பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 ஐந்து காயப்பூ

508 ஐந்து காயப்பூ முட்டைவடிவமும் பெற்றிருக்கும். இதன் சதைப் பற்றுப் பகுதி புளிப்பாயிருக்கும். காய்களைக் கறி யாகச் சமைத்து உண்பர். குளிர்பானங்கள் தயாரிக் கவும் பயன்படுத்துவர். கிராண்டில்லாக் கொடிகளைத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கும்போது அவற்றின் மலர்களைச் செயற்கை முறையில் மகரந்தச் சேர்க்கை நடத்தினால்தான் கனிகள் தோன்றும். கனிகளை அளவுக்குமேல் உண்டால் மயக்கநிலை ஏற்படும். இதன் வேரில் கிழங்குகள் காணப்படும். சேம்பு போல் அவற்றை வேகவைத்தும் உண்பதுண்டு. வேரில் பாசிஃப்ளோரின் என்ற நச்சு அல்கலாய்டு உள்ளது. இலைகள் பா. எடுலிஸ். இது தென் பிரேசிலைத் தாயக மாகக் கொண்டது. இதைப் பாசமலர் அல்லது ளம் கவதா என்பர். க்ராண்டில்லா ஆழமாக மூன்றாகப் பிளவுபட்டிருக்கும். கனி 4-5 செ.மீ. குறுக்களவு இருக்கும். கனித்தோல் கெட்டி யானது. சதைப்பற்றுப் பகுதி சற்றுப்புளிப்பு மிகுந்து உள்ளதாலும், நறுமணம் கொண்டதாலும் குளிர் பானத் தயாரிப்பில் பயன்படுத்துவர். இக்கனிகளைச் சர்க்கரையுடன் சேர்த்து உண்பர். இந்தியாவில் புகுத்தப்பட்ட இந்தச் சிற்றினம் நீலகிரி மலைப் பகுதிகளில் நன்கு வளர்கிறது. மேலும் சேர்வராயன் பகுதியிலும், வயநாடு பகுதிகளிலும், ஆந்திராவின் அரக்குப் பள்ளத்தாக்கிலும் பயிரிடப்படுகிறது. வணிக முறையில் தென்னாப்பிரிக்கா. கென்யா. ஆஸ்தி ரேலியா, நியூஸிலாந்து, ஹவாய்த் தீவுப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதன் மலர்கள் பொதுவாக அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உட்பட்டவை. இயற்கை மகரந்தச் சேர்க்கையைவிடச் செயற்கை முறையில் கைகளால் நடத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை மூலம் கிடைக்கும் கனிகள் பெரியவையாகவும், சாறுமிக்கவையாகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். சில சூழ்நிலைகளில் கனிகள் தோன்றாமைக்குக் காரணம் மகரந்தத் தூள்களின் நிலையேயாகும். தனி மகரந்தத் தூள்கள் நீரோடு தொடர்பு கொண்டால் அவை முளைக்காமல் வெடித்து விடுகின்றன. ஆனால் சூல்முடியை அடைந் தால் மகரந்தத் தூள்கள் வெடிக்காமல் முளைக் கின்றன. மகரந்தச் சேர்க்கையின் போது மழை பெய்தால் கனி உண்டாவதில் இடையூறு ஏற்பட இதுவே காரணமாகும். பொதுவாகப் பூக்கள் மலர்ந்த வுடன் நிமிர்ந்துள்ள சூல்தண்டுகள் மூன்றும் கீழ் நோக்கி வளைந்து மலர் மூடுவதற்குச் சற்றுமுன், மீண்டும் முன் நிலையை அடைந்துவிடும். எப்போதும் நிமிர்ந்தே காணப்படும் சூல்தண்டுகளைக் கொண்ட மலர்களில் பெரும்பாலும் பெண் மலடாகவும், ஆனால் ஆண் செயல் மலர்களாகவும் அமைகின்றன. கிராண்டில்லாவில் பல வகை உண்டு. குறிப் பாக இளம் ஊதா அல்லது மஞ்சள் வகைகளே காணப்படுகின்றன. இளம் ஊதா வகை உயரமான மலைப்பகுதிகளில் நன்கு கொடுக்கின் ன்றன. ஆனால் பயன் வளர்ந்து மிகு அடிவாரப் பகுதிகளில் அவை தழைப்பகுதிகளை மட்டுமே தருகின்றன. மஞ்சள் வகையைத் தமிழ்நாடு கேரள மாநிலச் சமவெளிப் பகுதிகளில் பயிரிடுகின்றனர். க்ராண்டில் லாவைப் பழத்தோட்டங்களில் ஊடுபயிராகவும் வளர்ப்பதுண்டு. பொதுவாகத் தென்னிந்தியாவில் க்ராண்டில்லாக் கொடிகளை வெட்டிச் சீர் செய்வ தில்லை. ஆனால் கனிகள் புதுக்கிளைகளில் தோன்று வதால், நோயுற்ற கிளைகளைத் தக்க பருவத்தில் நீக்குவது நல்லது. விளைச்சல். நாற்று நட்ட இரண்டாம் ஆண்டி பயன்தரத் தொடங்கும். உச்ச விளைச்சல் ஆறாம் கிடைக்கும். ஆண்டிலிருந்து குச்சிகள் மூலம் உண்டாக்கப்பட்ட செடிகள் விரைவில் பயனளிக்கும். கொடிக்கு ஏறத்தாழ 7-9 கிலோ அதாவது கனிகள் கிடைக்கும். கொடியிலிருந்து உதிர்ந்த கனிகளை இரண்டு நாள்களுக்கொரு முறை திரட்டுவது வழக்கம். ஒரு 150-250 பயன். கனிக்கு உறுதியான தோல் உள்ளதால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லலாம். இதன் இளம் ஊதா வகைக் சுனிகள் மிகவும் சத்துடையவை. அவற்றில் தோல் 50% சாறு 37% உள்ளன; சத்துப் பகுதியில் சர்க்கரை, அஸ்கார்பிக் அமிலம் வைட்டமின்கள் கரோடீன் ஆகியவை காணப்படுகின்றன. உட்கூட்டுப்பொருள். ஈரப்பசை 80%, நார் 0.05% புளிப்புச்சத்து 3%, சர்க்கரை 5% புரோட்டீன் 1% மேலும் கால்சியம், பாஸ்ஃபரஸ், இரும்பு போன்ற வையும் உண்டு. பா. லாரிஃபோலியா. என்றும் கூறுவர். இதை நீர் எலும்பிச்சை பா. ஃபாய்டிடா (P. foetida). இதைச் சிறு பூனைக் காவி என்று கூறுவர். தென் அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் தன்னிச்சையாக வளர் கிறது. அங்கிருந்து பிற வெப்ப நாடுகளில் புகுத்தப் பட்டுள்ளது. இக்கொடியின் தண்டு, இலை, பிற பகுதிகள் அனைத்தும் பசையோடு கூடிய தூவிகளால் சூழப்பட்டிருக்கும். இதனால் உராயும்போது இக் கொடிகள் கெட்ட மணத்தை உண்டாக்கும். தென்னிந்தியாவில் தரிசு நிலங்களிலும் புறம்போக்கு நிலங்களிலும் இக்கொடியைக் காணலாம். மலர்கள் 4-5 செ.மீ. குறுக்களவு இருக்கும். கனி மஞ்சளாக 3-4 செ. மீ. நீளமிருக்கும், நிலைத்த புறப்புல்லி களால் சூழப்பட்டிருக்கும், சதைப்பற்றுப் பகுதி உண்ணத்தக்கது. ஆனால் காய்ப்பக்குவத்தில் நச்சு உடையது. காயின் தோல், விதைகள் இவற்றில் நச்சுப் பொருளான ஹைட்ரோஸயனிக் அமிலத்தின் மூலப்