ஐன்ஸ்டைன், ஆல்பர்ட் (1879-1955) 511
இவர் மியூனிச் பள்ளிகளில் கற்கவும் இல்லை. இருப்பினும் கணிதத்திலும், இயற்பியலிலும் சிறந்த முறையில் தேர்வு பெற்றிருந்தார். இவரது கணித அறிவைக் கண்டு வியந்த தொழிற்கல்விக்கூட இயக்கு நர் இவர் நுழைவுத் தகுதி பெறுவதற்காக ஓராண்டு சுவிட்சர்லாந்து பள்ளியொன்றில் பயிற்சி பெற உதவினார். ஐன்ஸ்டைன் தம் வாழ்விலேயே பள்ளி வாழ்க்கை சுவையாக இருப்பதை அங்குதான் முதன் முதலாக உணர்ந்தார்.அங்கு நெட்டுருப்போட்டு ஒப்பு விக்கும் தொல்லை இல்லை. மாணவர்கள் தாங்களே சிந்திக்க வேண்டும் க என் எதிர்பார்க்கப்பட்டனர். ஆசிரியர்களும் மாணவருடன் கலந்து பல்வேறு பாடங்கள் பற்றி உரையாடுவதை விரும்பி வரவேற்ற னர். ஐன்ஸ்டைன் படிப்பை முடித்துக் கொண்டு சூரிச் தொழில் நுட்பக் கல்விக் கூடத்தில் சேர்ந்தார். கல்லூரியில் படிப்பை நன்கு முடித்து வெற்றியுடன் வெளிவந்தார். பட்டம் பெற்ற பின்னர் சில காலம் எந்த வகை யான வேலையும், பணி முன் பயிற்சியும் கிடைக்கா மல் இருந்தார். இரண்டாண்டுக்காலம் பல்வேறு பள்ளிகளில் பாடம் சொல்லும் ஆசிரியராகப் பணி யாற்றி இறுதியில் பெர்ன் நகரில் உள்ள பதிவுரிமை அலுவலகத்தில் (patent office) ஒரு தொழில் நுட்ப வல்லுநகராகச் சேர்ந்தார். ஐன்ஸ்டைன் அயராது உழைப்பவர். தம் பணி யிடையே முனைவர் பட்டம் (Ph D: Degree) பெறுவ தற்கான தகுதிகளைத் தேடிக் கொள்ளவும் அவருக்கு ஓய்வு நேரம் இருந்தது. பதிவுரிமை அலுவலகத்தில் இருந்த ஏழாண்டுக் காலத்தில் சிறந்த பல கட்டுரை களை எழுதி வெளியிட்டார். 1905 ஆம் ஆண்டில் மட்டும் நான்கு கட்டுரைகளை எழுதி முடித்தார். அவற்றுள் ஒவ்வொன்றும் அவருக்குப் புகழ் சேர்க்கப் போதுமானதாக இருந்தும் ஒரு கட்டுரை மட்டும் இவர்தம் சிறப்புச் சார்புக் கொள்கை (special theory of relativity) பற்றியதாக இருந்தது. மற்றொரு கட்டுரை கதிர்வீச்சு சிறுசிறு தொகுதி முடிச்சுகளாக, குவாண்ட்டம்களாகப் பாய்ந்து செல்கின்றது என முடிவு செய்தது. இந்தக் கட்டுரை ஒளி மின் விளை வுக்கு (photoelectric effect) விளக்கம் தந்தது. இதற் காகவே 1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டைனுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டுரை பிரவுணியன் இயக்கமானது அசையாமல் இருக்க வேண்டிய, ஒரு நீர்மத்துள் காணும், சிறு துகள்கள் அங்கும் இங்குமாகச் சிதறியோடியாடுவது மூலக் கூறுகள் உள்ளன என்று நிறுவுவதற்கு நேரான சான்றாகும் எனக் காட்டியது. நான்காம் கட்டுரை பொருண்மை (mass), ஆற்றல் (energy) ஆகியவற்றிற் கிடையே உள்ள சமன்பாட்டை விளக்கியது. இத்த கைய கட்டுரைகளால் ஐன்ஸ்டைன் உலகப் புகழ் பெற்று இருந்தாலும் 1911 ஆம் ஆண்டுவரை இவருக்குக் கல்வித் துறையில் ஏற்றதொரு பணி கிட்ட ஐன்ஸ்டைன், ஆல்பர்ட் (1879-1955) 511 வில்லை. இதற்கிடையில் 1907. ஆம் 1907. ஆம் ஆண்டில் தாழ்ந்த வெப்பநிலையில் காணும் வெப்பக் கொள் ளளவு மாற்ற நிகழ்விற்குக் குவாண்ட்டம் கொள் கையின் அடிப்படையில் விளக்கம் தந்தார். 1916 இல் பொதுச் சார்புக் கொள்கை (general theory of rela- tivity) பற்றிய கட்டுரையினை வெளியிட்டார். 1913 இல் பெர்லினில் உள்ள கெய்சர் வில்ஃகெம் கழகத்தில் ஓர் ஆய்வாளராகப் பதவி ஏற்றார். இக்காலத்தில் இவர் சிறப்புமிக்க பல கட்டுரைகளை எழுதி வெளி யிட்டார். ต . வெளிநாடுகளில் சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டி அழைப்புகள் ஐன்ஸ்டைனுக்கு வந்தன. 1933 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நேரத்தில் அவர் அமெரிக்க நாட்டில் இருந்தார். ஐன்ஸ்டைன் யூதராக இருந்ததாலும், ஜெர்மனியின் நாசிக் கட்சியினரை வெளிப்படையாக எதிர்த்துப் பேசுபவராக இருந்த தாலும் அவர்தம் உடைமைகள் பறிக்கப்பட்டதோடு ஜெர்மன் நாட்டில் குடியிருக்கும் உரிமையையும் அவர் இழந்தார். பின் நியூசெர்சி மாநிலத்தில், பிரிண்ஸ்ட் டனில் உள்ள உயர் ஆய்வுக்கூடத்தில் ஒரு பணி யினை . ஏற்று அமெரிக்கக் குடிமகன் ஆனார். ஜெர்மனிக்கு எதிராக நிகழ்ந்த போரை முற்றிலும் ஆதிரித்துத் தம்மால் இயன்ற அனைத்தையும் ஐன்ஸ் டைன் செய்தார். அமெரிக்க நாட்டுத் தலைவராக இருந்த ரூஸ்வெல்ட்டுக்கு அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக அமெரிக்கா மேற்கொண் டாக வேண்டும் என்று 1939 ஆம் ஆண்டில் கருத் துக் கூறியதோடு, ஜெர்மானியர்கள் அணு ஆற்றல் பற்றி ஆய்வு மேற்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்கள் முந்திக்கொள்ளலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.ஆறு ஆண்டுகள் கழித்து, 1945ஆம் ஆண்டு 6 ஆம் நாள் ஜப்பான் நாட்டு ஹீரோஷிமா நகரில் பொருண்மையை ஆற்றலாக மாற்ற முடியும் என்னும் ஐன்ஸ்டைனின் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த அணுகுண்டு ஒன்று வீசப்பட்டு வெடித்தது. 60 ஆயிரம் மக்கள் வீடிழந்தனர். ஏறத்தாழ 600 கட்டடப்பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் சிதைந் தன. சில நாள்களுக்குப் பின்னர் இதே வகையான ஓர் அணுகுண்டு நாகசாகி என்னும் நகர் மீதும் வீசப் பட்டது. ஜப்பான் அரசு அடிபணிந்தது. இரண்டாம் உலகப் பெரும் போர் முடிந்தது. அணுகுண்டு வெடிப்பு பற்றி ஐன்ஸ்டைன் பெரிதும் வருந்தினார். அணுகுண்டு ஆற்றல் பற்றிய உண்மையை அறிவித்து ஜப்பான் அரசைப் பணிய வைக்க முடியும் என்றே அவர் நம்பினார். ஆனால் அணு குண்டு ஜப்பான் மக்கள் மீது வீசப்படும் என ஐன்ஸ்டைன் நினைத் தும் பார்க்கவில்லை. போர் முடிவுற்ற பின்னர் அணு வாற்றலைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவது பற்றி அனைத்து நாட்டு உடன்பாடு காண்பதில் பெரிதும் முன்னின்று உழைத்து வழி காட்டினார். ஐன்ஸ்டைன் தம் பிற்கால வாழ்க்கையில் பேரண்டங்களில் செயல்படும் அனைத்து விசை