உந்து எரிபொருள்
450 ஏவூர்தி உந்து எரிபொருள் நிலைப்பான்.ஏவூர்தி எரிபொருளைக் கிடங்கில் பாதுகாக்கும்போது அது எந்தவிதமான சீர்கேடு அடையாமலிருக்க அவற்றுடன் நிலைப்பான்கள் கலக்கப்படும். திண்ம எரிபொருள் தயாரிப்பின் அனைத்து நிலைகளிலும் தன்மைக் கட்டுப்பாட்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் வேதி. எந்திரவியல், எக்ஸ்-க -கதிர், நுண்ணலை ஆய்வுகள் அடங்கும். வெப்பத்தால் இறுகும் எரிபொருள்களை 60°- 80°C வரையான தாழ் வெப்பநிலையிலும், வெப்பத் தால் இளகும் எரிபொருள்களை ஏறத்தாழ 170°C வரையான உயர் வெப்பநிலையிலும் வெப்பப்படுத்து வதுண்டு. மேலும் குறிப்பிட்டுள்ள வார்ப்புமுறையில் தயாராகும் எரிபொருள் தண்டு, ஏவூர்திப் பொறிக் கூட்டோடு இணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. தவிர, எரிபொருள் தண்டைக் காற்றுலையில் வெப்பப் படுத்திய பின்னர் அச்சிலிருந்து தனியே எடுத்துத் தேவையான ஏவூர்திகளில் நிரப்புவதும் உண்டு. சில திண்ம எரிபொருள்களும் ஏவூர்திகளும் திண்ம உந்து எரிபொருள் இவ்வாறு தயாரிப்பு நிலைகளில் எரிபொருளில் தன்மைகளுக்கேற்பத் தகுந்த மாற்றங்கள் செய்வ துண்டு. இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் அரைவை எந்திரங்கள், கலவை எந்திரங்கள், காற்றுலைகள், எடைக் கருவிகள், அழுத்த அளவிகள், வெப்ப அளவிகள் ஆகிய அனைத்துக் கருவிகளும் மிக நுணுக்கமுடையவை. இத்தகைய ஏவூர்தி எரிபொருள்கள் காற்றில்லா வெற்றிடத்திலும், நீருக்கடியிலும் கூடத் தீப்பிடித்து வெப்பமும் சுடரும் வெளிவிடும் ஆற்றல் மிக்கவையாத லால் இவற்றால் தீங்கும் நேரலாம். அதனால் இவற் றைத் தயாரிப்பதிலும், கையாளுவதிலும், இடம் விட்டு வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்வது போன்ற நிலைகளிலும் பாதுகாப்பு விதிமுறை களுக்குக் கட்டுப்பட்டு இயக்க வேண்டும். . ஈரியல் இரட்டைப்பசை எரிபொருள்கள். நைட்ரோ செல்லுலோஸ், நைட்ரோகிளிசரின் ஆகிய இரட்டைப் பசை எரிபொருள்களுடன் திண்ம நிலையிலுள்ள பயன்படுத்தப்பட்ட ஏவூர்தி ஏவுகணை நாடு பாலியூரிதேன் அம்மோனியம் பெர்க்குளோரேட் நைட்ரோசெல்லுலோஸ் நைட்ரோகிளிசரின்! அம்மோனியம் பெர்க்குளோரேட் நைட்ரோசெல்லுலோஸ் நைட்ரோகிளிசரின் அலுமினியம்/ அம்மோனியம் பெர்க்குளோரேட் பாலிபியூட்டாடையீனின் பலவகைகள் அலுமினியம் அம்மோனியம் பெர்க்குளோரேட் பாலிவினைல் குளோரைடு அம்மோனியம் பெர்க்குளேரரேட் பாலிவினைல் குளோரைடு அலுமினியம்] அம்மோனியம் பெர்க்குளோரேட் போலாரிஸ் ஏ-3 முதல் நிலை அமெரிக்கா போலாரிஸ் ஏ-3 இன் இரண்டாம் நிலை. மினிட்மேன் 11 அமெரிக்கா ஸ்கௌட் செயற்கைக்கோள் ஏவும் விண்கலம்-3 (SLV-3) இன் நான்கு நிலைகளிலும் அமெரிக்கா இந்தியா சென்டார் (Centaur) இரு நிலைகள் ரோகிணி பிரான்ஸ் இந்தியா 560 இன் இரண்டாம் நிலை இந்தியா ரோகிணி-560 இன் முதல்நிலை. ரோகிணி-125, ரோகிணி 100. மேனகா இந்தியா