ஐசோடோப் 495
உள்ள இரண்டு குளோரின் ஐசோடோப்கள் இருப்பதே காரணம். மூன்று வகையான பட்டை நிறமாலை களிலும் ஓரிடத் தனிம விளைவு காணப்பட்டாலும் அதன் அளவு மூன்றிலும் சமமாகஇருப்பதில்லை, ஏனெ னில் ஒவ்வொரு வகை நிறமாலையும் உண்டாக்கப் படுகிற விதம் அணுக்களின் நிறையை ஒரே அளவில் சார்ந்திருக்கவில்லை. தூய சுழற்சிப் பட்டை நிற மாலையில் ஏற்படும் ஐசோடோப் விளைவு அணுக் களின் நிலைமத் திருப்புதிறனில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக ஏற்படுகிறது. சுழற்சி அதிர்வுப் பட்டை யில் ஏற்படும் ஐசோடோப் விளைவு முக்கிய மாக மூலக்கூறின் அலைவு அதிர்வெண்ணில் ஏற் படும் மாற்றத்தின் காரணமாக உண்டாகிறது. HCI இன் சுழற்சி அதிர்வுப் பட்டைகளில் தோன்றும் ஐசோடோப் விளைவுகளை ஆய்வு செய்ததிலிருந்து குளோரினுக்கு 35, 37 என்ற நிறைகளுள்ள இரண்டு ஐசோடோப்களிருப்பது உறுதியாகியிருக்கிறது. அதேபோல 39 என்ற நிறை யுள்ள குளோரின் ஐசோடோப் இல்லை என்பதும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஹார்டி, பார்க்கர் டென்னிசன் ஆகியோர் HCI இன் சுழற்சி-அதிர்வுப் பட்டைகளை ஆய்வு செய்து ஹைட்ரஜனுக்கு H-I, D-2 என்ற இரண்டு ஐசோடோப்கள் இருப்பதை மெய்ப்பித்தனர். அதன் மூலம் டியூட்ரியத்தின் நிறையையும் கணக்கிட முடிகிறது. தூய சுழற்சிப் பட்டைகளில் சுழற்சி.வரியின் அதிர்வெண் சுழலும் மூலக்கூறின் நிலைமத் திருப்பு திறனுக்குத் தலைகீழ் விகிதத்தில் உள்ளது. நிலைமத் திருப்புதிறன்[=ud*. இதில் " என்பது தொகு பயன் நிறை. d என்பது அணுக்கருக்களுக்கு இடை யிலுள்ள தொலைவு. எனவே வரியின் அதிர்வெண் Pde -க்குத் தலைகீழ் விகிதத்தில் இருக்கும். ஐசோடோப் விளைவின் காரணமாக d மாறாது என்றே கருதலாம். எனவே அதிர்வெண்ணில் ஏற் படுகிற மாற்றம் அணுக்கருவின் நிறையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே உண்டாகும். ஓர் ஈரணு மூலக்கூறில் உள்ள ஓர் அணுவுக்கு இரண்டு ஐசோ டோப்கள் இருப்பதாகக் கொள்ளலாம். அவை அடங்கிய இரண்டு மூலக்கூறுகளின் தொகுபயன் நிறைகள் 1. ", என்க. என்ற அதிர்வெண்ணுள்ள வரி ஐசோடோப் விளைவினால் ரண்டாகப் பிரியும். அவற்றுக்கு இடையிலுள்ள அதிர்வெண் வேறுபாடு dx = (1-) இதிலிருந்து ஐசோடோப் விளைவு 1/49, 7 ஆகியவற்றைப் பொறுத்திருக்கிறது என்று தெரிகிறது. மிகலேசான தனிமங்களைத் தவிர மற்றவற்றுக்கு நஈ ஏறக்குறைய ஒன்றுக்குச் சமம். என்பது ஒரு குவாண்டம் நிலையிலிருந்து இன்னொரு குவாண்டம் நிலைக்குச் சுழற்சி ஆற்றலில் ஐசோடோப் விளைவு 495 ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. சுழற்சி ஆற்றல் மிகச்சிறியது. எனவே உம் மிகச்சிறியதாகவே இருக்கும். எனவே தூய சுழற்சி வரிகளில் ஐசோடோப் விளைவினால் ஏற்படும் பிரிகை மிகச் சிறியதாக இருக்கும். அதைக் கண்டுபிடிப்பது கடினம். அதிக நிறையுள்ள ஐசோடோப்பால் ஏற்படும் வரி அதிக அலைநீளமுள்ளதாக இருக்கும். ஐசோடோப் விளைவினால் வரிகளில் ஏற்படும் பிரிகையிலிருந்து ஐசோடோப்களின் நிறைகளைக் கணக்கிடலாம். அவ்வரிகளின் செறிவுகளை அளவிட்டு ஐசோடோப் களின் சார்பளவுகளைக் கணக்கிடலாம். ஆனால் இத்தகைய பட்டை நிறமாலைகள் தொலைக் கீழ்ச் சிவப்புப் பகுதியில் அமைந்து விடுவதால் தூய சுழற்சிப் பட்டைகளில் ஐசோடோப் விளைவுகளை ஆய்வு செய்ய முடிவதில்லை. நுண்ணலை நிறமாலை மானிகளின் உதவியால் மூலக்கூறுகளின் தூய சுழற்சி உட்கவர் நிறமாலைகளை நேரடியாக ஆய்வு செய்ய முடிந்திருக்கிறது. இதன் மூலம் நிறை மிக்க ஐசோ டோப்களின் நிறைகளை நுட்பமாகக் கண்டு பிடிக்க முடியும். நுண்ணலை நிற மாலை முறை, செலவு குறைந்ததாகவும், பின்னணி ஒளிகளாலும் மாசுகளா லும் பாதிக்கப்படாததாகவும் இருக்கிறது. அதிர்வு நிறமாலையில் அதிர்வெண், நிறையின் இருமடி மூலத்திற்குத் தலைகீழ் விகிதத்திலுள்ளது. ஐசோடோப் மூலக்கூறுகளின் நிறைகள் வேறுபட்டி ருப்பதால் அவற்றின் அதிர்வெண்கள் வெவ்வேறா யிருக்கும். அதிக நிறையுள்ள' ஐசோடோப் மூலக் கூறின் அதிர்வெண்கள் குறைவாகவும் குறைந்த நிறையுள்ளதன் அதிர்வெண்கள் அதிகமாயும் இருக் கும். அதிர்வு நிறமாலையில் ஐசோடோப் விளை வினால் ஏற்படும் அதிர்வெண் மாற்றம் சுழற்சி நிற மாலையில் ஏற்படுவதை விடப் பன்மடங்கு அதிகம். HC) மூலக்கூறுகளின் சுழற்சி அதிர்வுப் பட்டைகளில் HCI -35 வரியின் குறைந்த அதிர்வெண் பக்கத்தில் செறிவுகுறைந்த HCI - 37துணை வரி தென்படுகிறது. அவற்றின் செறிவுகளை ஒப்பிட்டதிலிருந்து CI -35, அணுக்கள் CI -37 அணுக்களை விட மூன்று மடங்கு அதிகமாயிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரானியப் பட்டைகளில் மூன்று விதமான ஐசோடோப் விளைவுகள் வெளிப்படுகின்றன. எலெக்ட்ரானிய ஐசோடோப் விளைவு மிகச் சிறிய அளவில் ஏற்படுகிறது. அதைப்பரிசோதனை மூலம் கண்டுபிடிப்பது கடினம். ஐசோடோப் மூலக்கூறுகளின் எலெக்ட்ரானியப்பட்டை நிறமாலையில் ஒவ்வொரு வரிக்கும் மிகு நுண் கட்டமைப்பைப் போன்றதொரு அமைப்பு இருக்கலாம். எலெக்ட்ரானிய ஐசோடோப் விளைவு மிகவும் குறைவாக இருப்பதால் எலெக்ட்ரானியப் பட்டை நிறமாலைகளில் மொத்த ஐசோடோப் விளைவு, அதிர்வு மற்றும் சுழற்சி ஐசோடோப் விளைவுகளின் கூட்டுத்தெ தாகையாக இருக்கும். அதிர்வு யல்