பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏவூர்திப்பொறி 459

வளிமப் பாய்வு தொண்டைப் பரப்புத்தளம் விரைவு ஏவூர்திப்பொறி 459 (effective exhaust .velocity) ஆகும். ஆயினும், இவ்வெண்ணைப் புவிஈர்ப்புவிசை முடுக்க எண்ணால் வகுத்து வெறும் நொடி அளவுகளிலேயே ஏவூர்தி அறிவியலார் குறிப்பிடுவர். அழுத்தம் விரைவு கூம்பு மணிவடிவம் வெப்பநிலை அடர்த்தி வெளிக் காறறழுத்தம் படம் 3. கூம்புக்குழலில் நிகழும் இயல்பு மாற்றங்கள் தொண்டை 159 புறவாய் படம் 4. 15° அரைக்கோணக் கூம்புக்குழல் F = mv, அல்லது F/m = vg தள்ளுவிசை நிறைப்பாய்வேகம் =U = வளிமங்களின் வெளியேற்ற வேகம் தொகு வெளியேற்றவேகம் } வேகம் இவ்வாறு, தள்ளுவிசையின் நிறைபாய்விகிதத்தி னால் வகுத்துப் பெறுவதே எரிபொருளின் ஒப்பு உந்து விசைஎண் (specific impulse, Isp) ஆகும். இவ்வெண் ஏவூர்தி இயக்கத்திற்குரிய தொகு வெளியேற்ற செருகு حالے விரிதல்-விலக்கல் படம் 5. கூம்புக்குழல் வடிவமைப்புகள் கூம்புக்குழல் வடிவமைப்புகள் டி-லேவல் கூம்புக்குழல். பெரும்பாலான ஏவூர்திப் பொறிகளில் பயன்படும் கூம்புக்குழல் குவிந்தும், புகைப்போக்கிப் புனல்போல விரிந்தும் காணப்படும். இவ்வடிவமைப்பை முதன்முதலில் அமைத்த ஸ்வீடன் நாட்டுப் பொறியியலாளரின் பெயரால் டி பேவல் கூம்புக்குழல் என்று சுட்டப்படுகிறது. பெரும்பாலும் கூம்பின் அரைக்கோணம் ஏறத்தாழ 12° -18° அளவாகும். மணி வடிவக் கூம்புக் குழல். புறவாய்ப் பரப்பிற் கும் தொண்டைப் பரப்பிற்கும் இடையே உள்ள விகிதமே புறக் கூம்புக்குழல் விரிபரப்பு விகிதம் (nozzle expansion ratio) எனப்படும். ஒரு குறித்த விரிபரப்பு விகிதம் கொண்ட கூம்புக் குழலால் மட்டுமே ஏவூர்தியின் பயன் மிகுதியாக இருக்கும். இவ்விகிதமே ஏவூர்தியின் மிகு பயன் விரிபரப்பு விகிதம் ஆகும். இதே விகிதம் கொண்ட சாதாரண கூம்புக் குழலின் நீளத்தை மட்டும் குறைத்து, ஆலய மணிபோல தொண்டைப் பகுதி யிலிருந்து 60° விரிந்து, புறவாய் விளிம்பில் மீண்டும் ஒடுங்கி 2°-8° க்குள் சமனப்பட்டுவிடும் வடிவமைப் பாலும் மிகு பயன் பெறலாம். இந்த மணிவடிவக் கூம்புக் குழாயின் நீளம் குறைக்கப்படுவதால் அதன் எடையும் குறையும். ஏவூர்தியின் மிகுந்துள்ள நிலைம எடைக் குறைப்பு ஏவூர்திப் பொறியின் திறனையும் மிகையாக்குகிறது. செருகுக்கூம்புக் குழல். மணிவடிவக் கூம்புக் குழல் நடுவே, முறுக்காணி போன்ற செருகு அமைப்பு பொருத்தப்படுவதால், ஏவூர்திப் பொறி உருவாக்கும் தள்ளுவிசைத்திசையைக் கட்டுப்படுத்த இயலும்.