பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 ஐசோடோப்‌

488 ஐசோடோப் வேதி வினை வேகங்களில் உள்ள சிறிய வேறுபாடு களும் முக்கியமானவை. ஐசோடோப்களில் ஒன்றோ, அதற்கு மேற்பட்ட வையோ கதிரியக்கச் சிதைவின் மூலம் தோன்றிய நிலையான விளைபொருள்களாயிருப்பதும் தனிமங் களின் கூட்டமைப்பு மாறுவதற்குக் காரணம். காரீ யத்தின் மூன்று ஐசோடோப்கள் (Pb-108, Pb 206 Pb - 207) தோரியம், U438, U201 ஆகியவை கதிரியக்கத் தால் சிதைவடையும் போது தோன்றும் இறுதி விளை பொருள்களாகும். Pb - 204 என்பது எந்தக் கதிரியக்கச் சிதைவிலிருந்தும் தோன்றியதாகத் தெரிய வில்லை. இவ்வாறு காரீயத்தின் ஐசோடோப் கூட்ட மைப்பு அது கடந்த காலத்தில் யுரேனியம், தோரியம் ஆகியவற்றுடன் கூடியிருந்ததைப் பொறுத்து மாறு படும். அரிதாகக் காணப்படுகிற K" என்ற பொட் டாசிய ஐசோடோப் 0.012% காணப்படுகிறது. அதன் அரை வாழ் நேரம் 1.28×10 ஆண்டுகள். அது பீட்டாத் துகள்களை உமிழ்ந்து நிலையான ஆகவும், எலெக்ட்ரான் பிடிப்பு மூலம் Ca ஆகவும் மாறுகிறது. வளிமண்டலத்திலுள்ள ஆர்கானில் 99.6 சதவீதம் Art" ஆகும். பொட்டாசியக் மங்களில் மண்டல Arto கனி உள்ள ஆர்கானின் கூட்டமைப்பு வளி ஆர்கானினுடையதிலிருந்து வேறுபட்டி ருக்கும். இந்தச் சிதைவுச் செயல்முறைகளும், ருபீ டியம்-87, ஸ்ட்ரான்ஷியம்-87 ஆகச் சிதைவதும் புவியியல் வயதைக் கணக்கிட உதவுகின்றன. வினை முரணிய இயற்கையிலேயே நிகழும் அணுக்கரு களின் காரணமாகச் சில தனிமங்களில் ஐசோடோப் கட்டமைப்புகள் தோன்றுகின்றன. 1972ஆம் ஆண்டில் கபன் (Gabon) என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஓக்லா யுரேனியப் படிவுகளில் U 236 நியூக்ளைடு மிகக் குறைந்த அளவே காணப்பட்டது. 1.7× 10* ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றிருக்கக் கூடிய ஒரு தொடர் வினை யின் காரணமாக அப்படிவுகளிலிருந்த U-235 ஐசோடோப்பின் பெரும்பகுதி சிதைந்து போயிருக்கக் கூடும். அணு உலைக் கழிவுகளில் அணுக்கருப் பிளவு விளைபொருள்கள் காணப்படும். நியூட்ரான் உட்கவர்தல் ஏற்பட்டு அதன் பிறகு கதிரியக்கச் சிதைவு நிகழ்வதன் மூலம் பாறைகளிலுள்ள சில தனிமங்களின் ஐசோடோப் கட்டமைப்பு மாற்றப் படுவதும் உண்டு. நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறைகள், எரிகற்கள் ஆகியவற்றில் காணப்படும் ஐசோடோப் கூட்டமைப்பு, பொதுவாகப் புவியிலுள்ளவாறே ஒத் துள்ளது. கதிரியக்கச் சிதைவு, காஸ்மிக் கதிர்த்தாக்கு தல் போன்றவற்றால்எரிகற்களின் ஐசோடோப் கூட்ட மைப்பில் வேறுபாடுகள் ஏற்படலாம். நிலவுப் பாறை களில் காணக் கூடிய கூட்டமைப்பு வேறுபாடுகள் சூரியக் காற்றின் தாக்குதல்களால் ஏற்பட்டவையாக இருக்கக் கூடும். இரும்பு கலந்த எரிகற்களில் இரும்பு அணுக்களை உயர் ஆற்றல் காஸ்மிக் கதிர்கள் தாக்கி ஹீலியம், நியான் போன்ற லேசான தனிமங்களை உண்டாக்கிவிடுவதன் மூலம் முரணிய கூட்டமைப்புக் காணப்படுகிறது. H. H, ஆகிய ஐசோடோப்புக் களின் அளவுகளுக்கிடையிலான தகவைப் பயன்படுத்தி ஒரு பொருள் எவ்வளவு காலமாகக் காஸ்மிக் கதிர்த் தாக்குதலுக்குட்பட்டிருந்தது என்பதைக் கணக்கிட முடிகிறது. சிலதனிமங்களின் ஐசோடோப்களுக்குத்தனியான அல்லது விந்தையான பண்புகள் உண்டு. அவற்றைப் பிரித்தெடுப்பது அல்லது அவற்றின் சார்புச் செறிவை அதிகப்படுத்துவது சில நோக்கங்களுக்கு 0.16% ஹைட்ரஜனில் உதவும். அளவுக்கு வளிமண்டல டியூட்ரியம் உள்ளது. அது கனநீர் அணு உலைகளில் நியூட்ரான்களின் வேகத்தைத் தணிப்பதற்கு உதவும். எதிர் காலத்தில் அது அணுக்கருப் பிணைவு உலை பயன்படும் எனக் கருதப் களில் எரிபொருளாகவும் படுகிறது. பல விதமான காய்ச்சிவடித்தல், பரி மாற்றம், மின்னாற்பகுப்பு முறைகளின்மூலம் டியூட்ரி யம் அடங்கிய கனநீர் ஏராளமான அளவில் உற் பத்தி செய்யப்படுகிறது. அணு உலைகளுக்குத் தேவை யான யுரேனிய எரிபொருளில் U235-இன் அளவை அதிகப்படுத்துவதற்கு வளிம விரவல் முறைகள் பயன்படுகின்றன. தனிமங் உயிரியல் நோக்கத்தில் முக்கியமான களில் கார்பனுக்கும் ஹைட்ரஜனுக் க்கும் மட்டுமே தடங்காட்டிகளாகப் (tracers) பயன்படுத்தக் கூடிய வகையில் நெடிய அரை வாழ் காலமுடைய கதிரியக்க ஐசோடோப்கள் அமைந்துள்ளன. அவை உயிரிகளில் நடைபெறும் செயல்களை ஆய்வு செய்ய உதவும். H3, C போன்ற தனிமங்களைப் பெருமளவில் பயன் படுத்துவது விரும்பத் தக்கதன்று. Hk, C1 ஆகியவை அவற்றைவிட அதிக நுட்பத்தோடும் சரியான முறையிலும் செயல்படுகின்றன. வளர்சிதை மாற்றம், மருந்துகள் உட்கவரப்படுதல் போன்ற பலஉயிரியல் செயல்பாடுகளை Ci, N18, O", H" போன்ற நிலை யான ஐசோடோப்களைப் பயன்படுத்தி ஆராய்வது மேலானது. மூலக்கூறுக்கட்டமைப்பில் நிறைந்த அளவில் ஓரிடத்தனிமங்களைப் புகுத்தி விடுவதன் மூலம் சேர்மங்கள் அடையாளக் குறியிடப்படுகின்றன. உயிரியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வளர்சிதை மாற்றமடைந்த விளைபொருள்களை நிறமாலை மானிகளின் உதவியால் ஆய்வு செய்து அவற்றின் ஐசோடோப் தகவில் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கிடுவதன் மூலம் உயிரியல் வினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. வேதியல் மற்றும் உயிரியல் வினைகளின் வழிமுறைகளை கொள் அறிந்து வதற்கு ஐசோடோப் காட்டிகள் (isotopic indicators) அல்லது இணைக்கப்பட்ட அணுக்கள் (Ikbeled atoms) பயன்படுகின்றன. வேதிவினைகளின்போது எந்தத்