பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 ஏவூர்தி, வானியல்‌

464 ஏவூர்தி, வானியல் பொறிவகை செயல்படு பாய்மம் செயல்படு ஒப்பு உந்து கால அளவு விசை எண் (நொடியில்) தள்ளுவிசைக்கும் எடைக்குமுள்ள விகிதம் வேதிவகை நீர்ம ஹைட்ரஜனும் நீர்ம ஆக்சிஜனும் பலநொடி முதல் 200-480 100 சில மணி நேரம் அணுக்கருப்பிளவு ஹைட்ரஜன் 500-1100 30 மின்வில் - சூடாக்கம் ஹைட்ரஜன் நாள் 1000-2000 0.01 காந்தப் பேரழல் வாரம் 4000-1500 0.001 அயனி சீசியம் மாதம் 5000-25000 0.001 ஏவூர்திப் பொறிவகைகள். ஏவூர்திப் பொறியை ஆற்றல் மூலத்திற்கேற்ப ஐம்பெரும் வகைகளாகப் பிரிக்கலாம். அவை வேதி ஏவூர்திப் பொறி, அணுக் கரு ஏவூர்திப்பொறி, மின் ஏவூர்திப்பொறி, லேசர் ஏவூர்திப்பொறி, சூரிய வெப்ப ஏவூர்திப்பொறி என் பனவாகும். செயல்பாட்டு பல்வேறு ஏவூர்திப்பொறிகளின் அளவைகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அயனிப்பொறி நீண்டகாலம் செயல்படக்கூடிய தும், மிக உயர்ந்த ஓப்பு உந்து விசை எண் கொண்டது மாயினும், வேதிப் பொறியோடு ஒப்பு நோக்கும் போது ( ஒரு கிலோகிராம் எடையுள்ள பொறியினால் ஊட்டப்படும் தள்ளுவிசை அளவாகிய) தள்ளுவிசை எடை விகிதம் அயனிப்பொறியில் பதினாயிரம் மடங்கு குறைவாகும். எனவே பெரும்பாலான ஏவூர்திகளில் வேதிப்பொறி அமைப்பே பயன்படுகின்றது. ஏவூர்தி, வானியல் முத்து விண்பொருள்களால் உமிழப்படும் மின்காந்த அலை களைக் கொண்டே பேரண்டத்தில் எங்கும் சிதறிய வாறு காணப்படும் சூரியன் போன்ற விண்மீன்கள். அவற்றை வலம் வந்த வண்ணமிருக்கும் கோள்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. இம்முயற்சிகளின் வளர்ச்சியே வானியல் எனப்படு கிறது. வானியல் ஆய்வுகளுக்கு வெறும் கட்புலனுக்கு உள்ளாகும் ஒளி அலை மட்டுமின்றி அகச்சிவப்பு, புற ஊதா, எக்ஸ் கதிர் காமா கதிர் போன்ற கதிர் களும் பயன்படுகின்றன. பேரண்ட வெளியிலிருந்து வரும் இம்மின்காந்த அலைகள் புவியைச் சுற்றி ஏறக் குறைய 300 கி. மீ வரை பரவியுள்ள வளி மண்டலத் தின் பல அடுக்குகளை ஊடுருவிச் செல்லும்போது, களை . பெருமளவு உட்கவரப்பட்டு விடுகின்றன. புவியை எட்டும்போது அவற்றின் செறிவு மிகவும் குறைவாக இருப்பதால், ஆய்வுகளிலிருந்து முழுமையான தெளிவு பெறுவது இயலாததாக உள்ளது. இதற்காக வளிமண்டலத்திற்கு அப்பால் இருந்து வானியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் தேவையாகின்றது. பலூன்களும், ஏவூர்திகளும் இதற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி வானியலில் ஆய்வு செய்யும் பகுதியை விளக்குவது ஏவூர்தி வானியல் (rocket astronomy) ஆகும். ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வளிமங் உயர் கொள்ளவுடைய பலூன்களில் அடைத்து, ஏற்ற ஆய்வுக்கருவிகளைப் பொருத்தி வுளி மண்டலத்தில் விட்டுவிடுகின்றார்கள். இவை வானத் தில் பறப்பதால், வளிமண்டலத்தின் உட்கவர்வு ஓரளவு தவிர்க்கப் படுகின்றது. அண்டக் கதிர்கள் (cosmic rays) பற்றிய ஆய்வுகளில் இப்பலூன்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பலூன்கள் பொது வாக 30 கிலோமீட்டர் வரையே மேலெழுத்து சென்று பயன் தரக் கூடியன. இதைவிடக் கூடுதலான உயரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வு களுக்கு ஏவூர்திகளும், செயற்கைக் கோள்களும் பயன்படுகின்றன. ஏவூர்திகளில் நீர்ம அல்லது திண்ம எரிபொருள்கள் எரிக்கப்பட்டு, வெளிப்படும் வெப்ப மிக்க வளிமம் சிறுதுளை வழியே வெளியேற்றப்படு கின்றது.அப்போது ஏவூர்தி, ஈர்ப்பு விசைக்கு எதிராக உந்தப்பட்டு மேலெழுந்து செல்கின்றது. வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படும் வூர்திகள், மீவிசும்பாய்வு ஏவூர்திகளாகவும் (sounding rocket), செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தப்பயன்படுகின்ற ஏவூர்திகளாகவும் உள்ளன. மீவிசும்பாய்வு ஏவூர்திகள் 250 கி.மீ.உயரம் வரை செல்லக் கூடியவை. செயற் கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தப் பயன் படுகின்ற ஏவூர்திகள் பல அடுக்குக் கொண்டவையாக இருக்கும். புவியின் ஈர்ப்பு எல்லையை விட்டு அப்பால் செல்லவும் இவற்றால் முடியும்.