பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐசோடோப்‌ 493

இதே முறையில் H,O உம் D,O, எனும் கனநீரும் கலந்த இயற்கை நீரை எடுத்துக் கொண்டு மின்னாற் பகுப்புச் செய்யும்போது D,0 வைவிட H,O எளிதாக மின்னாற்பகுக்கப்பட்டு ஹைட்ரஜன், ஆக்சிஜன் வளி மங்களாக வெளியேறும். இதனால் மின்னாற்பகுப்பில் கடைசியாக எஞ்சும் நீரில் D,O வின் விகிதம் கூடு கிறது. இந்த முறையில் மீண்டும் மின்னாற்பகுப்புச் செய்தால் D,0வை முழுமையாகத் தனிப்படுத்தலாம் காய்ச்சி வடித்தல் முறையைவிட இந்த முறை யில் பகுப்புத்திறன் அதிகமே ஆனாலும் நீரை மின் னாற்பகுப்புச் செய்ய ஏராளமான மின்னாற்றல் தேவைப்படுகிறது. லேசர் ஒளி வேதியியல் முறை. ஒரு தனிமம் அல் லது சேர்மத்தில் உள்ள எலெக்ட்ரான்கள் சில குறிப் பிட்ட அலைநீளம் உள்ள ஒளிக்கற்றைகளை மட்டும் உட்கவர்ந்து கொண்டு தூண்டப்பட்ட நிலையை நிலையில் அடையும். இத்தகைய தூண்டப்பட்ட பல மாற்றங்களும் நிகழும். இத்தகைய வேதிமாற் றங்கள் ஒளிவேதி மாற்றங்கள் எனப்படும். சாதாரணமாக மிக ஒளிதரும் பொருள்கள் நுட்பமான அலைநீளத்தை மட்டும் தரக்கூடிய ஒளிக் சுற்றைகளைத் தரமுடியாது. ஆனால் லேசர் கற் றைகள் மிக நுட்பமான அலைநீளமுள்ள ஒளி அலை களாலேயே ஆனவை. ஐசோடோப்களின் அணு எண் அல்லது எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒன்றுதான். ஆனால் அவை ஏற்கும் ஒளி அலைகளின் நீளம் அவற் றின் அணு எடையைப் பொறுத்துச் சிறிதளவு மாறு படும். இது ஐசோடோப் நகர்வு எனப்படும். மிக நுட்பமான லேசர் ஒளிக் கற்றைகளைக் கொண்டு ஐசோடோப் கலவையில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள தனிமத்தை மட்டும் தூண்ட முடிந்தால், ஏற்படும் அதனால் வேதிவினை மாற்றத்தைக் அதனைப் பிரித்துவிடலாம். எடுத்துக் கொண்டு காட்டாக, SF சேர்மத்தில் "SF, 34, ஆகிய ருவகைச் சேர்ம மூலக்கூறுகளும் உள்ளன. 10.61 um அலைநீளமுள்ள லேசர் ஒளிக்கற்றை SF மூலக் கூறுகளை மட்டும் தூண்டும். 10.82¢m அலைநீள முள்ள வேசர் ஒளிக்கற்றை 3SFe மூலக்கூறுகளால் மட்டுமே உட்கவரப்படும். தூண்டப்பட்ட கூறுகள் மட்டும் வேறு வேதிவினைகளில் வதால் அவற்றை எளிதில் தனிப்படுத்த முடிகிறது. கடந்த சில ஆண்டுகளாக UF. வளிமத்திலிருந்து இதே முறையில் 935UF மூலக்கூறுகளை மட்டும் பகுத்தெடுக்கும் முயற்சி பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. பொதுவாக லேசர் ஒளிக் கற்றைகளைக் கொண்டு 235UF மூலக்கூறுகள் மட்டும் தூண்டப்படு கின்றன. இவை மட்டும் அயனியாவதால் சிறிதளவு 6 மூலக் ஈடுபடு ஐசோடோப் பெயர்ச்சி 493 பகுக்கப் மின்னழுத்தத்தைப் பயன்படுத்தி இவை படுகின்றன. தூண்டப்பட்ட மூலக்கூறுகளின் ஒளி வேதியியல் மாற்றங்களைக் கொண்டும் அவற்றைப் பகுக்கலாம். மி. நோயல் ஐசோடோப் பெயர்ச்சி ஒரே அளவில் ஐசோடோப்புகளின் அணுக்கருவினுள், சம அளவில் புரோட்டான்கள் இருந்தாலும், நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறுபட்டிருப்பதால், அவை மாதிரியாக அணுக்கருவிற்குள் விரவி இருப்பதில்லை. தவிரவும் அவற்றின் நிறைகளில் சிறிய வேறுபாடும் காணப்படுகின்றது. இதனால் அணுக் கருவைச் சுற்றி வரும் எலெக்ட்ரான்களின் ஆற்றல் நிலையில் நுண்ணிய அளவில் மாற்றங்கள் ஏற்படு கின்றன. ஐசோடோப்புகளின் நிறமாலை வரிகள் இந்த மாற்றங்களையும் சுட்டிக் காட்டக் கூடியன வாக இருக்கின்றன. இரு ஐசோடோப்புகளின் அல்லது இரு ஐசோடோப் அயனிகளின் நிறமாலை யின் ஒரு வரிக்குக் காரணமாக a, b என்ற ஆற்றல் நிலைகளின் இடைப் பெயர்வு ஆற்றல் transition energy) வேறுபாட்டை AЕab Eab (A') - Eab (A) எனக் குறிப்பிடலாம். இதில் A', A என்பன கருத் திற் கொண்ட இரு ஐசோடோப்களின் நிறை எண் களாகும். இதுவே ஐசோடோப் பெயர்ச்சி (isotopic shift) எனப்படும். ஐசோடோப் பெயர்ச்சி, பொதுவாக இரு கூறு களைப் பெற்றுள்ளது. அவை, நிறைப் பெயர்ச்சி, புலப் பெயர்ச்சி அல்லது பருமப் பெயர்ச்சியாகும். பெயர்ச்சி. நிறைப் இயல் நிலை நிறைப் பெயர்ச்சி (normal mass shift) மற்றும் சிறப்பு நிலை நிறைப் பெயர்ச்சி (specific mass shift) என்ற இரு கூறுகளைப் பெற்றிருக்கிறது. பொதுவாக இவ்விரு கூறுகளும், ஐசோடோப்புகளின் நிறைவேறுபாட்டுப் (A-A) பின்னக் கூற்றுக்கு நேர் விகிதத்தில் இருக் A'A கின்றன. இயல் நிலை நிறைப் பெயர்ச்சி, நிறை சுருக்க எண் திருத்தமாக (reduced mass correction மதிப்பை அதன் அனைத்து வரி நிறமாலை களுக்கான இடைப் பெயர்வுகளுக்கும் மிகு எளி தாகக் கணக்கிட்டறியலாம். சிறப்பு நிலை நிறைப் அணுவில் வெவ்வேறு இணை பெயர்ச்சி, உள்ள எலெக்ட்ரான்களின் தொடர்பு இயக்கங்களினால் ஏற்படுகின்றது. இதனால் ஓர் எலெக்ட்ரான்