பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏவூர்திப்பொறி 457

கூடியதாக, பல்வேறு பகுதிகளாக வடிவமைத்தல் ஏவூர்திக் கட்டங்கள் (rocket staging) எனப்படும். இதன் முதற்கட்டம் பொதுவாக மிகப் பெரிய தாகவும் கனமானதாகவும் வடிவமைக்கப்படுகிறது. இப்பகுதியே ஏவூர்தியை முதலில் உந்திச் செல்வதால் இது (booster) ஊக்கி மற்ற எனப்படுகிறது. தொடர்ச்சியான கட்டங்கள் யாவும் முதலில் உருவாக் கப்பட்ட உந்து பாதையைத் தொடர்ந்து செல்ல உதவுவதால் அவை நிலைநிறுத்தி (sustainer) எனக் குறிப்பிடப் படுகின்றன. ஒவ்வொரு கட்டமும் தன்னளவில் நிறைவான தனி ஊர்தியாகவே வடிவமைக்கப்படுகிறது. ஒவ் வொரு கட்டத்திலும் அதற்குத் தேவையான எரி பொருள், திசைமாற்றுங்கருவி, போதுமான அளவுள்ள கொள்கலன், கட்டுப்பாட்டு அமைப்புகள் இருக் கின்றன. ஏவூர்தியில் ஏதேனும் ஒரு கட்டத்தின் எரி பொருள் தீர்ந்தபின் அந்தப் பகுதியால் ஏவூர்தியின் இயங்கு ஆற்றலை அதிகரிக்க இயலாது. அந்தக் கட்டத்தினால் ஏவூர்திக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே அக்கட்டத்தை இழந்து விடுவதன் மூலம், ஏவூர்தியின் பளு குறைகிறது. தேவையற்ற கட் டத்தை இழுத்துச் செல்லத் தேவையான ஆற்றல் மிச்சமாவதால் அந்த ஆற்றலை எஞ்சிய கட்டங் களோடு ஏவூர்தியின் வேகத்தை அதிகரிக்கப் பயன் படுத்தலாம். குண்டு போன்ற தளவாடங்களை மிகுத் செல்லும் தொலைவு கொண்டு ஏவூர்திகளிலும், விமான எதிர்ப்பு ஏவூர்திகளிலும், காற்றில் ஏவப்படும் ராணுவ ஏவூர்திகளிலும் இம்முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, இரண்டாவது சுட்டம் இயங்கத் தொடங்கிய உடனேயே முதற்கட்டத்தின் இயக் கத்தை நிறுத்துதல் நல்லது. நடைமுறையில் இத் தகைய சீரான செயல்பாடு நிகழ்வதில்லை. விண்வெளி யில் புவி ஈர்ப்பு விசை இல்லாமை உடனிழுத்துச் செல்லும் விசை, உடனுக்குடன் ஆக்கவோ நிறுத் தவோ இயலாத ஏவூர்தியின் உந்து பொறி கட்டங் கள் ஒன்றன் மேல் ஒன்று மேற்படிதல் போன்ற பல உள்ளார்ந்த குறைகளால் ஒரு கட்டத்தைப் பிரித்து எடுத்தல் மிகவும் சிக்கலாகி விடுகிறது. பொதுவாக, கட்டங்களைப் பிரிப்பதற்காகவே தனிப்பட்ட வடி வமைக்கப்பட்ட ஏதேனும் ஒரு எந்திர அமைப்பு ஏவூர்தியோடு இணைக்கப்படுகிறது. இந்தக் கட்டங்கள் பல வகையில் அமைக்கப் படலாம். வால்போன்ற சிறு கீழ்ப்பகுதி மட்டும் பிரிக்கக் கூடியதாக இருந்தால் அது பகுதிப் பிரிவுக் கட்டம் எனப்படுகிறது. ஒன்றன் பின் ஒன்றாகப் பிரிக்கக் கூடிய பல கட்டங்கள் அமைந்து இருந் அவைதொடர்பிரிவுக்கட்டம் தால் எனப்படும். ரவூர்திப்பொறி 457 ஏவூர்தியைச் சுற்றிலும் இணையாகப் பிரிக்கக்கூடிய கட்டங்கள் இருந்தால் அவை இணைப் பிரிவுக் கட்டம் எனப்படுகிறது.ஏதேனும் ஒரு கட்டம் மட்டும் ஏவூர்தி யின் கீழ்ப்புறத்தில் இணைக்கப்பட்டால் அது பின் பிரிவுக் கட்டம் எனப்படுகிறது. இவ்வகை அமைப்புகள் படம் 1-இல் காட்டப்பட்டுள்ளன. நன்மைகள். ஏவூர்தியைக் கட்டங்களாகப் பிரிப் பதால் அது செல்லும் தொலைவை மிகுதியாக்க முடியும்.ஏவூர்தியின் வேகத்தை மிகுதிப்படுத்தலாம். மிகுஉயரத்திற்கு செலுத்தலாம். ஏவூர்தியின் இறுதிக் கட்டம் எடுத்துச் செல்ல வேண்டிய எடையை அதி கரிக்கலாம். ஏவூர்தியைக் கட்டங்களாகப் பிரிக்கும் வடிவ மைப்பில் மிகு தொல்லைகள் உள்ளமையால் பெரும ல்லாதவாறு அளவாக ஏழுகட்டங்களுக்கு மேல் ஏவூர்தி உருவாக்கப்படும். ஏவூர்திப்பொறி வயி. அண்ணாமலை எவூர்தியை விசையோடு உந்தித்தள்ள உதவும் திறன் மிக்க முதன்மையான மைய உறுப்பே ஏவூர்திப் பொறி (rocket engine) ஆகும். ஏவூர்திகளில், பொது வாக வேதி ஆற்றல், அணுக்கரு ஆற்றல், மின்னாற்றல் சூரிய ஆற்றல் போன்ற ஏதேனும் ஓர் ஆற்றல் உரு வாக்கும் பொறி, கட்டமைக்கப்படும். உட்செலுத் தப்படும் வேதி உந்து எரிபொருள்களே பெரும் பாலான ஏவூர்திகளின் ஆற்றல் மூலமாகும். இந்த எரிபொருள்களை எரித்து வேதி ஆற்றலை, வெப்ப ஆற்றலாக மாற்றவும் அவ்வினையின் போது வெளிப். படும் அழுத்தமிக்க வளிமங்களைக்கூம்புக் குழல் வழியாக வெளியேற்றுவதால் ஏவூர்திக்குப் போதிய விரைவாற்றல் ஊட்டுவதுமே ஏவூர்திப் பொறியின் பணியாகும். . ஏவூர்திப் பொறியின் பகுதிகள் ஏவூர்திப்பொறியைத், தள்ளுவிசைக்கலன் என்றும் குறிப்பிடுவர். இதில் கனற்சி அறை, கூம்புக் குழல் ஆகிய பகுதிகள் முக்கியமானவை. கனற்சி அறை. பரவலாகப் பயன்படும் மரபுக் கனற்சி அறை புறப்பகுதியில் குவிந்து விரிந்த கூம்புக் குழல் பொருத்தப்பட்டதாக இருக்கும். இதன் குறுகலான நடுப்பகுதியைக் கூம்புக்குழல் தொண்டை (nozzle throat) என்பர். கனற்சி அறைக் குறுக்கு வெட்டுப் பரப்பு முடிவிலியாக இருப்பின், சீரிய கனற்சி அறை என்றும், கூம்புத் தொண்டைப் பரப்பளவே உடையதாயின் நேரிய கனற்சி அறை என்றும் குறிப்பிடப்படும்.