பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 ஐன்ஸ்டைன்‌, ஆல்பர்ட்‌ (1879-1955)

512 ஐன்ஸ்டைன், ஆல்பர்ட் (1879-1955) களுக்கும் விளக்கம் தரும் வகையில் ஒருங்கிணைந்த ஒரு கோட்பாட்டினை (unified field theory) உரு வாக்குவதில் முனைந்தார். இவ்விசைகள் அணுக் களுள்ளும், அணுக்களிடையேயும் செயல்படும் விசைகளிலிருந்து சூரியக் குடும்பக் கோள்களையும், அண்டங்களிலுள்ள விண்மீன்களையும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் ஈர்ப்புவிசை (gravitation ) வரை அடங்கும். அம்முயற்சியில் ஐன்ஸ்டைன் எந்த அளவிற்கு வெற்றி கண்டுள்ளார் என எதிர்வில் தான் மதிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆனால் அவர் பணி யால் எழுந்த சிக்கல் நிறைந்த பல புதிய புதிர்கள் இக்கால அறிவியலிலும், அண்டவியலிலும் புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளன. 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் பிரின்ஸ்ட்டனில் ஐன்ஸ் டைன் காலமானார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவிய லார் கொள்கையளவில் பல பெரும் சிக்கல்களை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருந்தது. வெளி, காலம், இயக்கம் பற்றி 17 ஆம் நூற்றாண்டில் ஐசக் நியூட்டனால் உருவாக்கப்பட்டு இயற்பியலில் உச்சிமேற்கொண்டு பாராட்டப்பட்டு வந்த கோட் பாடுகள் அண்மைக் காலங்களில் வெறும் செய்தி களுக்கு விளக்கம் தருவனவாக இல்லை. நியூட்டனின் பேரண்டம், வெளி, காலம் என்ற நிலையான சட்டங் களிடை அகப்பட்ட ஒன்றாக இருந்தது. பொருள் ஒன்றின் இயக்கத்தை வேறு ஒரு பொருளோடு ஒப் பிட்டுக் காணவேண்டிய தேவையின்றி, வெளி, கால மாகிய சார்பற்ற இந்த நிலையான சட்டத்தை அடி யாகக் கொண்டு மதிப்பிட்டுக் காண முடியும் என்று கருதப்பட்டது. ஒளியானது குறிப்பிட்டதொரு திசை வேகத்தில் செல்லும் மின்காந்த அவை என்று கண்டு தெளிந்த பின்னர் வெற்று வெளியில் அது எவ்வாறு பாய்ந்து செல்கிறது என்பதற்கு அறிவியலார் விளக்கம் தர முயன்றார்கள். வெளி முழுதும் ஈத்தர் என்ற ஓர் ஊடகம் நிறைந்திருப்பதாகவும், அதுவே அலை களைச் சுமந்து செல்கின்றது என்றும் கருத்தளவில் ஒரு கொள்கையை முன் வைத்தனர். இந்தக் கொள் கையின் அடிப்படையில் எதிர் பார்க்கப்படும் விளைவு களுள் ஒளியின், உணரப்படும் வேகமானது ஈத்தர் ஓட்டத்தோடு அல்லது ஈத்தர் ஓட்டத்தை எதிர்த்துச் செல்வதற்கேற்ப மாறுபட்டாக வேண்டும் என்பதும் அடங்கும். இருந்தாலும் ஏ.ஏ. மிக்கல்சன் (AA Michelson), எட்வர்டு டபிள்யூ மார்லி (Edward W. Morely) என்னும் இரு அமெரிக்க அறிவியலார்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் அத்தகைய வேறுபாடு எதையும் காண முடியவில்லை. ஒளியின் வேகம் நியூட்டனது விதியினைப் பின்பற்றவில்லை. இவ் வுண்மையும் மற்றும் சில சிக்கல்களும் அறிவியல் உலகத்தைப் பெருங்குழப்பத்தில் வைத்திருந்தன. மிக்கல்சன் கண்ட முடிவை அடிப்படையாகக் கொண்டு பழைய அறிவியலின் அடிப்படையையே . மாற்றி அமைக்கும் வகையில் சில கொள்கைகளை மேற்கொண்டு குழப்பங்களுக்கு எல்லாம் ஐன்ஸ்டைன் விடை கண்டு கூறினார். நிலையான ஒரு பேரண்டத் தில் சார்பற்ற இயக்கம் (absolute motion) என்பது பொருளின் எதுவும் இல்லை, மாறாக எந்த ஒரு இயக்கத்தையும் மற்ற பொருள்களின் இயக்கங் களோடு ஒப்பிட்டே கூற முடியும். ஒளியின் திசை வேகம் (velocity). மட்டும் சார்பிலாத் தன்மை வாய்ந்தது. அது காண்போரின் சார்பியக்கம் எத் தகையதாக இருந்தாலும் மாறுவது இல்லை. காலம் என்பதும் சார்புத் தன்மையதே. காண்போரின் சார்பு வேகமாகவோ, இயக்கத்திற்கேற்பக் கடிகாரங்கள் மெதுவாகவோ ஓடுகின்றன. பேரண்டத்து இயற்கை பற்றிய நம் அறிவில் ஏற்பட்ட இம்மாற்றங்கள் மிகவும் அடிப்படையானவை. ஐன்ஸ்டைன் ஒரு பொருளின் பொருண்மை அதன் திசைவேகத்தைச் சார்ந்ததுள்ளது என்றும் கண்டார். விரைவாக ஒரு பொருள் நகர்ந்தால் அதன் பொருண்மையும் அதிக மாகிறது. ஒளியின் வேகமே உயர் எல்லை வேகமும் ஆகும். இதிலிருந்து பொருளும் ஆற்றலும் (matter & energy) சம மதிப்புடையன என்று முடிவு செய்யும் ஒரு நிலை ஏற்பட்டது. அவரது புகழ் வாய்ந்த, E = mc" என்னும் சமன்பாடு ஆற்றலின் அளவானது பொருளின் பொருண்மையினை ஒளியின் வேகத்தின் இருமடியால் பெருக்கி வரும் தொகைக்குச் சமம் எனப் பேசுகிறது. இந்தக் கொள்கையின் அடிப்படை யில்தான் அணுகுண்டு உருவாக்கப்பட்டது. முன்ன ரெல்லாம் மின்காந்தக் கதிர்வீச்சு ஈத்தர் ஊடகத்தில் ஏற்படும் ஓர் அதிர்வி (disturbance) என்று கருதப் பட்டது. இப்பொழுது அது பொருள்போன்ற ஓர் இயற்பியல் உண்மையினைக் கொண்டுள்ளது எனக் கருதப்படுகிறது. 1900 ஆம் ஆண்டில் மாக்சு பிளாங்கு (Max plank) என்னும் அறிவியலாரால் உருவாக்சுப்பட்ட குவாண்ட்டம் கோட்பாட்டின் (quantum theory) வளர்ச்சிக்கு ஆக்கம் தரும் வகை யில் சில அடிப்படை உண்மைகளைக் கண்டு வெளி யிட்டார். இக்கால அறிவியலுக்கு மிகவும் அடிப்: படையாக உள்ள குவாண்டம் கோட்பாட்டுக் கதிர் வீச்சு. தொடர் நிகழ்வாக இல்லாமல் சிறு சிறு முடிச்சுகளாக (குவாண்ட்டா) அதேசமயத்தில் அலைத்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் ஆற்றல் உமிழவோ, உறிஞ்சவோ படுகின்றது எனப் பேசுகிறது. இந்தக் கோட்பாடு 'இயற்பியலில் ஏற் பட்டுள்ள பல சிக்கல் நிறைந்த புதிர்களை விடுவிக்க உதவுவதை ஐன்ஸ்டைன் அறிவியலாருக்கு எடுத்துக் காட்டிக் குவாண்டம் கோட்பாட்டினைப் பொதுவாக ஏற்கச் செய்தார். மேலும் அறிவியல் வளர்ச்சிக்கான ஐன்ஸ்டைனின் கட்டுரைகளில் தூண்டப்பட்ட கதிர் வீச்சு (induced radiation) என்பது சிறப்பிடம் பெறுவ தாகும். இந்தச் செயல் முறை லேசர்கள் என்னும் கருவியமைப்பைக் காண்பதில் பயன்படுத்தப்படுகிறது. சு.மகாதேவன்