பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எஃபிமெராப்டிரா

30 எஃபிமெராப்டிாா கொள்ளும். அடுத்துக் காணப்படும் உணவுக்குழாய் சுற்றுத் தசைகளால் மிகவும் குறுகியுள்ளது. அடுத்துள்ள நடுக்குடல் பகுதி, சுரப்பிகளற்ற, தசை களற்ற மெல்லிய சுவருடையது. இது உள்வரும் காற்றினால் பெருத்துக் காற்றறையாக மாறிக் காற்றில் பூச்சி மிதக்க உதவும். நடுக்குடல் பகுதிக்குச் செல்லும் காற்றின் அளவை உணவுக்குழாய்த் தசைகள் கட்டுப்படுத்தும். மலக்குடலின் முன்பகுதி சிக்கலான வால்வாக மாறிக் காற்றறையில் உள்ள காற்று வெளியேறாத வண்ணம் குடலை அடைத்துக் கொள்ளும். நன்கு வளர்ச்சியடைந்த மால்பீஜியன் நுண் குழாய்கள் 40 முதல் 100 வரை உள்ளன. நரம்பு மண்டலம் பதினோரு நரம்புச் செல் திரள்களைக் கொண்டுள்ளது. மூச்சுமண்டலம் சிறப்பாக அமைந் துள்ளது. இரண்டு மார்புக் கண்ட சுவாசத் துளை களும் எட்டு வயிற்றுக் கண்ட சுவாசத்துளைகளும் உள்ளன. நீண்ட ஒன்பது அறைகளைக் கொண்ட இதயம் உள்ளது. இனப்பெருக்க மண்டலம் சிறப்பாக அமைந்துள்ளது. ஆண், பெண் ஆகிய இருபால் உயிரிகள் காணப்படுகின்றன. னச் செல் உறுப்பு களும் அவற்றின் நாளங்களுமே உள்ளன. ஏனைய துணை உறுப்புகளும், சுரப்பிகளும் இல்லை; பெண் உயிரிகளில் இரண்டு சினையகங்களும், இரண்டு சினையணு நாளங்களும் காணப்படுகின்றன. ஆண் உயிரிகளில் நீண்ட பை போன்ற விந்தகங்களும் உள்ளன. விந்து நாளங்களும் உள்ளன. இணையாக அமைந்த கலவியுறுப்புகள் காணப்படுகின்றன. ஆண் உயிரிகளில் 9 ஆம் கண்டத்தில் கிடுக்கிபோன்ற ஓர் இணைக் கலவி நீட்சிகள் உள்ளன. சில முழு வளர்ச்சியடைந்த நிறையுயிரிகள் ஒரு மணி நேரமே உயிருடன் இருக்கும். இவற்றால் உணவு உட்கொள்ள முடிவதில்லை. இவை காற்றை மட்டுமே உள்ளிழுத்துக் கொள்பவை. லார்வா நிலை யிலிருந்து நிறையுயிரிப் பூச்சியாக மாறியவுடன் வை உயரப் பறக்கின்றன. இந்தக் கலவிப் பயணத் தின் (nuptial flight) போது ஆண், பெண் பூச்சிகள் ணைகூடுகின்றன. இனச்சேர்க்கை நொடிப் பொழு தில் நடைபெற்றுவிடும். கலவி நடைபெற்ற சிலமணி நேரங்களில் பெண் உயிரி முட்டையிடத் தொடங்கு கிறது. ஒரு பெண்பூச்சி ஏறத்தாழ 5000 முட்டைகள் இடுகிறது. முட்டைகளின் நிறம், உருவம், அளவு ஆகியவை னத்திற்கு இனம் பெரிதும் மாறுபடு கின்றன. பெண் பூச்சிகள் நீர் நிலைகளில் தாழ்வாகப் பறந்து சென்று நீரின் மேற்பரப்பில் முட்டையிடுகின் றன. சில எபிமெராப்டிராப் பூச்சிகளில் முட்டைகள் தாயின் உட லினுள் பொரிக்கப்பட்டு, வேற்றிளரி களாக நீரின் மேல் இடப்படுகின்றன. இளவுயிரிகளில் மலப்புழைக் காம்புகள் உள்ளன. இக்காம்புகள் நீண்டு வளர்ந்து, பல கண்டங்கள் பெற்றுள்ளன. இவை இணை இணையாகக் (paired) காணப்படும்.உடலின் இறுதியில் நீண்ட வாலிழைகள் காணப்படும். இந்த வாலிழைகளும், நீண்ட காம்பு களும் வேற்றிளரி நீந்தும்போது திசை திரும்பப் பயன்படுகின்றன. இவற்றிக்கு நடக்க உதவும் கால் கள் உள்ளன. இக்கால்கள் மண்ணில் குழி தோண்ட வும், பொருள்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளவும் உதவுகின்றன. வாயுறுப்புகள் கடித்து மெல்லும் வகையைச் சார்ந்தவை. லார்வாக்களுக்குப் பெரிய கூட்டுக் கண்கள் உள்ளன. செரிமான மண்டலம் ஒரு நீண்ட குழாய்போல உள்ளது. எண்ணற்ற மால்பீ ஜியன் நுண்குழாய்கள் உணவுப் பாதையுடன் இணைந்துள்ளன. இவற்றின் வேற்றிளரிகள் ஏறத்தாழ 23 முறை தோலுரிக்கின்றன. அதாவது 23 இளவளர் நிலை களில் (instar) வளர்ச்சி நடைபெறுகிறது. இளவுயிரிப் பருவம் ஓராண்டு முதல் இரண்டாண்டுக் காலம் வரை நீடிக்கிறது. இறுதியில், சிறிய இணையுறுப்பு களும், தெளிவற்ற இறக்கைகளும் கொண்ட ஒரு முற்றுப்பெறாத (Sub imago) உயிரி தோன்றுகின்றது. இந்த முற்றுப்பெறாஉயிரி நீரின் மேற்பரப்பிற்கு வந்து பின் மீண்டும் ஒருமுறை தோலுரிக்கும் நிறை யுயிரிப் பூச்சியாக மாறிப் பறக்கும். மாலைப் பொழுதில் வெளிவரும் நிறையுயிரிப் பூச்சிகள், காற்றை உட்கொண்டு, உயரப் பறந்து கலவிப் பயணம் சென்று இணைகூடிப் பொழுது புலர்வதற்குள் ஆண்கள் மட்டும் இறந்து போகின்றன.