பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐசோபெரினாய்டு 497

மெத்தில் சைக்ளோஹெக்சீன் (II) இதன் முக்கிய ஈருறுப்பியாகும். ஐசோப்ரீனின் பல்லுறுப்பாகும் தன்மை ஆக்சி ஜன் இல்லாத நிலையில் குறையும். மேலும் மூவி ணைய் பியூட்டைல் கேட்டகால் போன்ற வினை தடுப்பானைப் பயன்படுத்தியோ வெப்பநிலையைக் குறைத்தோ பல்லுறுப்பாகும் தன்மையைக் குறைக்க லாம். செயற்கை முறையில் பியூட்டைல் ரப்பர் தயாரிக்க இது பயன்படுகிறது. து ஐசோபெரினாய்டு த. தெய்வீகன் எண் தாவர, விலங்கினங்களில் உண்டாகும் ஐசோப்ரின் வகைச் சேர்மங்கள் ஐசோபெரினாய்டுகள் (isoperenoi ds) என்று குறிப்பிடப்படுகின்றன. டர்ப்பென்ட் டைன் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்ட டெர்ப் பீன் அல்லது டெர்ப்பீனாய்டு என்பது ஐசோபெரி னாய்டுகள் கலந்த கலவையாகும். தாவரங்களில் ஐசோபெரினாய்டுகள் எளிதில் ஆவியாகும் ணெய்களிலும் ஜிபெரலிக் அமிலம் போன்ற வளர்ச்சி யைத் தடுக்கும் ஹார்மோன்களிலும், சிவப்பு. மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறமிகளிலும் (கரோட்டி னாய்டுகள்) இருக்கின்றன. தாவரங்களில் காணப் படும் சில அல்க்கலாய்டுகளைப்போல், அவற்றின் பச்சை நிறத்திற்குக் காரணமான குளோரோஃபில் என்ற நிறமியும் ஓரளவு ஐசோபெரினாய்டே ஆகும். விலங்குகளில் ஐசோபெரினாய்டுகள் பல்வேறு எண் ணெய் மற்றும் மெழுகுகளிலும், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றிலும் இருக்கின்றன. விலங்கினங்களில் வளர்சிதைமாற்றங்களுக்கு ஐசோபெரினாய்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. வைட்டமின்கள் A, E, K முதலானவை முழுமை யாகவோ ஓரளவோ யுபிகியூனோன்களைப் (சகநொதி கள் Q) போன்று ஐசோபெரினாய்டு மூலக்கூறு அமைப்பைப் பெற்றிருக்கின்றன. பூச்சியினங்களில் சில ஐசோபெரினாய்டு சேர்மங்கள் அவற்றின் முழு வளர்ச்சிக்கும் இனப்பெருக்கத்திற்கும் எதிரிகள் தாக்க வரும்போது எச்சரிக்கவும் பயன்படுகின்றன. ஸ்டீராய் டுகள் என்கிற தாவர. விலங்கினங்களில் முக்கியமான சேர்மங்கள் ஐசோபெரினாய்டுகள் அல்ல. பொருளா தார அடிப்படையில் முக்கியமாகக் கருதப்படும் ஐசோபெரினாய்டுகளில் டர்பென்ட்டைன், ரோசின், கற்பூரம், மெந்த்தால், இயற்கை ரப்பர் ஆகியன அடங்கும். ஐசோபெரினாய்டுகள் மிகவும் சிக்கலான மூலக்கூறு அமைப்புகளைக் கொண்டுள்ளமையால் இவற்றின் அமைப்பைப் பற்றித் தெளிவான முறையில் எடுத்துக் ஐசோபெரினாய்டு 497 T கூறப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்தே கரிம வேதியல் வல்லுநர்கள் முனைந்தனர். தொடக்க காலத்தில் மோனோடெர்ப்பீனாய்டுகள் எனப்படும் பத்துக் கார்பன் அணுக்களைப் பெற்றிருக் கும் ஐசோபெரினாய்டுகளைப் பற்றிய மூலக்கூறு அமைப்புகள் அறியப்பட்டன. பின்னர் ஐசோபெரி னாய்டுகளின் அமைப்பை அறியத் தேவையான நுட்பமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் 15-40 வரை கார்பன் அணுக்களைப் பெற்ற ஐசோ பெரினாய்டுகளைப் பற்றி விவரமான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. 1887 இல் ஆட்டோ வாலாக் என்ற ஜெர்மன் அறிவியலார் பத்துக் கார்பன் அணுக் களைக் காண்ட மேனோடெர்ப்பீனாய்டுகளில் கார்பன் அணுக்கள் பல்வேறு அமைப்பு மாற்றங்களில் இருக்கலாம். இவ்வாறே பதினைந்து கார்பன் அணுக்களைக் கொண்ட செஸ்க்வி டெர்ப்பீனாய்டு களிலும் பல்வேறு அமைப்பு மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறினார். வாலாக் ஐசோப்ரின் விதி என்ற ஒரு புது முறையை உண்டாக்கினார்; இவ் விதியின்படி ஐசோபெரினாய்டுகளின் அமைப்புகளை எளிதில் அறிய முடிந்தது. இருபதாம் நுற்றாண்டின் நடுவில் உயிரியல் வகைகளில் (biological systems) ஐசோபெரினாய்டுகளின் மூலம், இயற்கையில் கிடைக் கும் பிற பொருள்களுடன் அவற்றிற்கான தொடர்பு. தாவர, விலங்கினங்களில் அவற்றின் உயிரியல் விளைவுகள் (physiological effects) ஆகியவைபற்றிய உண்மைகளை ஆராயும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. கொண்ட அமைப்பு. ஐசோபெரினாய்டுகளில் காணப்படும் அமைப்புகளில் சாதாரணமாகக் காணப்படுவது ஆறு கார்பன் அணுக்களைக் வளையமாகும். இவ்வகையில் அடிப்படை அமைப்பைக் கொண்ட எளிய சேர்மம் வளைய ஹெக்சேன்: இது- ஐசோ பெரினயாய்டு அன்று. 1 இல் குறிப்பிட்டுள்ளவாறு இதைக் குறிக்கலாம். மேலும் படம் 2,3இல் குறிப்பிட்டுள்ளவாறும் குறிக்கலாம். 2 ச்சேர்மங்களில் ஆறு கார்பன் அணுக்களும் ஒரே தளத்தில் இல்லாமல் படம் 4, 5 இல் காட்டி யுள்ளவாறு அமைகின்றன. கார்பன் கூடு (carbon skeleton) என்ற தொடர் மூலக்கூறு கார்பன் அணுக் கள் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது; அதில் இணைந்திருக்கும் மற்ற அணுக் களையோ, நிறைவுறாப் பிணைப்புகளையோ அது குறிப்பதில்லை. பல்வேறு வேதி வினைகளில் கார்பன் அணுக்களுக்கிடையேயான பிணைப்புகள் முறிவடைவ தில்லை. எனவே கார்பன் கூடு மாறுவதில்லை. பல ஐசோபெரினாய்டு சேர்மங்களில் மூன்று, நான்கு, ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்ட வளையக் கூடுகள் மூலக்கூறு அமைப்பாக இருக்கின்றன. வவகையான சேர்மங்களில் கார்பன்-கார்பன் அணுக்களுக்கு