ஐந்து காயப்பூ 507
தாங்கிக்கு மேல் அமைந்துள்ள 5 மகரந்தத் தாள்கள், ஏசுநாதரைச் சிலுவையில் அறையப் பயன்படுத்திய சுத்தியல்களைக் குறிக்கின்றன என்றும், தலைவடிவச் சூல்முடிகளைக்கொண்ட 3 சூல்தண்டுகள் 3 ஆணி களாகும் என்றும் கூறுவர். நீண்ட வளைந்த பற்றுக்கம்பிகளை ரோமானியச் சிப்பாய்கள் பயன்படுத்திய கயிறுகளோடும், அகன்ற பிளவுபட்ட இலைகளைச்சிப்பாய்களின் கைகளோடும் ஒப்பிடுவதுண்டு. மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் ஃபோகார்டு என்பவரால் கூறப்பட்டுள்ளது. அவர் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய கருத்தை அடிப்படையாகக் கொண்ட படத்தையும் வெளியிட் டுள்ளார். தென் அமெரிக்கக்காடுகளில், தொங்கும் மலர்களோடு கூடிய இக்கொடிகளைக் கண்டவுடன் அம்மலர்கள் தங்களுடைய உறுப்புகள் மூலம் இறையன்பை வெளிப்படுத்துவதாக ஸ்பானியர்கள் கருதினர். மேலும் காட்டுமிராண்டிகளான செவ்விந்தியர்களைக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் வெளியிடுவ தாக அவர்கள் கருதினர். ரோம் நகரைச் சேர்ந்த ஜேக்கோமா போஸியோ என்பார் இச்செடி சிலுவையைக் குறிப்பது தவறு என்றும், இதை ஐந்து காயப்பூ என்றே குறிப்பிடவேண்டும் என்றும் கூறியுள்ளார். பொதுவாக இம்மலர் மூடிய நிலையிலேயே காணப்படும். இதனடிப்படையில் போஸியோ சிலுவையையும் இறையன்பையும் காட்டுமிராண்டி களின் பார்வையிலிருந்து மறைப்பதற்காகவே மலர் கள் மூடிய நிலையில் உள்ளன என்று கூறியுள்ளார். தென் அமெரிக்கப் பெரு நாட்டில் காணப்படும் பாஸிஃப்ளோரோ மலரின் அல்லிகள் இளஞ்சிவப் போடு கூடிய வெண்மையானவை. மகரந்தத்தாள் தாங்கியின் அடிப்பகுதியைச் சுற்றி மஞ்சள் வண்ணமும் அதில் 5 இரத்தச் சிவப்பு நிறப் புள்ளிகளும் காணப் படுகின்றன. இவையே ஏசுநாதர் பெற்ற காயங்களைக் குறிப்பதாகும். ஐந்து பயிரிடும் முறை. பொதுவாகப் பாசிஃப்ளோராவை முதிர்ந்த குச்சிகளை வெட்டி நட்டுப் பயிர் செய்வதே வழக்கமாகும். விதைகளிலிருந்தும் இவற்றைப் பெருக்க முடியும். தோட்டக்கலையியலர்கள் இவ் வினத்தைக் கலவியல் செய்வதன் மூலம் மேம்பாடு அடையச் செய்துள்ளனர். இதனால் வகைப் பாட்டியலில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. நாற்றுப் பாத்திகளை நிழலோடு கூடிய ஈரப்பாங் கான பகுதிகளில் அமைக்க வேண்டும். முதிர்ந்த 4 அல்லது 5 கணுக்களோடு கூடிய குச்சிகளை ஊன்ற வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் வேர் விட்ட குச்சிகளைப் பிடுங்கி குழிகளில் நடுவர். நுனிக் குருத்தை வெட்டி நீக்குவதால் பல கிளைகள் ஐந்து காயப்பூ 507 படம் 3. பாசிஃப்ளோரா கொடி தோன்றி நன்கு வளரும். கொடிகளைப் பந்தல்கள் அல்லது வேலிகளில் ஏற்றி வளர்ப்பர். பாசிஃப்ளோரா இனத்தில் பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த பல சிற்றினங்கள் உண்டு. எ.கா: பா. க்வாண்ட்ராங்குலாரிஸ் (P. quadrangularis) பா. எடுலிஸ் (P. edulis). பா. லாரிஃபோலியா (P. laurifolia). வெப்ப நாடுகளில் காணப்படும் வை உண்ணத்தக்க கனிகளைக் கொடுப்பனவாகும். பா. க்வாண்ட்ராங்குலாரிஸ். இதைப் பெரிய க்ராண்டில்லா (giant grandilla) என்பர். இதன் கனிகள் மஞ்சள் வண்ணத்துடன் 20 செ.மீ. நீளமும்,