பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏவூர்திப்பொறி 461

தூண்டி வெடிக்கச் செய்வதுண்டு. ஏவூர்திப்பொறி யைத் துண்டாகப் பிளந்து அக அழுத்தமூட்டும் வெப்ப வளிமங்களை வெளியேற்றிவிடும் இம்முறை மிக அரிதாக பயன்படுத்தப்படும். வெப்பப் பரிமாற்றம். ஏவூர்திப் பொறியின் கனற்சி வினை, தள்ளுவிசை அறைச்சுவர்கள், கூம்புக் குழல்கள் எரிபொருள் உட்செலுத்திகள் போன்ற உறுப்புகளைச் சூடாக்குவதால் அக வெப்பநிலை குறையக் கூடும். இவ்வாறாயின் பொறி திறன் குறையும். வெப்ப இழப் பூட்டும் இத்தகைய வெப்பப்பரி மாற்றத்தைக் கட்டுப் படுத்த இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன. நீர்ம உந்து எரிபொருளால் குளிர்வித்தல் மீளுருவாக்கக் குளிர்விப்பு. இம்முறையில் நீர்ம எரிபொருளை ஏவூர்திப் பொறியின் புறச்சுவரில் சுற்றியுள்ள குளிர்விப்புச் சுருள் வழி செலுத்துவர். வெளிச்சுவர் வெப்பத்தால் சுருள்குழாயினுள் சூடான எரிபொருள், மீண்டும் கனற்சி அறைக்குள்ளேயே செலுத்தப்படும். இதனால் பொறியூட்டும் வளிமங் களின் வேகமும் ஓரளவு (2%) உயரும். இம்முறையை மீளுருவாக்கக் குளிர்விப்பு என்பர். அமெரிக்க வைக்கிங் ஏவூர்திப் பொறியில் இம்முறையே கையாளப்படுகிறது. மென்படலக் குளிர்விப்பு. நீர்ம எரிபொருளைக் கனற்சி அறை உட்சுவரில் மென்படலமாக ஒழுக விட்டும் வெப்பப் பரிமாற்றத்தைக் குறைக்கலாம். இதை என்பர். ஏவூர்திப்பொறி 461 மென்படலக் குளிர்விப்பு (film cooling) வியர்ப்புக் குளிர்விப்பு. கனற்சி அறைச் சுவரை நுண்துளை கொண்டதாக வடிவமைத்து அச்சுவரின் ஊடாக வெளிப்புறத்திலிருந்து நீர்ம எரிபொருளை அறை உட்பகுதியில் வியர்வைத்துளிகளாகக் கசிய விடுவதன் மூலமும் உள்வெப்பம் வெளியேறாமல் தடுக்கலாம். உட்சுவரில் துளிர்க்கும் எரிபொருள். வெப்பத்தைத் தானே உறிஞ்சி ஆவியாகிவிடும். இம்முறை வியர்ப்புக் குளிர்விப்பு (sweat cooling) எனப்படும். ஆக்சிஜனேற்றி நுழைவாய் தேய்மானம் அல்லது 2.லோகக் கூடு பீங்கான் பூச்சு உட்செலுத்தி துளைமுகம் உட்செலுத்தி கனற்சி அறை கூம்புக்குழல் எரி பொருள் நுழைவாய் புறவாய் படம் B. குளிர்விக்கப்படாத நீர்ம உந்து தள்ளுவிசைக்கலன் CAPECTED BALLISTICS PROPERTIES AT SEALEYEL OTHERS படம் 9. நிலை ஆய்வுக்குத் தயாராகவுள்ள ஏவூர்திப்பொறி