பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐரிஷ் கடல்‌ 509

4 பொருள்கள் உண்டு. காயை மருந்தாகப் பயன் படுத்துவர். குறிப்பாக ஆஸ்த்மா, நரம்புத் தளர்வு வயிற்றைத் தூய்மை செய்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்துவர். இதன் இலையை மயக்கம், தலைவலி ஆகியவற்றை நீக்கத் தலையில் வைத்துக்கொள்வர். தன் வடிசாறு சுவாசகாசம், பித்தம் ஆகியவற்றிற் குத் தகுந்த மருந்தாகும். ஐயாந்தினைட் தி. ஸ்ரீகணேசன் இது 2UO,.7H,O வேதி உட்கூறைக் கொண்டது. ஐய்ாந்தினைட் ianthinite) செஞ்சாய் சதுரத் தொகுதியைச் (orthorhombic) சேர்ந்த ஊசி போன்ற படிகம்.(100) தளம், அபிரகப் பிளவிற்கு இணை யாகக் காணப்படுகிறது. கறுப்பு மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும் இது ஓரத்தில் மஞ்சள் நிறமாகக் காணப்படுகிறது. இதிலுள்ள வரிகள் ஊதா மற்றும் பழுப்பு நிறமாகக் காணப்படுகின்றன. இது எதிர் (-) ஒளி சுழற்றும் தன்மை கொண்டது. அச்சுத் தளம்.(001) தளத்திற்கு இணையாக உள்ளது. - அச்சுத்தளம், (001) தளத்திற்குச் செங்குத் ஒளிவிலகல் எண் a = 1.674.8 = 1. 90, 1.92.ஆகும். கசோலோ, பெல்ஜியன் காங்கோ ஆகிய இடங்களில் காணப்படும் யுரேனினைட், பெக்கியூரலைட், ஸ்கோ பைட் முதலியவற்றுடன் ஐயாந்தினைட் இணைந்து காணப்படுகிறது. தாகக் ஐரிஷ்கடல் காண ணப்படுகிறது. 1 = இரா. சரசவாணி கடல் வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகிய ஐரிஷ் கடல் அயர்லாந்தைப் பிரிட்டனிலிருந்து பிரிக் கிறது. ஐரிஷ் கடலின் வடக்கில் ஸ்காட்லாண்டும். கிழக்கில் இங்கிலாந்தும், தெற்கில் வேல்சும் மேற்கில் அயர்லாந்தும் அமைந்துள்ளன. இந்தக் வட அயர்லாந்து, ஸ்காட்லாண்டுகளுக்கிடையில் வட கால்வாயாலும் அயர்லாந்தின் தென்கிழக்கு முனைக் கும் தென்மேற்கு வேல்சுக்கும் இடையில் ஜார்ஜ் கால்வாயாலும் அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடல் ஏறத்தாழ 210கி.மீ. நீளமும் 240கி.மீ. அகலமும் கொண்டது. இக்கடலின் பரப்பளவு ஏறத்தாழ ஒரு இலட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். இக்கடலின் பெரும ஆழம் ஐரிஷ்கடல் 509 175 மீட்டர். பண்டைக்காலத்தில் இக்கடல்ஹைபெர் னிகஸ் பெருங்கடல் என்றழைக்கப்பட்டது. இக்கடலில் இரு முக்கிய தீவுகள் உள்ளன. மான் என்றழைக்கப்படும் தீவு வடபகுதியின் நடுவில் அமைந்துள்ளது. ஏஞ்சல்சே தீவு வடவேல்சுக் கருகில் அமைந்துள்ளது. வேல்ஸ் மொழியில் மான் எனப்படும் இத்தீவின் பெயர் தொன்மையான மான்மாம் சைம்ரு என்பதாகும். ஐரிஷ் கடலைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளிலுள்ள பழம் பாறைகள் 225-570 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இங்கிலாந்துக்கு வடமேற்குப் பகுதியின் கடற்பகுதியில் காணப்படும் பாறைகள் டிரையாசிக் காலத்தைச் சார்ந்தவை. இப்பான றகளே மான் தீவுக்கு வடகிழக்கு முனையிலும் காணப்படு கின்றன. டெர்ஷியரிக் காலத்தில் ஏற்பட்ட நிலப் பிளவால் பாறைகள் வெடித்துச் சிதறிப் பின்னர் படுகைகள் தணிந்து ஐரிஷ் கடல் உண்டாயிருக்க லாம் என்று புவிப்பொதியியல் ஆய்வுகள் குறிப்பிடு கின்றன. ஐரிஷ் கடலின் மேற்பரப்பு நீரோட்டத்தின் விசை ஜரிஷ் கரைக்கருகில் உள்ள தூய ஜார்ஜ் கால்வாயில் ஏறத்தாழ மணிக் கு 8.கி.மீ. அளவு வரை செல்கிறது. ஜரிஷ் கடலின் மத்திய மேற்குப் பகுதியின் நீரோட்ட விசை மிகவும் குறைவாகும். மேற்கு ஆங்கிலக் கரையோரமாகப் பெரும் ஓதங்கள் உண்டாகும். வடக்கு, மேற்குத் திசை களிலிருந்து வரும், ஓத நீரோட்டங்கள் (tical streams ) ஒன்றாகிப் பாய்ந்து மான் தீவுக்கு வடக்காக ஏறத் வட தாழ 54 வடக்கு அகலாங்கில் ஐரிஷ் கடலில் ணைகின்றன. லிவர்பூல் என்னும் துறைமுகம் இக்கடலின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. மான் செஸ்டர் நகரம் மான்செஸ்டர் கப்பல் கால்வாயால் ஐரிஷ் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.' இக் கடலின் மேற்கே அமைந்துள்ள டப்ளின் துறைமுகம் அயர்லாந்தின் ஏற்றுமதி வணிகத்திற்குப் பெரிதும் துணை புரிகின்றது. இக்கடலில் கோடைக்காலத்தில் சூடை மீனும் குளிர்காலத்தில் வைட்டிங் மீனும் மிகுதியாகப் பிடிக்கப்படுகின்றன. வை மட்டு மன்றிக் காட், தட்டைமீன்கள் ஆகியவை அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன. லிவர்பூலுக்கு வடக்கே 60 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் பிளிட்புட் இங்கிலாந்து மீன்பிடி துறைமுகங்களில் முதன்மை யானது. மேலும் டப்ளினுக்கு அருகில் உள்ள லாவோகேர் கவுத் துறைமுகங்கள் அயர்லாந்தின் மீன்பிடித் துறைமுகங்களில் முக்கியமானவை. இவை மட்டுமல்லாமல் எண்ணற்ற சிறு மீன்பிடி துறைமுகங் களும் உள்ளன. டன் ம.அ. மோகன்