பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐசோபெரினாய்டு 499

CH CH2 CH3 CH CH, CH 2 . CH |CH3 CH CH₂ CH2 'CH 3 CH CH3 CH2 CH3 Hz C H₂C சீப HC CH. CH2 CH2 ஐசோபெரினாய்டு 499 CH3 பாலான ட்ரை மற்றும் டெட்ரா டெர்ப்பீன்கள் வால்-வால் (tail to tail) பிணைப்புகளினால் பிணைக்கப்பட்டுள்ளன. ஸ்குவாலின் (10) என்கிற முக்கிய ட்ரைடெர்ப்பீன் ஹைட்ரோகார்பன் படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப் பட்டுள்ள அம்புக்குறி இரு செஸ்க்விடெர்ப்பீன் பகுதிகள் இணைந்திருப்பதைக் குறிக்கின்றன. இயற்கையில் கிடைப்பு. ஐசோபெரினாய்டுகள் தாவர, விலங்கினங்களில் சம அளவில் பரவி இருப்ப தில்லை; ஆனால் இவற்றில் சில வகைகள் திசுக்களில் காணப்படுகின்றன. ஆவியாகும் மணத்தைலங்களான பெரும்பாலான பொருள்கள் மோனோ மற்றும் செஸ்க்வி டெர்ப்பீன் ஹைட்ரோகார்பன்களும் அவற் றின் ஆக்சிஜனேற்றம் பெற்ற பெறுதிகளான ஆல்க ஹால்கள், கீட்டோன்கள், ஆல்டிஹைடுகள் போன்ற வையுமாகும், மெந்தால், சிட்ரால், கற்பூரம், லிமனின் ஈ- பைனீன் போன்றவை இவ்வகையில் அடங்கும். பைன் மரவகைகளிலிருந்து பெறப்படும் ஆவியாகாத ரெசின்கள் டைடெர்ப்பீன் கார்பாக்சிலிக் அமிலங் களைக் கொண்டிருக்கின்றன. இவை அபீட்டிக், பால்ஸ்ட்ரிக் எலியோட்டினாயிக் என்ற மூன்று வகை களில் பிரிக்கப்பட்டுள்ளன. மீன்கள் மற்றும் வேறு விலங்கினங்களின் கல்லீரல் பெரும்பாலும் வளையமில்லா ட்ரைடெர்ப்பினாய்டு ஹைட்டோகார்பன் பிரிவைச் சேர்ந்த ஸ்குவாலின் என்ற டெர்ப்பீன் மிக்க எண்ணெயைக் கொண்டுள் ளன. டெட்ரா டெர்ப்பீன் ஹைட்ரோகார்பன்களும், அவற்றின் ஆக்சிஜனேற்றப் பெறுதிகளும் தாவர, விலங்கினங்களில் காணப்படும் கரோட்டீன் நிறமிகளாக உள்ளன. வகை சிறப்பு. ஐசோபெரினாய்டுகளின் உயிரியல் பண்பு களைப்பற்றிச் சரிவரத் தெரியவில்லை. தாவர விலங் கினங்களில் ஸ்டீராய்டுகள் உருவாதலின் டை நிலைப் பொருள்களாகவும், விலங்கினங்களில் இந்த ஸ்டிராய்டுகள் முக்கிய உயிரியல் வினைகளை நிறை வேற்றுவனவாகவும் பயன்படுகின்றன. தாவரங்களில், டெட்ராடெர்ப்பீன் கரோட்டீனாய்டு நிறமிகள் ஒளிச் சேர்க்கையின் போது குளோரோஃபில் நிறமியுடன் அ.க. 6-32அ சேர்ந்து பங்காற்றுகின்றன. இதே வகை நிறமிகள் விலங்கினங்களில் வைட்டமின் A தயாரிப்பில் ஈடு படுகின்றன. மேலும் இவ்விட்டமின் இனப்பெருக்கம், வளர்ச்சி ஆகியவற்றிற்கும் தேவைப்படுகிறது. இதே போல் ஐசோபெரினாய்டு அமைப்பை முழுதுமாக அல்லது ஓரளவு கொண்ட மற்ற வைட்டமின்கள் இனப்பெருக்கத்திற்குத் தேவையான வைட்டமின் Eயும் இரத்தம் உறைதலில் முக்கிய பங்காற்றும் வைட்டமின் K யும் ஆகும். தாவரங்களில் மோனோ மற்றும்செஸ்குவி டெர்ப்பீன் என்ன பங்காற்றுகின்றன என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரியாவிட்டாலும் அவை பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது. ஐசோபெரினாய்டுகள் மணத்தைலங்களாகவும் மருந்துப் பொருள்களாகவும் பயன்படுகின்றன. அம்பர் என்கிற ஐசோபெரினாய்டு ரெசினைப் பழங்காலத்திலேயே மக்கள் அறிந்திருந் தனர். டர்பென்டைன் என்ற ஐசோபெரினாய்டு தொடக்க காலங்களில் கரைப்பானாகப் பயன் பட்டது. பின்னர் அதிலிருந்து வேதிவினை களால் பயன்படும் தனித்தனி பொருள்கள் தயாரிக் கப்பட்டன. டர்பென்டைனிலிருந்து பெறப்படும் பொருள்களில் வாசனைப் பொருள்களுக்குத் தேவை யான பொருள்கள், வைட்டமின் A, உயவு சேர்க்கைப் பொருள்கள் (lubricant additives), பூச்சிக்கொல்லிகள் ஒட்டும் பொருள்களில் (adhesives) பயன்படுத்தப்படும் ரெசின்கள், தொழிலக வேதிவினைப் பொருள்கள் ஆகியன அடங்குகின்றன. ரோசின் அதிக வினையில் லாத கோப்புகள் மற்றும் மேற்பூச்சுத் தயாரிப்புகளில் பயன்படுகின்றன. முறை பிரித்தெடுத்தலும், கண்டறிதலும். இயற்கை மூலங் களிலிருந்து ஐசோபெரினாய்டுகளைப் பிரித்தெடுக்கப் பல்வேறு முறைகள் உள்ளன. டெர்பினாய்டுகளை இயற்பியல், வேதிப் பண்புகளைப் பொறுத்தும், எந்த அளவில் அவை பரவியுள்ளன என்ற அவற்றின் ஏராளத் தன்மைகளைப் பொறுத்தும் பிரித்தெடுக்கும் முறைகள் டர்பென்ட்டைன் மாறுபடுகின்றன. போன்ற எளிதில் ஆவியாகும் பொருள்கள் ஒலியோ ரெசின்களைக் காய்ச்சி வடிப்பதாலும் பைன் மரக் கூழிலிருந்து காகிதம் தயாரிக்கும் போது கிடைக்கும்