ஐசிங் படிவம் 481
ஐங்கோணம் ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ளாதவாறு ஐந்து கோடுகளால் உருவாக்கப்படும் ஒருபலகோணம் ஐங் கோணம் (pentagon) எனப்படும். இதில் அனைத்துப் பக்கங்களும் சமமாக இருக்குமானால் அது சமபக்க ஐங்கோணம் எனவும் ஐந்து கோணங்களும் சமமா னால் சமகோண ஐங்கோணம் (equiangular pentagon ) என்றும் குறிப்பிடப்படும். முக்கோணம் தவிர, பிற பலகோணங்களைப்போல் ஐங்கோணமும், சமபக்க D ஐசிங் படிவம் 481 மாக இல்லாமல் சமகோண ஐங்கோணமாகவும் சம கோணமாக இல்லாமல் சமபக்க ஐங்கோணமாகவும் அமையும். சமபக்கமுடையதாகவும், சமகோணமுடை யதாகவும் உள்ள ஐங்கோணம் ஒழுங்கான அல்லது முறையான ஐங்கோணம் எனப்படும். ஒழுங்கு ஐங் கோணத்தின் கோணம் 180° ஆகும். ஐங்கோணத்தின் உச்சிப்புள்ளிகளைத் தொட்டுக்கொண்டிருக்குமாறு ஒரு வட்டம் வரைய முடியும். இந்தச் சுற்று வட்டத் திற்கு ஐங்கோணம் தொடும் புள்ளிகளில் தொடு கோடுகள் (tangents) வரைந்தால் அவை ஒரு புதிய ஐங்கோணத்தை உருவாக்கும். பெ. வடிவேல் E ஐசாப்டிரா காண்க:- சம இறக்கைப் பூச்சி. B 1 108°, 3 0108° 4 படம் 1. ஐங்கோணம் சமபக்க ஐங்கோணம் 3. 2 108° "சமகோண ஐங்கோணம் 4. ஒழுங்கு ஐங்கோணம் ஐசிங் படிவம் . இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் அணுக்களின் தற்சுழற்சியில் (spins) ஒரு குறிப்பிட்ட பகுதி ஒரே திசையில் முனைவாக்கம் பெறுகின்றன. இதனால் வலிமையான காந்தப்புலம் உருவாகிறது. இந்தநிகழ்வு ஒவ்வொரு பொருளுக்கும் உரிய குறிப்பிட்ட வெப்ப நிலைக்குக் கீழே நடைபெறும். இந்த மாறுநிலை வெப்பநிலை கியூரி வெப்பநிலை (curie temperature) எனப்படும். கியூரி வெப்பநிலைக்கு உயர்ந்த வெப்ப நிலைகளில் தற்சுழற்சிகள் தன்னிச்சையாகப் பல் திசைகளிலும் பரவியிருக்கும்; அதனால், அவற்றின் நிகர காந்தப்புலம் சுழியாகும். மேலும், கியூரி வெப்ப நிலையை எந்தப் பக்கத்திலிருந்து அணுகினாலும் உலோகத்தின் வெப்ப ஏற்புத்திறன் (specific heat capacity) வரம்பிலியை யயெட்ட முனையும். இவ் வாறான ஃபெர்ரோ (இரும்பு) காந்தமற்ற சாதாரண நிலையிலிருந்து ஃபெர்ரோ காந்த நிலைக்கு மாறு வது எஃரென்பெஸ்ட் நிலைமாற்ற வகைப்படுத்தலுக் குள்ளடங்காத நிலைமாற்ற வகையாகும். இவ்வாறான நிலைமாற்றங்களை ஆராய்வதற் கேற்ப ஃபெர்ரோ காந்தப் பொருள்களின் (அல்லது அவை யொத்த அமைப்புகளின்) இயற்பியல் கட்டமைப்பை உருவாக்க முனையும் முயற்சியில் உண்டானதே ஐசிங் படிவம் அல்லது ஐசிங் மாதிரி (Ising model) ஆகும். ஐசிங் மாதிரி ஒரு-பரிமாண (n =1,2,3) காலக் கெடு அணிக்கோவை ஆகும். அணிக்கோவையின் வடிவியில் கட்டமைப்பு ஒரு கனசதுரம் அல்லது அ.க.6-1