பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐசோடோப்‌ 487

அளவும் நிறைமாலைமானிகளின் உதவியால் ஆய்வு செய்யப்படுகின்றன. 119, வெள்ளீயத்துக்கு மற்றஎல்லாத் தனிமங்களையும் விட அதிகமான எண்ணிக்கையில் பத்து ஐசோடோப் கள் உள்ளன. அவற்றின் அணு எண் 50. நிறை எண்கள் 112, 114, 115, 116. 117, 118, 120,122,124, ஆகும். அடுத்து செனான் ஒன்பது ஐசோடோப்புகளைப் பெற்றுள்ளது. டெல் லூரியம், காட்மியம் ஆகியவற்றிற்குத் தலா எட்டு ஐசோடோப்கள் உள்ளன. 62 தனிமங்களுக்கு ஐசோடோப்கள் இயற்கையில் கிடைக்கின்றன.22 தனிமங்களுக்கு ஒரே ஒரு நிலையான நியூக்ளைடு மட்டுமே உண்டு. மற்றவை நிலையற்றவை. பிஸ்மத் துக்குக் (z=83) குறைவான அணு எண் உள்ள தனிமங்களில் டெக்னிஷியம், புரோமிதியம் ஆகிய இரண்டுக்கு மட்டுமே நிலையான நியூக்ளைடுகள் எதுவும் இல்லை. இயற்கையில் கிடைக்கும் ஐசோடோப்களைக் கொண்ட தனிமங்களில், ஐசோடோப்களின் சார்பு அளவு. அவை கிடைக்கிற இடங்களைப் பொறுத்து அமையவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. அதன் காரணமாகப் பெரும்பாலான பொருள்களுக்கு வேதி அணு எடை மாறிலியாக உள்ளது. வேதியல் அணு எடை என்பது எல்லா நிலையான ஐசோடோப்களின் நிறைகளின் சராசரியாகும். அவகாட்ரோ எண்ணுக்குச் (6.02252× 1023) சம மான எண்ணிக்கையிலுள்ள தனிம அணுக்களின் நிறை அந்தத் தனிமத்தின் அணு எடைக்குச் சமமாக இருக்கும் என்கிற உண்மையின் அடிப்படையில் வில் லியம் குரூக்ஸ் ஐசோடோப்களைப் பற்றி முதன்முத லாக ஊகம் வெளியிட்டார். பிஸ்மத்தை விட அதிக மான அணு எண் உள்ள தனிமங்களின் கதிரியக்கத் தைப் பற்றிய ஆய்வுகளின் மூலம், வேதித் தன்மை யில் ஒன்றுபட்டிருக்கிற தனிமங்கள் இயற்பியல் தன் மையில் வேறுபட்டிருப்பதற்கான ஆய்வுச் சான்றுகள் கிடைத்தன. யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் வேதிப் பண்புகள் ஒன்றாயிருப்பினும் அவற்றின் அணு எடைகள் வேறுபட்டிருப்பது காணப்பட்டது. நிலை யான ஐசோடோப்கள் இருப்பதற்கான சான்று தாம்சன் வளிம மின்னிறக்கக் குழாய்களில் தோன்றிய நேர்மின் கதிர்களை ஆய்வு செய்தபோது கிடைத்தது. நியான் மின்னிறக்கக் குழாயிலிருந்து வெளிப்பட்ட நேர்மின் கதிர்களைக் காந்தப் புலங்களாலும் மின் புலங்களாலும் வளைத்து ஒளிப்படத் தகடுகளில் செலுத்திய போது இரண்டு வெவ்வேறு நிறைகள் கொண்ட நியான் அணுக்களின் சுவடுகள் பதிவாயின. ஆஸ்ட்டன் என்பார் தமது நிறைமாலைமானியின் உதவியால் நியானில் மட்டுமன்றி குளோரின், பாத ரசம், நைட்ரஜன், மந்த வளிமங்கள் ஆகியவற்றிலும் இதேபோன்ற நடத்தை காணப்படுவதைக் கண்டு ஐசோடோப் 487 பிடித்தார். அதே சமயத்தில் டெம்பஸ்டர் என் பாரும் தமது நிறைமாலைமானியின் உதவியால் மக் னீசியம், லித்தியம். பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் ஆகியவற்றின் ஐசோடோப்களையும் அவற்றின் சார்பளவுகளையும் கண்டுபிடித்தார். மாக ஆஸ்ட்டனின் ஆய்வுகள் பல்வேறு ஐசோடோப் புக்களின் அணு நிறைகள் முழு எண்களுக்கு நெருக்க உள்ளதைக் காட்டின. 1960ஆம் ஆண்டில் C" ஐசோடோப்பின் அணு நிறையின் அடிப்படையில் அணு நிறையின் அலகு நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி (6.0220943 + 0.0000063)X100 - 12 அணு துக்கள் 12 கிலோகிராம் நிறையுடையவையாக ஏற்கப்பட்டது. எனவே ஓர் அணு நிறை என்பது ஒரு கார்பன்-12 அணுவின் நிறையில் 12இல் ஒரு பங்கு ஆக நிர்ணயிக்கப்பட்டது. துவரை அறியப்பட்டுள்ள 287 ஐசோடோப் களில் 168 தனிம அணுக்கருக்களில் இரட்டைப் படை எண்ணிக்கையில் புரோட்டான்களும் நியூட் ரான்களும் உள்ளன. 57 தனிம அணுக்கருக்களில் இரட்டைப்படைப்புரோட்டான்களும் ஒற்றைப்படை நியூட்ரான்களும் இருக்கின்றன. 53 தனிம அணுக்கருக் களில் ஒற்றைப்படை புரோட்டான்களும் இரட்டைப் படை நியூட்ரான்களும் உள்ளன. 9 தனிம அணுக் கருக்களில் மட்டும் இரண்டும் ஒற்றைப் படை ணிக்கையில் உள்ளன. இதிலிருந்து புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின். இணை சேரும் போக்கு வெளிப்படுகிறது. 50 புரோட்டான்கள் கொண்ட கூட்டமைப்பின் நிலைத்தன்மை அதிகமாயிருப்பதை வெள்ளீயத்திற்கு 10 ஐசோடோப்புகளிருப்பதி லிருந்து அறியலாம். எண் சில தனிமங்களில் ஐசோடோப்களின் சார்பளவு மாறுகிறது. ஹைட்ரஜன், லித்தியம், போரான் போன்ற எடைக் குறைவான தனிமங்களில் ஐசோ டோப்புகளின் அணுநிறைகள் ஓரளவு வேறுபட்டிருக் கின்றன. அவற்றின் வேதியல் வினைத் திறனும் ஓரளவு வேறுபடுகிறது. இதன் காரணமாகக் காய்ச்சி வடித்தல் அல்லது வெவ்வேறு சேர்மங்களுக்கிடையி லான வேதிப் பரிமாற்றம் போன்ற செயல்முறை களில் ஐசோடோப் கூட்டமைப்பு, குறிப்பிடத்தக்க அளவு மாறக் கூடும். ஹைட்ரஜன், லித்தியம், போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வற்றில் பெருமளவில் ஐசோடோப்களைப் தெடுக்க வேதிப் பரிமாற்ற முறைகள் பயன்படு கின்றன. பிரித் உயிரிகளின் வாழ்க்கைச் சுழலில் பங்கேற்கும் தனிமங்கள் பரிமாற்ற வினைகள் காரணமாகவும், சவ்வூடு பரவுதல் காரணமாகவும் வேறுபட்ட ஐசோ டோப் கூட்டமைப்புகளைப் பெற்றிருக்கக் கூடும். ஐசோடோப்களின் சார்பளவுகளை மாற்றுவதில்