பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏவூர்திக்‌ கட்டம்‌ 455

பிரிக்கக்கூடிய கட்டம் தன்மை,அரிக்கும் தன்மை கொண்டது. அதனா லேயே முழு உருப்பெற்ற ஏவூர்தி செலுத்தப்படுவதற் குச்சில மணி நேரங்களுக்கு முன்னர் மட்டுமே. நீர்ம எரிபொருள்கள் ஏவூர்திகளுக்குள் நிரப்பப்படுகின்றன. திண்ம எரிபொருள் ஏவூர்திப் பொறித் தயாரிப்பை விட, நீர்ம எரிபொருள் ஏவூர்தி அமைப்பதற்கு மிகுதி யான ஆள்களும், ஆற்றலும், காலமும் தேவைப்படும். திண்ம எரிபொருள்கள் நீர்ம எரிபொருள்களைவிடக் குறைந்த விலையுடையன. மேற்குறித்த ஒப்பீட்டுத் தேர்வினால் பெரும்பாலும் கொலம்பியா. டான் போன்ற ஏவூர்தியின் முதல் நிலைகளில் திண்ம உந்து எரிபொருள்களும் பயன்படுகின்றன. டைட் கலப்பு நிலை உந்து எரிபொருள்கள். இவ்வகை உந்து எரிபொருள்களால் இயங்கும் ஏவூர்திப் பொறி களில், எரிபொருள்-ஆக்சிஜனேற்றி இவற்றில் ஒன்று திண்ம நிலையிலும் மற்றொன்று நீர்ம நிலையிலும் இருக்கும். இந்த ஏவூர்தி அமைப்பைப் படம் 6 இல் காணலாம். ஞெகிழி போன்ற பொருளுடன் அலுமினியத் தூள் கலந்து தயாரிக்கப்பட்ட திண்ம எரிபொருள் அறையினுள், நைட்ரிக் அமிலம் அல்லது ஹைட் ரஜன் பெர்ஆக்சைடு போன்ற ஏதேனும் ஒரு நீர் ஆக்சிஜனேற்றியைச் செலுத்தும்போது, உடனே தீப் ஏவூர்திக் கட்டம் 455 பிடித்து வெப்பமும் அழுத்தமும் மிகுந்த வளிமங் களை வெளியிடும். இதைக் கூம்புக் குழல் வழியே விரிந்து வெளியேறச் செய்து ஏவூர்திகள் இயக்கப் சு.முத்து படும். ஏவூர்திக் கட்டம் ஏவூர்தியின் எரிபொருளை ஒரே கொள்கலனில் இட்டுச் செல்லுமாறு வடிவமைத்தால், உயரே செல்லச் செல்ல. எரிபொருளின் அளவு குறையும் போது வெறுமையாக இருக்கின்ற கொள்கலப் பகுதி யின் பளுவையும் சேர்த்து இழுப்பதற்காக ஏவூர்தி யின் ஆற்றல் வீணாக்கப்படுகிறது. எனவே கொள் கலனைப் பல சிறு கட்டங்களாகப் (பகுதிகளாகப்) பிரித்தால், ஒரு பகுதியின் எரிபொருள் தீர்ந்தவுடன் அப்பகுதியை மட்டும் ஏவுர்தியிலிருந்து பிரித்து நீக்கி விடலாம். இதனால் அந்தத் தேவையற்ற வெற்றுப் பகுதியை இழுத்துச் செல்லத் தேவையான ஆற்றல் குறைகிறது. இத்தகைய சில காரணங்களுக்காக ஏவூர்தியை ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்கவும் நீக்கவும் முதற்கட்டம் இரண்டாம் கட்டம் பகுதிப்பிரிவு தொடர்பிரிவு இறுதிக்கட்டம் மூன்றாம் கட்டம் இணைப்பிரிவு படம் 1 (அ) ஏவூர்திக் கட்ட வகை பிள்பிரிவு நிலை நிறுத்தி