பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 ஐசோடோப்‌

494 ஐசோடோப் விளைவு அமைப்புகளில் இதன் மதிப்பு, சுழி எனக் கொள்ள லாம். பல எலெக்ட்ரான் அமைப்புக்களுக்கு இதன் மதிப்பை நுணுக்கமாகக் கணக்கிட்டறிவது சற்றே கடினம். சில குறிப்பிட்ட நிறமாலை வரிகளுக்கான இடைப் பெயர்வுகளில், இதன் மதிப்பு இயல் நிலை நிறைப் பெயர்ச்சியை விட முப்பதுமடங்கு அதிகமாக உள்ளது. ஐசோடோப் பெயர்ச்சியின் மற்றொரு கூறான புலப் பெயர்ச்சி, அணுக்கரு மின்னூட்டத்தின் விரவல் தன்மை, மற்றும் உருவ அமைப்பு ஆகியன வற்றைப் பொறுத்ததாக இருக்கின்றது. Z37 எளிய மூலகங்களில் நிறைப் பெயர்ச்சி, புலப் பெயர்ச்சியைவிடக் குறிப்பிடும்படியாக இருக்கின்றது. ஹைட்ரஜனின் நிறமாலையில் 0.13×10 மீட்டர் அளவில் ஒரு பெயர்ச்சி, சிவப்பு முனைப் பகுதியில் உள்ள பாமர் வரிகளில் காணப்பட்டது. இது அதன் ஓரிடத்தனிமமான டியூட்ரியத்தைக் கண்டுபிடிக்கக் காரணமாக விளங்கியது. ஓரளவு கனமான தனிமங்களில் 38<Z≤ 57 இரண்டுமே. நிறை மற்றும் புலப்பெயர்ச்சிகள் ஐசோடோப் பெயர்ச்சியில் குறிப்பிடும்படியான பங்குகொண்டுள்ளன. கன மூலகங்களில் Z 58 புலப்பெயர்ச்சி, நிறைப்பெயர்ச்சியைவிடக்குறிப்பிடும் படியாக உள்ளது (படம் 1). ஒரு தனிமத்தின், குறைந்தது அதன் இரு ஐசோடோப்புக்களின், ஐசோடோப் பெயர்ச்சி பற்றிய புள்ளி விவரங்கள் ஆய்வு மூலம் கிடைக்கக் கூடியவாக இருந்தால். 1963-ஆம் ஆண்டில் கிங் என்பவரால் விவரிக்கப்பட்ட ஒரு வரைபட முறையைப் பயன்படுத்தி, அத்தனிமத்தின் நிறைப் பெயர்ச்சி புலப் பெயர்ச்சி ஆகிய இரு கூறு களையும் தனித்தனியே மதிப்பீடு செய்ய முடியும். புலப் இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட பெயர்ச் சியைக் கொண்டு அணுக்கருவின் கட்டமைப்பிற்குக் கற்பிக்கப்பட்ட மாதிரி அமைப்புக்களை ஆய்வு செய்ய முடியும். அணுக்கருவின் ஆரத்தையும், மின் மற்றும் காந்தப் பல் முனைத்திருப்பு திறன்களையும் (multi- pole moments) கணக்கிட முடியும். வரைபட முறை யினால் கணக்கிட்டறிந்த சிறப்பு நிலை நிறைப் பெயர்ச்சியின் மதிப்பைக் கொண்டு, அணுவின் கட்ட மைப்பு மற்றும் அதன் அகத்தே காணப்படும் இயக் கங்களில் உள்ள சார்பியல் விளைவுகள் (relativistic effects) ஆகியவற்றை ஆய்வு செய்ய முடியும். ஐசோடோப் பெயர்ச்சியின் புள்ளி விவரங்களை எக்ஸ்கதிர் ஆற்றல் உமிழ் எலெக்ட்ரான்களின் இடைப் பெயர்வுகளின் மூலமும், மியூயான் அணுக்களில், எக்ஸ் கதிர் ஆற்றல் உமிழ் மியூயான்களின் இடைப் பெயர்வுகளின் மூலமும் கண்டறியலாம். 202 200 199 201 198 204 546.076 546.074 546.072 அலைநீளம் am படம் 1. நிறை எண் அதிகரிக்கப் புலப் பெயர்ச்சி, நிறை பெயர்ச்சியைவிடக் கூடுதலாக உள்ளது. மெ.மெய்யப்பன் ஐசோடோப் விளைவு L ஐசோடோப் அணுக்கருக்கள் கலந்திருப்பதால் ஒரு பொருளின் நிறை அல்லது. நிறைப் பரவீட்டில் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக மூலக்கூற்றின் பண்பிலோ அணுப்பண்பிலோ தோன்றும் வேறுபாடு கள் ஐசோடோப் விளைவுகள் (isotopic effects) எனப்படும். அடர்த்தி, மோலார் பருமம், நிலை மாற்ற வெப்பநிலைகள், மிகுமின் கடத்தல். கட்டமைப்பு, வளிம நிலை விரியல் குணகங்கள் virial coefficients) ஆகியவற்றில் ஐசோடோப் விளைவுகளால் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. படிசுக் பட்டை நிறமாலைகளில் ஏற்படும் ஓரிடத்தனிம விளைவுகளை 1919 ஆம் ஆண்டில் ஐம்ஸ் கண்டு பிடித்தார். அவற்றுக்கான தத்துவ அடிப்படைகளை 1925 ஆம் ஆண்டில் முல்லிகன் வகுத்தளித்தார். மூலக்கூறின் மொத்த உள்ளிட ஆற்றலின் முக்கிய ஆக்கக்கூறுகளான சுழற்சி ஆற்றல், அதிர்வு ஆற்றல் எலெக்ட்ரானிய ஆற்றல் ஆகியவை மூலக்கூறிலுள்ள அணுக்களின் நிறைகளைப் பொறுத்திருக்கின்றன. எனவே அணுக்களின் ஐசோடோப் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் மேற்கூறிய ஆக்கக்கூறு ஆற்றல் களைப் பாதித்து, வரிகளை நிறமாலை இடம் பெயரச் செய்யும். இதன் காரணமாக இயல்பான வரிகள், பட்டைகள் ஆகியவற்றுடன் கூடவே கூடுத லான வரிகளும் பட்டைகளும் தனியாகத் தோன்றும். ஹைட்ரஜன் குளோரைடின் சுழற்சி அதிர்வுப்பட்டை நிறமாலையில் ஒவ்வொரு வரியும் இரண்டாகத் தெரிகின்றது. அதற்கு 35, 37 37 ஆகிய நிறைகள்