452 ஏவூர்தி உந்து எரிபொருள்
452 ஏவூர்தி உந்து எரிபொருள் அறைக்குள் செலுத்தும் உந்து எரிபொருள் அமைப்பைப் படம் 4இல் காணலாம். ஏதாவது ஓர் அழுத்த வளிமத்தால், எரிபொருள், ஆக்சிஜனேற்றி ஆகியவற்றை அழுத்தி, கனற்சி அறைக்குள் பாய்ச்சும் அமைப்பும் உண்டு. நீர்ம உந்து எரிபொருள்களின் அடிப்படைத் தேவை. இவை உயர் ஒப்பு விசை எண் உடையனவாக இருக்க வேண்டும். இதன் எரிவினைப் பொருள்களின் மூலக்கூறுகள் எடை குறைந்தும், எரியும்போது மிகுந்த வெப்பநிலை தருமாறும் இருக்க வேண்டும். உயர் அடர்த்தி எண் உடையதாகவும் சீராக எரியக் கூடியவையாகவும், வெப்பத்தை எளிதில் கடத்து பவையாகவும், சாதாரண வெப்பநிலையில் ஆவியாகா தவையாகவும், குறைந்த உறைநிலை, குறைந்த பாகுநிலை உடையனவாகவும், சாதாரண வெப்ப நிலைகளில் எளிதில் தீப்பிடிக்காதவையாகவும், நச்சுத் தன்மை, அரிக்கும் தன்மை அற்றனவாகவும் இருக்க வேண்டும். உள் நாட்டில் எளிதில் குறைந்த விலை யில் கிடைக்க வேண்டும். இந்த நீர்ம எரிபொருள் இருபெரும்பிரிவுகளாக வகுக்கலாம். அவை ஒரு நீர்ம உந்து எரிபொருள்கள் (mono-propellants) இரு நீர்ம உந்து எரிபொருள்கள் (bi-propellants) என்பனவாகும். களை ஒரு நீர்ம உந்து எரிபொருள்கள். இவை காண்ப தற்கு ஒரே தனி நீர்மமாக இருக்கும். இவற்றிலும் இரண்டு வகையுண்டு. இவை சாதாரண வெப்பநிலை யில் சேமிக்கத்தக்கனவாகும். ே ஓரியல் நீர்ம எரிபொருள்கள். இவ்வகை: எரி பொருள்கள் தம்மைத்தாமே எரித்துக்கொள்ளத் தவையான ஓரளவு ஆக்சிஜனை உள்ளடக்கியன வாக இருக்கும். சான்றாக, ஹைட்ரஜன் பெர் ஆக் சைடு என்னும் எரிபொருள் கால்சியம் பெர்மாங்க னேட் தடவிய ஆலண்டம் வில்லைகள் செலுத்தப்படும்போது தீப்பற்றிக் கொள்ளும். நைட்ரோமீத்தேன், எத்திலின் ஆக்சைடு, நைட்ரோ கிளிசரின் ஆகியனவும் இவ்வகையைச் சாரும். மீது மிகுதியான அழுத்தத்தினாலோ, வெப்பத் தினாலோ, வினையூக்கி மீது பீச்சப்படுவதாலோ சிதைவுற்று வெப்பமுடன் சிறிய மூலக்கூறுகளாகப் பிரியக் கூடிய நீர்ம எரிபொருள்களும் உண்டு. சான்றாக, ஹைட்ரசீன் என்ற எரிபொருள் ஏறத் தாழ 500°C வெப்பத்தில், இருபது மடங்கு காற்றழுத்தத்தில் அல்லது இரிடியம் எனும் உலோ கத்தின் மீது செலுத்தப்படும்போது நைட்ரஜன், அம்மோனியா, ஹைட்ரஜன் வளிமங்களாகச் சிதை வுறுகிறது. கூட்டு நீர்ம எரிபொருள்கள்- இரண்டாம் உலகப் போரின்போது. ஜெர்மானியரால் கண்டிபிடிக்கப் பட்ட மைரால் எனப்படும் மெத்தில் நைட்ரேட், மெத்தனால் இவற்றின் கலவை போன்றே, ஒரே " நீர்மமாகத் தோற்றமளிக்கும் இரு கூட்டுப் பொருள் களின் கலவையும் ஒரு நீர்ம உந்து எரிபொருள் ஆகும். மெத்தில் ஆல்கஹாலும், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடும் சேர்ந்த கலவை, நீர்ம அம்மோனியாவும் அம்மோனியம் நைட்ரேட்டும் சேர்ந்த ஆகியவை பிற சான்றுகளாகும். கலவை இரு நீர்ம உந்து எரி பொருள்கள். இவ்வகையில் எரிபொருளும் ஆக்சிஜனேற்றியும் இருநீர்மங்களாகத் தனித்தனியே பாதுகாக்கப்பட்டுக் கனற்சி அறைக்குள் கலந்து எரிக்கப்படுகின்றன. இவற்றைப் பாதுகாக்கும் முறைப்படி மூன்றாகப் பிரிக்கலாம். அவை, சேமிக்கத் தகும் நீர்ம எரிபொருள்கள், அதிகுளிர்ப்பதன நீர்ம எரிபொருள்கள், பகுதி அதிகுளிர்பதன நீர்ம எரி பொருள்கள் என்பன. சேமிக்கத்தகும் நீர்ம எரிபொருள்கள். சாதாரணக் காற்றழுத்தத்தில் ஏறத்தாழ 25° -70°C வெப்ப வரை கெடாமல் நிலையில், 2-5 ஆண்டுக்காலம் பாதுகாக்கத் தகுந்த நீர்ம எரிபொருள்கள் இவ் வகையுள் அடங்கும். எரிபொருள்கள். காசோலின், RP-1 எனப்படும் மண்ணெண்ணெய் வகை ஹைட்ரசீன், மெத்தில் ஹைட்ரசீன், சீரற்ற டைமெத்தில் ஹைட்ரசீன் போன்ற சிவ வகை, ஹைட்ரசீன் ஹைட்ரைடுகள். ஆகியவை. போரான் ஆல்கஹால்இன எரிபொருள்கள் ஆக்சிஜனேற்றிகள். வெண்புகை நைட்ரிக் அமிலம் செம்புகை நைட்ரிக் அமிலம் நைட்ரஜன் டெட்ராக்சைடு முதலியன. மேற்கண்ட ஏதே னும் ஓர் எரிபொருளுடன் ஓர் ஆக்சிஜனேற்றியைக் கலந்து பலவகை உந்து எரிபொருள் அமைப்புகளை உண்டாக்கலாம். மிகுகுளிர்பதன நீர்ம எரிபொருள்கள். இவை நீர்ம மாக்கப்பட்ட வளிமங்களாகும். இவற்றின் கொதி நிலை பனிக்கட்டி உருகுநிலையைவிடப் பன்மடங்கு தாழ்ந்ததாகும். பகுதி மிகுகுளிர்பதன நீர்ம எரிபொருள்கள். இவ் வகையில் எரிபொருளோ ஆக்சிஜனேற்றியோ மிகு குளிர்பதன நீர்மமாக இருக்கும். எடுத்துக்காட்டாக RP-1 எனப்படும் மண்ணெண்ணெய் இன எரிபொருளு டன் நீர்ம ஆக்சிஜனைப் பயன்படுத்தலாம். மேலும் இரு நீர்ம உந்து எரிபொருள்களின் கலப்புத் தரும் விளைவைப் பொறுத்து இவற்றை இருவகைப்படுத் தலாம். அவை, உடன் தீப்பற்றும் கலவை உடன் தீப்பற்றாக் கலவை என்பனவாகும். உடன் தீப்பற்றும் கலவை. எரிபொருளும் ஆக்சிஜ னேற்றியும் கலந்த உடனேயே ஏறத்தாழ 50 மில்லி வினாடிகளுக்குள்ளாகத் தானாகவே தீப்பற்றிக் கொள்ளும் உந்து எரிபொருள் கலவையை, உடன்