பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐசோயேசி 515

செசுவியம் மலரில் 3 வட்டங்களே காணப்படும். அவை பூ இதழ் வட்டம், மகரந்தத்தாள் வட்டம், கார்பெல்கள் வட்டம் என்பன. புல்லிவட்டம். புல்லிக்குழல் சூலகத்திலிருந்து தனித்தும் 4 அல்லது 5 ஆகப் பிளவுபட்டும் இருக்கும். உட்புறம் வண்ணத்தோடு காணப்படும். சிவ அல்லிவட்டம்: பொதுவாகக் காணப்படுவதில்லை. இனங்களில் உண்டு. எ.கா: ட்ரயான்திமா (Trianthema) மகரந்தத்தாள் வட்டம். மகரந்தத்தாள்களின் எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுகிறது. 3 முதல் எண்ணிக்கையற்றநிலை வரையுண்டு. மொல்லுகோ வெர்டிசிலேடா (Mollugo verticillata) என்ற இனத்தில் 3 மகரந்தத்தாள்களும், சிப்சீலியா என்ற இனத்தில் ஒரு மகரந்தத்தாளுமே காணப்படும். கலினியா என்ற இனத்தில் மகரந்தத்தாள்கள் இணையாகக் காணப்படும். பெரும்பாலான மலர் களில் இரட்டிப்படைதல் (redoublement ) என்ற பண்பு மிகவும் இயல்பாகக் காணப்படுகிறது. 5 மகரந்தத்தாள்கள் கருநிலையிலேயே பிளவுபட்டு எண்ணிலடங்காத் தாள்களாகக் காணப்படுகின்றன. மீசம்ப்ராந்திமம் வண்ண வெளிச்சுற்றுகளிலுள்ள மகரந்தத்தாள்கள் மலடாகி, இதழ்போன்று உருமாறி விடுவதுமுண்டு. ஐசோயேசி 515 மகரந்தத்தாள்கள் அல்லது உரு மாறிய மலட்டு மகரந்தத்தாள்கள் புல்லிவட்டத்தின் கழுத்துப் பகுதியில் இணைந்திருக்கும். சில மலர்களில் அவை கற்றையாகப் புல்லிகளுக்கு எதிரில் அமைந் திருக்கும். எ.கா. ஐசூன் (Aizoon) மகரந்தக்காம்புகள் மெல்லிதாக மயிர்போல் நீண்டிருக்கும். சூலகம். 3அல்லது பொதுவாக 5கார்பெல்கள் கொண்டு இணைந்தவை. கைசீகியா என்ற இனத் தில் இணையாமல் தனித்திருக்கும். பொதுவாக மேல் மட்டச் சூல்பை. ஆனால் மீசம்ப்ராந்திமம் டீலோஸ் பெர்மா என்ற இனங்களில் கீழ்மட்டச்சூல்பை காணப் படும். சூலறைகள் சூலிலைகளின் எண்ணிக்கைக்கு ஒத்திருக்கும். சூல் தண்டுகள் 4 அல்லது 5 தனித்தவை. மயிர்போல் மெல்லியவாக நீண்டிருக்கும். சூல்கள் பல பொதுவாக அச்சொட்டுமுறை. மீசம்ப்ராந்திமம் இனத்தில் சூலொட்டுச்சமற்ற திசு வளர்ச்சியின் காரணமாகத் தொடக்கத்தில் அச்சொட்டு (axile) முறையிலும், கீழ் ஒட்டுமுறையிலும் (basal) மாறி இறுதியில் சுவர் ஒட்டு (parietal) முறையாக முடி வதைக் காணலாம். கனி. உலர்வெடி கனி காப்சூல் வகையைச் சேர்ந்தது. மீசம்ப்ராந்திமம் கனிகள் வால்வு காப் சூல்கள் ஆகும். மேலும் அவை ஈரப்பசை நாட்டம் கொண்டவையாகும். ஈரச்சூழ்நிலையில் வால்வுகள் 0 5 மீசம்ப்ராந்திமம் 1. மலரோடு கூடிய கிளை 8. காய் மூடிய நிலை.. காய் ஈரப்படுத்திய நிலை விதை வெட்டுத் தோற்றம், 5. சூவகம். அ.க. 6-33து