466 ஏவூர்தி, வானியல்
466 ஏவூர்தி வானியல் அலை சமச் நீளங்களைப் சீரற்றதாக பார்த்தபொழுது, குறுகிய சூரியன் பொறுத்தமட்டும், விளங்குகின்றது என்பது புலனாயிற்று. சூரியத் தீக் கொழுந்து (solar flame) ஒரு சூரியக் கரும்புள்ளிக்கு அருகிலேயே ஏற்படுகின்றது என்பதையும். சூரியக் கரும்புள்ளிப் பகுதிகளில் காந்தப்புல வலிமை மிக மிக அதிகமாக இருக்கின்றது என்பதையும் ஏவூர்தி வானியல் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள இந்தச்சூரியக் கரும் புள்ளிகளின் இயக்கங்கள், புவியின் பருவ காலங்களில் குறிப்பிடும் படியான மாற்றத்தை உண்டுபண்ணுகின்றன என்பதால், இவை தொடர்பான ஆய்வுகள் முக்கியமானதாகக் கருதப் படுகின்றன. ஏவூர்தி வானியலின் பயனாகச்சூரியனின் வளி மண்டலம் பற்றிய கருத்துக்கள் தெளிவடையத் தொடங்கியிருக்கின்றன. இரும்பு அதைவிடக் கன மான பிற தனிமங்கள் புவியில் மதிப்பிட்டதைவிடக் கூடுதலாக, குறைந்தது இன்னும் 10 மடங்கு மிகுதி யாக இருக்கக் கூடும் என்பது ஏவூர்தி வானியல் ஆய்வு கள் மூலம் பெறப்பட்ட உண்மையாகும். அணு நிற மாலையியல் ஆராய்ச்சியில் இது பல திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. பல கருத்துகள் விளக்கங்களைப் பெற்றிருக்கின்றன. புதிய மிக அருகில் இருக்கக்கூடிய விண்மீன் சூரியன் மட்டும்தான். பிற விண்மீன்களைப் பற்றிய ஆய்வே முன்னோடி என்பதால், இவ்வாய்வுகளை நுட்பமா கவும், ஐயத்திற்கிடமின்றியும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஏவூர்தி வானியல் இதற்குப் பெரிதும் துணை புரிகின்றது. மட்டு சூரியனைத் தவிர பிற விண்பொருள்களுக்கு ஏவூர்தி வானியல் முறைகள் கடினமானவை மல்லாமல் அளவீடுகள் குறைந்த நுட்பத் திறனுடைய வாகவும் இருக்கின்றன. எனினும் வானியல் ஆய்வில் இதன் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. எக்ஸ் கதிர் விண்மீன்கள் பேரண்டத்தில் இருக்கலாம் என்ற உண்மை முதன் முதலில் ஏவூர்தி வானியல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகும். விண் மிகக் குறைந்த பிறழ்ச்சியுடன் கூடிய ஒளியியல் அமைப்புகளினால் சில விண்மீன்களின், குறிப்பாக அதிக வெப்பநிலையில் இருக்கின்ற விண்மீன்களின் நிறமாலை ஆராயப்பட்டது. இவ்வாய்வுகள் மீன்களின் வளி மண்டலம் பற்றிய உண்மைகளைப் புலப்படுத்தின. ஓரியன் விண்மீன்குழுவில் உள்ள வெப்ப மிக்க பெரிய விண்மீன்களை ஆராய்ந்த பொழுது, அதனால் உமிழப்படும் புறஊதாக் கதிர்கள் டாப்ளர் பெயர்ச்சிக்கு உட்படுகின்றன என்பது தெரிய வந்தது. இது அதன் நிறை குறைந்து கொண்டே வருகின்றது என்பதையும், இறுதியாக அது ஒரு குறு வெள்ளை விண்மீனாக (white dwarf )மாறலாம் என்பதையும் தெரியப் படுத்துவதாக அமைந்திருக் கின்றது. ஏரோபீ ஏவூர்திகள் விண்வெளியில் இருக்கும் எக்ஸ் கதிர் மூலங்களை நன்கு புலப்படுத்திக் காட்டி யுள்ளன. நளி விண்மீன்குழு (scorpion) 1962-ஆம் ஆண்டில் scorpius XR - 1 என்று குறிப்பிடப்படும் ஓர் எக்ஸ் கதிர் உமிழ் மூலமாக இருப்பது அறியப் பட்டது. ஏறக்குறைய 100 ஒளி ஆண்டுக்கப்பால் உள்ள இது தன் ஆற்றலை 99.9 விழுக்காடு எக்ஸ் கதிர்களாக உமிழ்கின்றது. இதன் கண்டுபிடிப்பு வூர்தி எக்ஸ் கதிர் வானியல் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. 1968இல் எக்ஸ் கதிர்களை உமிழும் மாறொளிர் விண்மீனைக் (pulsar) கண்டுபிடித்திருக் கின்றனர். மாறொளிர் விண்மீன் என்பது மாறிமாறி ஒளிவிடும் ஒரு சுழலும் நியூட்ரான் விண்மீனாகும். இவற்றைப் பற்றிய ஆய்வுகளால், அண்டத்தின் பிறப்பு அதன் இறுதி நிலை பற்றியும் ஓரளவு ஊகித் தறிய முடியும். புவியியல் ஆய்வுகள். ஏவூர்தி வானியலைக் கொண்டு புவியின் அயன மண்டலம், துருவ ஒளி புவியின் புற வளிமண்டலப் பகுதி இயைபு போன்ற வற்றை ஆய்ந்தறிய முடிகிறது. சூரியனின் சில உமிழ் வரிகள் எங்ஙனம் வளி மண்டலத்தில் மெலிவடைகின் றன என்பதை மதிப்பிட்டு இதை அறிகின்றார்கள். அயன மண்டலத்தின் தோற்றம், சூரியகதிர் வீச்சுக் களினால் அதன் உட்சேர்க்கையால் ஏற்படும் மாற் ஏவூர்தி வானி றங்கள் பற்றியும் அறிந்து கொள்ள யல் பயன்படுகின்றது. தொலைதூரக் கம்பியில்லாச் காட்சி செய்திப் போக்குவரத்திற்கும் தொலைக் ஒளிபரப்பிற்கும் இந்த அயன மண்டலம் பெரிதும் துணைபுரிகின்றது என்பதால், இம்மண்டலத் தொடர் பான ஆய்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படு கின்றது. மெள்ள சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் வளி மண்டலத்திலுள்ள ஓசோன் அடுக்கினால் பெருமளவு உட்கவரப்படுகின்றன என்பதால் ஆற்றல் மிக்க அக் கதிர்கள் புவியைத் தாக்கி அழிப்பது இயற்கையாகவே தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த ஓசோன் அடுக்குச் சுற்றுப் புறம் மாசுபடுத்தப்படுவதனால் மெள்ளச் சீரழிந்து கொண்டு வருகின்றது. காப்புக் கவசமாக விளங்கி வரும் ஓஸோன் அடுக்கு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள மீவிசும்பாய்வு ஏவூர்திகள் பெரிதும் பயன்படுகின்றன. இவ்வூர்திகளைத்தவிர விண்வெளியில் செயற்கைக் கோள்களைச் செலுத்தி, அவற்றை வளி மண்டலத்தில் நிலை பெறச் செய்து நிலையானதொருவானியல் ஆய்வுக் கூடத்தை நிறுவி இத்தகைய ஆய்வுகளை நீண்ட காலத்திற்கு மேற் கொள்ள செயற்கைக் முடியும். செலுத்த இந்த ஏவூர்திகள் பயன்படுகின்றன. கோள்களைச்