506 ஐந்து காயப்பூ
506 ஐந்து காயப்பூ வளரியல்பு, இலைகள் மாற்றிலையடுக்கமைப்புக் கொண்டவை. அரிதாக எதிரிலையடுக்கு அமைப்பு உடையவை. லைக்காம்பில் சுரப்பிகள் உண்டு. இலைப்பரப்பு. முழுமையாக கவோ பிளவுபட்டோ இருக்கும் சிலசிற்றினங்களில் இலையடிச் செதில்கள் உண்டு. மஞ்சரி. தனித்த அல்லது ரெசிம் முறை. பெரும் பாலும் இலைக்கோணத்தில் காணப்படும். மஞ்சரிக் காம்பு இணைந்தது. மூன்று பூவடிச்செதில்கள் உண்டு. அவற்றைப் புறப்புல்லிகள் (epicalyx) அல்லது இன்வலூகர் என்பர். மலர். இருபால் பூக்கள்: ஒழுங்கானவை, அழகானவை, புல்லிவட்டம். 5 புல்லிகள் ணைந் தவை. குழல் சிறியது. அல்லிவட்டம். 5 அல்லிகள்: தனித்தவை வண்மை. பச்சை, மஞ்சள். நீலம். சிவப்பு வண்ணத்துடனும் மாறுபட்ட வண்ணப் புல்லி களுடனும் காணப்படும். இதழ்களையடுத்து உள்ளே 1,2 அல்லது 3 சுற்றுகளில் நீண்ட நீட்சிகளைக் காணலாம். இவற்றைக் கரோனா என்பர். இவையே மலரின் அழகிற்குக் காரணமாக அமைகின்றன. மகரந்ததாள்கள். 4 அல்லது 5 நீண்ட உருண்டைத் யான ஒரு காம்பின் மேல் அமைந்திருக்கும். காம்பை ஆண்ட்ரோஃபோர் அல்லது மகரந்தத்தாள் தாங்கி என்பர். மகரந்தப்பைகள் சுழல் அமைப்பில் இருக்கும். சூலகம். காம்பற்றது. மேல்மட்டச் சூற்பை; 3 சூலிலைகள்; ஒரு சூலறை; பல சூல்கள்; சுவர் ஒட்டு முறை (parietal) சூல் தண்டுகள் 3 வெளிநோக்கி அமைந்தவை: சூல்முடி தலை வடிவம். கனி. சதைப்பற்றுக்கனி விதைகள் தட்டையாக ஏரில் (aril) என்ற வளரிகளால் சூழப்பட்டுள்ளன. மடம் 1. பாசிஃப்ளோரோ கொடி மலர் மொட்டுகள் பாடம் 2, பாசிஃளோரா . கனி, கனிக்குறுக்கு வெட்டு. இம்மலருக்கு ஐந்துகாயப்பூ (flower of five wounds) அல்லது பாசமலர் (passion flower) என்ற பெயர்கள் அமைந்ததற்கு அப்பூவின் சிறப்பு அமைப்பு களே காரணம் ஆகும். இப்பூவைப் பற்றிய மூட நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் தென் அமெரிக்கா விற்குச் சென்ற ஸ்பானிய, இத்தாலிய மதம் வோரால் தோற்றுவிக்கப்பட்டவையாகும். இப் பூவிலுள்ள 10 வண்ணப் பகுதிகளும் (அல்லிகள். புல்லிகள்) ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட போ பரப்பு து இருந்த 10 சீடர்களைக் குறிக்கின்றன என்று கருதுவதுண்டு. அதனால் இதற்குப் பாசமலர் என்ற பெயர் வந்தது. அல்லிவட்டத்தை அடுத்த வளரி அல்லது கரோனா வளையங்கள் ஏசுநாதருக்குச் சூட்டப்பட்ட முள் கீரீடத்தைக் குறிப்பதாகும்.