460 ஏவூர்திப்பொறி
460 ஏவூர்திப்பொறி (000) தாரைத்தகடுகள் தாரைத் தகட்டுச் சுருள்கள் தொங்காட்டக் கூம்புக்குழல் ரண்டாம் பாய்ம உட்செலுத்துகை படம் 6. சில திண்ம உந்து எரிபொருட் பொறிகளில் பயன் படுத்தப்படும் தள்ளு விசைத் திசைக்கட்டுப் பாட்டுக் கருவிகள் தள்ளுவிசைத் திசைக் கட்டுப்பாடு. கூம்புக் குழலின் வெப்ப வளிமங்களின் போக்கில் அசையும் நடு செருகு அல்லது கூம்புக் குழல் விளிம்பில் சுழலுமாறு அமைக் கப்பட்ட உருண்டைவடிவத் தகட்டுச் சுருள்கள் (jetavators), தாரைத் தகடுகள் (jet vanes) Cumm வற்றால் தள்ளுவிசையின் திசையில் திருத்தங்கள், மாற்றங்கள் போன்றவற்றை எளிதில் உண்டாக்க லாம். மேலும், கூம்புக்குழலின் சுவர் ஊடாக, எளிதில் ஆவியாகி அழுத்தம் ஊட்டவல்ல இரண்டாம் பாய் மத்தினை (secondary fluid) ஆங்காங்கே உட்செலுத் தியும் தள்ளுவிசைத் திசையைத் திருத்த இயலும். கூம்புக்குழலைக் கனற்சி அறையின் பின் வாயிலில் சுழன்று அசையுமாறு மென்மையானதும், வெப்ப வளிமங்களால் தாக்கப்படும் போது வலிமை குறை யாததுமான ரப்பர் வளையங்களுடன் இணைத்துப் பொருத்துதல் வேண்டும். இதைத் தொங்காட்டக் கூம்புக் குழல் (gimballed nozzle) என்பர். ஒருசில ஏவூர்திகளில் ஏவூர்திப் பொறியே தள்ளு விசைத் திசைக்கேற்ப தொங்காட்டம் புரியுமாறு வடிவமைக்கப்படும். இதைத் தொங்காட்டப்பொறி என்றும் குறிப்பிடுவர். இவையன்றி ஏவூர்திப் பொறி யினைச் சுற்றிலும் சிறு தள்ளுவிசைப் பொறிகள் (thrusters) அல்லது நுண் ஏவூர்திகளே (micro rockets) இணைக்கப்படுவதும் ஏவூர்தித் தள்ளுவிசையின் திசை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். மாறுவிசை ஏவூர்திப் பொறிகள். ஏவூர்திப் பொறி ஊட்டும் தள்ளுவிசையின் அளவைத் தேவைக்கேற்ப கூட்டவோ, குறைக்கவோ வல்ல அமைப்புகளும் உண்டு. திண்ம உந்து ஏவூர்திப் பொறிகளைக் காட்டி லும் நீர்ம உந்து ஏவூர்திப்பொறிகளில் தான் தள்ளு விசை அளவை எளிதில் மாற்றலாம். நீர்ம உந்து பொறிகளில் எரிபொருள் உட் செலுத்திகளின் இயக்கத்தினை ஒவ்வொன்றாக நிறுத்துவதன் மூலம் படிப்படியாகத் தள்ளுவிசை யினைக் குறைக்கலாம். ஜெர்மன் நாட்டு Me - 163, ஏவூர்திப் பொறி இதற்கு எடுத்துக்காட்டாகும். அன்றி பொறி நெருக்குதல் (engine throttling) முறைப்படி உட்செலுத்திகளின் பரப்பளவை வேறு படுத்தியோ, முன்னர் குறிப்பிட்டது போல கூம்பின் தாண்டைப்பரப்பை வேறுபடுத்தியோ, அதனுள் ஓர் அசையும் செருகைச் செருகியோ தள்ளுவிசை யைக் கட்டுப்படுத்தலாம். ஏவூர்தி திட்டமிட்டபடி பயணம் செய்யவில்லை யெனில் அதன் இயக்கத்தை முழுதுமாக நிறுத்த. ஏவூர்திப் பொறியின் வெளிப்புறத்தில் நீளவாட்டில் வைக்கப்பட்ட வெடி நாளங்களைத் (explosive cords) தாரைத் தகடுகள் ரண்டாம் பாய்ம உட்செலுத்துகை G0003 அசையும் நடுச்செருகு தொங்காட்டப் பொறி படம் 7. சில நீர்ம உந்து எரிபொருள் பொறிகளில் பயன் படுத்தப்படும் தள்ளுவிசைத் திசைக் கட்டுப்பாட்டுக் கருவிகள்.