பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 ஐசோயேசி

514 ஐசோயேசி கண்டெடுக்கப்பட்டுள்ளன். ஆகும். ஜுராசியக்காலம் கிரிட்டேசியக்காலம் வரையி லான தொல்லுயிரூழிக் காலத்தைக் (19 கோடி முதல் 6 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்) சார்ந்த ஐனோசெராமஸ் புதை படிவங்கள் கிரிட்டேசியக் காலப் பாறைகளில் கண்டெடுக்கப்பட்ட ஐனோசெராமஸ் படிவம் நல்ல ஓட்டினைக் கொண்டுள்ளது. பெரிதாக வும், உறுதியானதாகவும் காணப்படும் இம்மட்டியின் ஓடு பல வரிப்பள்ளங்களைக் கொண்டுள்ளது. இதனால் இப்பேரினத்தை அடையாளங்காண்பது எளிதாகின்றது. ஓட்டின் மேற்பகுதியில் காணப்படும் சிறு பள்ளங்கள், ஒடு மூடுவதற்கு உதவும் படலங்கள் பொருந்தியுள்ள பள்ளங்களாகும். ஐசோயேசி ம.அ. மோகன் இந்தத் தாவரக் குடும்பம், இரு வித்திலைத் துணைப் பிரிவைச் சேர்ந்ததாகும். ஐசோயேசி (Aizpaceae) என்ற பெயர் எங்க்ளர் ப்ரேண்டல் என்ற ஜெர்மானிய வகைப்பாட்டியலரால் சூட்டப்பட்டதாகும். தலை சிறந்த வகைப்பாட்டியலார் எனப்படும் பெந்தம், ஹுக்கர் என்போர் முதலில் இக்குடும்பத்திற்கு ஃபைகாய்டி (Ficoideae) என்று பெயரிட்டனர். படி மலர்ச்சி வகைப்பாட்டில் இக்குடும்பத்தின் நிலை பற்றிப் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் வகைப் பாட்டில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஐசோயோசி குடும்பத்தில் 130 இனங்களும் 1200 சிற்றினங்களும் உண்டு. பொதுவாக இக்குடும்பச் செடிகள் ஈரப்பசையற்ற வெப்பச் சூழ்நிலையை நாடி வளரும். பெரும்பாலும் குட்டையான செடிகளாகவே இருக்கும். இலைகள் தனித்தவை, மாற்றிலை அல்லது எதிரிலையடுக்கு அமைப்புடையவை. சில இனங் களில் சுற்று அமைப்புக் காணப்படும். இலையடிச் செதில்களற்றவை. இலைப்பரப்பு (blade) பொது வாகச் சதைப்பற்றாகக் காணப்படும். இலையினுள் நீர்ச் சேமிப்புத் திசுக்கள், ஒளிச்சேர்க்கைத் திசுக்களுக் கிடையே அமைந்திருக்கும். மீசம்ப்ராந்திமம் (Mesem bryanthemum) என்று கூறப்படும் செடியின் இலை யமைப்பு, பல சிறப்புப் பண்புகளைக் கொண்ட தாகும். பெருவாரியான சிற்றினங்களின் இலைப்புறத் தோலில் மெழுகுப் படலத்துடன் தூவிகளும் காணப் படுவதுண்டு. தென் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா, கலிபோர்னியா, ஆப்பிரிக்க கேப் மாநிலத்தின் மணற் பாங்கான பகுதிகளில் காணப்படும். மீ. க்ரிஸ்டெல்லை னம் (M. Crystallinum) என்ற சிற்றினத்தைப் பனிச் செடி என்பர். இதற்குக் காரணம் இதன் இலைகளின் புறத்தோலில் நீர் தேங்கக் கூடிய பை போன்ற தூவி காணப்படுவதேயாகும். பார்வைக்குப் கள் படிகங்கள் போல் இருக்கும். அவை உள்ளமைப்பு. சில இனத்தண்டுகளின் வாஸ்குலார் திசுக்களில் காணப்படும் ஆக்கத்திசு நிலையற்றது. அவற்றின் செயல் நின்றவுடன் புதிய கேம்பியம், வெளியே வாஸ்குலார் பழைய வளையத்திற்கு தோன்றிச் செயல்படும். இவ்வாறு பல வாஸ்குலார் வளையங்கள் இயல்பற்ற முறையில் உண்டாக்கப்படு கின்றன. மஞ்சரி. மீசம்ப்ராந்திமச் சிற்றினங்களில் நுனி மஞ்சரியாகவும் டெட்ரகோனியா (Tetragonia) என்ற இனத்தில் இலைக்கோண வகையாகவுமிருக்கும். மலர்கள் சிறிய கொத்தாக இருபக்க (dichasial) அல்லது ஒருபக்க (monochasial) அரிதாகப் பலபக்கச் (polychasial) சைம் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கும். மலர், பொதுவாக இருபால் ஒழுங்கு மலர்கள்; மலரின் உறுப்பு அமைப்பில் வேறுபாடுகள் காணப்பட் டாலும் அது ஓர் எளிமையான அடிப்படை அமைப்பின் மாறுபாடேயாகும். மிகவும் எளிய ட்ரயான்திமா வகையான 1. கிளையின்பகுதி 2. மலர் 3. கனி 4. கனிவெட்டுத் தோற்றம்.