பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 ஐசோடோப்‌

492 ஐசோடோப் தனிப்படுத்தல் அளவு குறைகிறது. இதே பகுப்புமுறை பல்வேறு கோபுரங்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் போது ஐசோடோப்கள் முழுமையாகத் தனிப்படுத்தப் படுகின்றன. மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டைப் போன்றே H,NH, சேர்மங்களுக்கிடையிலும் வேதிப்பரிமாற்றம் நிகழலாம். NH, + D, = NH,D + HD NH, + D, - NHD, + H, இந்த வேதிப் பரிமாற்றப் பண்பை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் பரோடாவிலும் தூத்துக் யிலும் உள்ள கனநீர் ஆலைகள் குடிய கின்றன. யங்கி H,O HDO குளிர்விக்கும் சுவம் வரு மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் நீர்மக் கோபுரங்கள் யாவும் ஒரே வெப்பநிலையில் இயங்கும். இந்த முறை ஒரே வெப்பநிலைப் பகுப்பு முறை எனப்படுகிறது. சில வேதிப் பரிமாற்றப் பகுப்பு களில் ஒவ்வொரு பகுப்புப் படியிலும் ஒரு வெப்பக் கோபுரமும் ஒரு குளிர்நிலைக் கோபுரமும் அமைக்கப்பட்டிருக்கும். H,O/H,S வேதிப் பரிமாற்றத் தில் பயன்படுத்தப்படும் இத்தகைய இரட்டை வெப்ப நிலைப் பகுப்பு முறைக்கான (dual thermal process ) படம்-4 இல் காட்டப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் சல்ஃபைடு வளிமம் வெப்பக் கோபுரத்தின் வழியே வரும்போது நீரிலிருந்து அதிக அளவு கன ஹைட்ரஜனை எடுத்துக் கொள்கிறது. D,O + HgS == H,O + D,S குளிர் நிலைக் கோபுரத்தில் நீர் குளிர்ந்த நீர்ம நிலையிலும் D,S மட்டும் வளிம நிலையிலும் இருப்ப தால் கன ஹைட்ரஜன் இப்போது நீருக்கு மாற்றப் படுகிறது. H,O + D,S = D,O + H,S தொடர் படிப்பகுப்பு முறையில் குளிர் கோபுரத்தில் செறியூட்டப்பட்ட நீர் அடுத்தடுத்த குளிர் கோபுரங் களை நோக்கி நகர்கிறது. செறிவு குறைந்த நீர் வெப்பக் கோபுரங்கள் வழியாகப் பின்னோக்கி நகர்கிறது. கனநீர் தவிர அணு எடை 10ஐக் கொண்ட போரானைப் பகுத்தெடுக்கவும், வேதிப் பரிமாற்றப் பகுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. BF, வளிமம், BF, யும் டைமீத்தைல் ஈதரும் சேர்ந்த அணைவுச் சேர்ம நீர்மத்தினூடே செலுத்தப் படும்போது வேதிப் பரிமாற்றம் நடைபெறுகிறது. ஆனால், இந்த முறை யின் பகுப்புத் திறன் மிகவும் குறைவு. அண்மைக் காலத்தில் BF, அனிசோல் அணைவுச் சேர்மம் நீர்மப் பொருளாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது குளிர்விக்கும் கலம் வெப்பநிலைக் கோபுரம் H.O. ADO குளிர்நிலைக் கோபுரம் படம் 4. இரட்டைவெப்பநிலை பரிமாற்றம் H,O, HDO இரண்டாம் தனிப்படுத்தும் கவத்திற்கு (HDO, D,0 மிகுதி} இரண்டாம் தனிப்படுத்தும். சுவத்திலிருந்து H,S - HDO வேதிப் சாதாரண வெப்பநிலையிலேயே நீர்மநிலையில் இருப்பதால் தொழில்நுட்ப வடிவமைப்பு வேலை களும் எளிதாகும். இந்த முறையின் தனிப்படுத்தும் திறனும் அதிகம். அணுஎடை காய்ச்சி வடித்தல். ஐசோடோப் கலவை உள்ள நீர்மத்தை வாலையிலிட்டுக் காய்ச்சி வடிக்கும்போது உள்ள குறைவாக அணுக்களைக் கொண்ட சேர்ம மூலக்கூறுகள் ஆவியாக மாறும். எனவே, அணுஎடை அதிகமுள்ள அணுக்களைக் கொண்ட சேர்மம் அடியில் தங்கும். மிகமிகக் மீண்டும் இந்த முறையின் பகுப்புத் திறன் குறைவு. எனவே, நீரை ஏராளமான மீண்டும் காய்ச்சி வடிக்க வேண்டும். இந்த முறையில் காய்ச்சி வடிப்பதற்கான ஆற்றல் மிக அதிகமாகச் செலவாகும். மின் பகுப்பு முறை. அமிலத்தன்மையுள்ள நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் நீர் மின்னாற்பகுக்கப் பட்டு ஹைட்ரஜன், ஆக்சிஜன் வளிமங்களாக மாறும். காண்க, மின்னாற்பகுப்பு 2H,O — 2H, +0,