பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏஜிரின்‌ 475

வகை. அக்மைட் ஏஜிரினின் ஒரு வகையாகும். து குறுகலான படிகமாகக் கிடைப்பதால் ஏஜரினி லிருந்து வேறுபடுத்தப்படுகிறது. இதனுடன் டைட் டேனியம், அலுமினியம் போன்றவையும் காணப்படு கின்றன. பெக்மட்டைட் படிவு நெஃப்லின் சயனைட், முதலியவற்றை உட்கூறாகக் கொண்ட கார அனற் பாறைகளில் ஏஜிரின் காணப்படுகிறது. மேலும் இது ஏஜிரின் 475 நெஃப்லின் மைக்ரோகிளைன். கார ஆம்பிபோல் போன்றவற்றுடனும் சேர்ந்து காணப்படுகிறது. கிடைக்குமிடம். நெஃப்லின், ஃபெல்ஸ்பார் முதலிய வற்றுடன் ஏஜிரின் படிகங்கள் யூரல் மலைந்தொடரி லுள்ள சொரி மலையிலிருந்து மிகுதியான அளவில் கிடைக்கின்றன. கீபினி மலைகளில் உள்ள காரப் பாறைகளிலும் இப்படிவுகள் காணப்படுகின்றன. இரா. சரசவாணி