பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழிலைப்பாலை 467

இந்தியாவில் ஏவூர்தி வானியல். திருவனந்தபுரத் திற்கு அருகில் உள்ள தும்பாவில் நடுவரை கோட்டு ஏவூர்தி செலுத்தும் தளம் 1963 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் ஏவூர்தி வானி யல் வளரத் தொடங்கியது. நூற்றுக் கணக்கான மீவிசும்பாய்வு ஏவூர்திகளை விண்ணில் செலுத்திப் பல்வேறுபட்ட புவியியல் ஆய்வுகளை இந்திய வானி யல் அறிஞர்கள் மேற்கொண்டார்கள். இவற்றுள் அண்டக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் மிகவும் முக்கிய மானவை. தும்பாவிலுள்ள விக்கிரம் சாராபாய் வீண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்படும் மீவிசும்பாய்வு ஏழிலைப்பாலை 467 எடை 200 ஏவூர்திகள் ரோகிணி எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை திண்ம எரிபொருளால் உந்தப்படுவனவாக உள்ளன. ரோகிணி-125 என்பது 32 கி.கி. யுள்ள ஓரடுக்கு ஏவூர்தியாகும். இது 7 கி.கி. எடை யுள்ள சிறப்புச் சுமையை 10 கி.மீ. வரை எடுத்துச் செல்ல வல்லது. ரோகினி 560, ரோகிணி என்பவை ஈரடுக்கு ஏவூர்திகளாகும். இவற்றில் 1.4 டன் எடையுள்ள ரோகிணி 560, 100கி.கி. எடை யுள்ள சிறப்புச் சுமையுடன் 350 கி.மீ.வரை செல்லக் கூடியது. இதன் அமைப்பு, படத்தில் பட்டுள்ளது. காட்டப் ரோகிணி ஏவூர்திகள் தும்பா தவிர, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ரிசாவில் உள்ள பாலாசோர் போன்ற இடங்களிலி ருந்தும் ஏவப்படுகின்றன. சூரிய அண்டக் கதிர்கள், பூமியின் அயன மண்டலம், எக்ஸ் கதிர் வானியல் தட்ப வெப்ப நிலை பற்றிய ஆய்வுகளுக்கு இம் மீவி சும்பாய்வு ஏவூர்திகள் இந்தியாவில் பயன்படுத்தப்படு கின்றன. பம்பாயில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் எக்ஸ் கதிர் வானியல் ஆய்வுகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குச் செயற்கைக் கோள்களையும், பலூன்களை யும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார்கள். ஆரியபட்டா. பாஸ்கரா, ரோகிணி, ஆப்பிள் அநுராதா போன்றவை இந்தியாவால் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களாகும். இந்திய வானியலார் ஏவூர்தி வானியலின் அடிப்படையில், சனிக் கோளுக்கு வளையங்கள் இருப்பது போல யுரேனஸ் என்ற கோளின் மீதும் வளையங்கள் இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். தனலட்சுமி மெய்யப்பன் படம் 1 அ.க. 6-30அ ஏழிலைப்பாலை இதன் தாவரவியல் பெயர் ஆல்ஸ்டோனியா ஸ்கோ லேரிஸ் (Alstonia scholaris). இது அபோசைனேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்த தாகும். ஆல்ஸ்டோனியா என்னும் இனப்பெயர் எடின்பரோ பல்கலைக்கழகத் தாவரவியல் பேராசிரி யர் ஒருவரின் பெயரால் இடப்பட்டதாகும். ஆல்ஸ் டோனியா இனத்தைச் சேர்ந்த 30-40 சிற்றினங்கள் கிழக்கு இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் காணப் படுகின்றன. அவற்றில் இந்தியாவில் ஆறு சிற்றினங் களேயுண்டு. மற்றவை மேற்கு ஆப்பிரிக்கா முதல் பசிபிக் கடற்கரை வரை பரவியுள்ளன. வளரியல்பு. ஏழிலைப் பாலை ஓர் அழகான, உயர மான 20-30 மீ. உயரம் வளரக்கூடிய மரமாகும்.